துபாயில் மு.க.ஸ்டாலின் பயன்படுத்தும் சொகுசு காரின் விலை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா 'ஸ்டண்' ஆயிருவீங்க!

துபாயில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்தும் பிஎம்டபிள்யூ சொகுசு கார் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

துபாயில் மு.க.ஸ்டாலின் பயன்படுத்தும் சொகுசு காரின் விலை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா 'ஸ்டண்' ஆயிருவீங்க!

தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், துபாய் சென்றிருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். தமிழகத்திற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த சூழலில், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்துவதற்காக சொகுசு கார் ஒன்று அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

துபாயில் மு.க.ஸ்டாலின் பயன்படுத்தும் சொகுசு காரின் விலை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா 'ஸ்டண்' ஆயிருவீங்க!

துபாய் அரசு நிர்வாகம் சார்பில், தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த சொகுசு கார் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருப்பது பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் (BMW 7-Series) கார் ஆகும். இது எந்த வருட மாடல்? என்பது உறுதியாக தெரியவில்லை.

துபாயில் மு.க.ஸ்டாலின் பயன்படுத்தும் சொகுசு காரின் விலை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா 'ஸ்டண்' ஆயிருவீங்க!

அனேகமாக 2019ம் வருட மாடலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை உயர்ந்த கார்களில் ஒன்றாக பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் திகழ்கிறது. பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காரின் ஆரம்ப விலையே 1.41 கோடி ரூபாய் ஆகும். அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 2.46 கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

துபாயில் மு.க.ஸ்டாலின் பயன்படுத்தும் சொகுசு காரின் விலை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா 'ஸ்டண்' ஆயிருவீங்க!

இவை புது டெல்லி எக்ஸ் ஷோரூம் விலை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஆன் ரோடு விலை இன்னும் கூடுதலாக வரும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரில், 3.0 லிட்டர் டீசல், 3.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 6.5 லிட்டர் பெட்ரோல் என மொத்தம் 3 இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

துபாயில் மு.க.ஸ்டாலின் பயன்படுத்தும் சொகுசு காரின் விலை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா 'ஸ்டண்' ஆயிருவீங்க!

இதில், 3.0 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 4,000 ஆர்பிஎம்மில் 261.49 பிஹெச்பி பவரையும், 2,000-2,500 ஆர்பிஎம்மில் 620 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே நேரத்தில் 3.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 5,400-6,500 ஆர்பிஎம்மில் 335.25 பிஹெச்பி பவரையும், 1,500-2,000 ஆர்பிஎம்மில் 450 என்எம் டார்க் திறனையும் வழங்க கூடியது.

துபாயில் மு.க.ஸ்டாலின் பயன்படுத்தும் சொகுசு காரின் விலை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா 'ஸ்டண்' ஆயிருவீங்க!

அதே சமயம் 6.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 5,400-6,500 ஆர்பிஎம்மில் 600.7 பிஹெச்பி பவரையும், 1,550-5,000 ஆர்பிஎம்மில் 850 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. கேஷ்மெர் சில்வர், க்ளாசியர் சில்வர், பிர்லியண்ட் ஒயிட் மெட்டாலிக், அசுரைட் ப்ளாக் மெட்டாலிக், ட்ராவிட் க்ரே மெட்டாலிக், தான்சானைட் ப்ளூ, ப்ளாக், ப்ளாக் ஷாப்பயர் உள்பட பல்வேறு வண்ணங்களில் இந்த கார் கிடைக்கிறது.

துபாயில் மு.க.ஸ்டாலின் பயன்படுத்தும் சொகுசு காரின் விலை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா 'ஸ்டண்' ஆயிருவீங்க!

பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் காரானது, சொகுசு செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய பணக்காரர்கள் பலரிடம் பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் கார் இருக்கிறது. இதில் முகேஷ் அம்பானியும் ஒருவர். முகேஷ் அம்பானி சொந்தமாக வைத்திருக்கும் விலை உயர்ந்த கார்களில், பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் மிகவும் முக்கியமான கார்களில் ஒன்றாகும்.

துபாயில் மு.க.ஸ்டாலின் பயன்படுத்தும் சொகுசு காரின் விலை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா 'ஸ்டண்' ஆயிருவீங்க!

நடிகை சமந்தாவிடமும் கூட பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் கார் இருக்கிறது. இதுதவிர பாலிவுட் நடிகை அலியா பட், கஜோல், சன்னி லியோன், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், சஞ்சய் தத், சயிஃப் அலி கான், அனில் கபூர் மற்றும் டோலிவுட் நடிகர் நாகார்ஜூனா போன்ற பிரபலங்களும் பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் சொகுசு செடான் காரை வைத்துள்ளனர்.

துபாயில் மு.க.ஸ்டாலின் பயன்படுத்தும் சொகுசு காரின் விலை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா 'ஸ்டண்' ஆயிருவீங்க!

இதுதவிர கிரிக்கெட் வீரர்கள் பலரிடம் கூட பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் கார் உள்ளது. இதில், மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் மிகவும் முக்கியமானவர். சச்சின் டெண்டுல்கரிடம் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஏராளமான கார்கள் இருக்கின்றன. இதில், பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் சொகுசு செடான் காரும் ஒன்றாகும். சச்சின் டெண்டுல்கருடன் பல்வேறு போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கிய ஒருவரிடமும் இந்த கார் உள்ளது.

துபாயில் மு.க.ஸ்டாலின் பயன்படுத்தும் சொகுசு காரின் விலை இதுதான்... எவ்ளோனு தெரிஞ்சா 'ஸ்டண்' ஆயிருவீங்க!

ஆம், வீரேந்திர சேவாக்தான் அந்த மற்றொருவர். இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூட பிஎம்டபிள்யூ 7-சீரிஸ் சொகுசு செடான் காரை தனது அதிகாரப்பூர்வ வாகனமாக பயன்படுத்தி வந்தார் என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்படி பல்வேறு பிரபலங்கள் பயன்படுத்திய/பயன்படுத்தி வரும் ஒரு சொகுசு காரைதான் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்பாட்டிற்காக துபாய் அரசு நிர்வாகம் தற்போது வழங்கியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, March 25, 2022, 13:01 [IST]
English summary
Tamil nadu chief minister m k stalin using bmw 7 series luxury car in dubai
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+