தமிழகத்திற்கு 700 எலெக்ட்ரிக் பஸ்களை ஒதுக்கிய மத்திய அரசு! எந்தெந்த மாவட்டத்திற்கு எத்தனை பஸ்கள் தெரியுமா?
மத்திய அரசு பிஎம் இபஸ் சேவா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 700 எலெக்ட்ரிக் பஸ்களை அழிக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி சென்னை கோவை, மதுரை,திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த எலெக்ட்ரிக் பஸ்கள் செயல்பாட்டிற்கு வர உள்ளன. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
மத்திய அரசு இந்தியா முழுவதும் எலெக்ட்ரிக் பஸ்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஆகியவற்றின் கூட்டு ஒப்பந்தம் மூலம் இந்தியா முழுவதும் எலெக்ட்ரிக் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பிஎம் இபஸ் சேவா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் படி இந்தியா முழுவதும் முதற்கட்டமாக 10,000 எலெக்ட்ரிக் பஸ்களை டவுன் பஸ் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக மொத்தம் ரூபாய் 57,613 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ரூபாய் 20 ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கும் என்றும் பாக்கி உள்ள பணத்தை மாநில அரசுகள் வழங்க வேண்டும் எனவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த எலெக்ட்ரிக் பஸ்கள் 10 ஆண்டுகள் வரை இயக்கத்தில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 10,000 பஸ்கள் இந்தியாவில் யூனியன் பிரதேசங்கள் வடகிழக்கு மண்டலம் மலை பிரதேச மாநிலங்கள் உள்ளிட்ட பகுதிகள் சேர்த்து இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி எந்தெந்த நகரங்களில் எல்லாம் 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை இருக்கிறார்களோ அந்த நகரங்களுக்கு எல்லாம் முன்னுரிமை அடிப்படையில் இந்த எலெக்ட்ரிக் பஸ்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த 10,000 எலெக்ட்ரிக் பஸ்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 45,000 முதல் 50 ஆயிரம் நபர்களுக்கு வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளதாக அரசு கணக்கிட்டு இந்த செயல்முறையை அமல்படுத்தியுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு 700 பஸ்களை ஒதுக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த 200 பஸ்களும் தமிழகத்தின் சில முக்கியமான மாவட்டங்களில் பகிர்ந்து வழங்கப்பட்டு அங்கு தனது சேவையை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி கோவைக்கு 150 பஸ்களும் மதுரை, திருச்சி, திருப்பூர், சேலம், ஈரோடு, ஆகிய பகுதிகளுக்கு தலா 100 பஸ்களும் அம்பத்தூர், ஆவடி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், ஆகிய பகுதிகளுக்கு மொத்தமாக 50 பஸ்களும் என பிரித்து ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் படி மாநில அரசுகளை எலெக்ட்ரிக் பஸ்களை கொள்முதல் செய்து கொள்ளலாம். அதற்கான மத்திய அரசு பங்கை நேரடியாக வழங்கிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை மாநில அரசு கொள்முதல் செய்ய தேசியத்துள்ள எலெக்ட்ரிக் பஸ்களை தனியார் நிறுவனங்களால் இயக்கப்பட்டு பராமரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மற்றும் அரசு கூட்டு மாதிரி கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் இந்த நடைமுறை பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்சிற்க்கான ஓட்டுனர் மற்றும் பராமரிப்பு பணியாளர்கள் எல்லாம் தனியார் நிறுவனத்தால் வழங்கப்படுவார்கள் என்றும் இந்த பஸ்சின் நடத்துனர் மற்றும் டிக்கெட் கலெக்சன் எல்லாம் அரசாங்கத்தால் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக பஸ் சேவையை வழங்கும் நிறுவனத்திற்கு ஒரு கிலோமீட்டருக்கு இவ்வளவு என கட்டணம் நினைத்து அவர்களுக்கான பணத்தையும் அரசு தனியார் நிறுவனத்திற்கு வழங்கிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசு 2026 ஆம் ஆண்டு முதல் புதிய டீசல் பஸ் விலை வாங்குவதை நிறுத்தும் யோசனையில் இருப்பதாகவும், டீசல் பஸ்களை எல்லாம் எலெக்ட்ரிக் பஸ்களாக மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதாகவும் தெரிகிறது.
இதன் முதன் முயற்சியாக பிஎம் இபஸ் சேவா திட்டத்தின் கீழ் வாங்கப்படும் பஸ்கள் எவ்வாறு இயக்கப்படுகிறது என்பதை கண்காணித்த பிறகு மாநில அரசுகள் அடுத்தடுத்து எலெக்ட்ரிக் பஸ்கள் களம் இறக்க தயாராகும் என தெரிகிறது. இது மட்டுமல்லாமல் சென்னையில் இயங்குவதற்காக 100 எலெக்ட்ரிக் பஸ்களை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதன்படி ஜெர்மன் டெவலப்மெண்ட் பேங்க் மூலம் நிதியைப் பெற்று ஒவ்வொரு பஸ்சுக்கும் ரூபாய் 2 கோடி என்ற மதிப்பில் மின்சார பஸ்களை வாங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக நிதி நிறுவனத்திடம் இருந்து தடையில்லா சான்று பெறுவதற்காக காத்திருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டீசல் பஸ்களை புறக்கணித்துவிட்டு எலெக்ட்ரிக் பஸ்கள் பயன்படுத்துவது வாங்குவது என்பது மாசு கட்டுப்பாட்டிற்கு மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. இதில் மத்திய அரசின் இந்த திட்டமும் மாநில அரசின் முயற்சியும் சேர்ந்தால் இந்தியாவில் உள்ள டீசல் பஸ்களை எல்லாம் நீக்கிவிட்டு எலெக்ட்ரிக் பஸ்களாக மாற்ற முடியும். அதற்கான முயற்சியில் தற்போது தமிழக அரசு இறங்கியுள்ளது தெளிவாக தெரியகிறது.


Click it and Unblock the Notifications









