வெச்சாங்க பாரு செக்... தமிழ்நாடு அரசு பஸ் கண்டக்டர்களுக்கு அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

தமிழ்நாடு அரசு பஸ் கண்டக்டர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெச்சாங்க பாரு செக்... தமிழ்நாடு அரசு பஸ் கண்டக்டர்களுக்கு அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

தமிழகத்தில் பஸ் கண்டக்டர்கள் பயணிகளை தரக்குறைவாக நடத்துவதாக மிக நீண்ட காலமாகவே புகார்கள் இருந்து வருகின்றன. குறிப்பாக தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, குறிப்பிட்ட பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இந்த அதிரடி உத்தரவிற்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

வெச்சாங்க பாரு செக்... தமிழ்நாடு அரசு பஸ் கண்டக்டர்களுக்கு அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

ஆனால் இதற்கு பிறகு பஸ்களில் கண்டக்டர்கள் பெண்களை மரியாதை குறைவாக நடத்துவதாக புகார்கள் அதிகரித்தன. இதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கண்டக்டர்களுக்கு பல்வேறு அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்தது. இதன்படி கண்டக்டர்கள் பெண்களிடம் கோபமாக நடந்து கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

வெச்சாங்க பாரு செக்... தமிழ்நாடு அரசு பஸ் கண்டக்டர்களுக்கு அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

அதேபோல் பெண்களை எரிச்சலூட்டும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது எனவும், பஸ்களில் இடம் இல்லை என வேண்டுமென்றே பெண்களை பஸ்களில் ஏற்றாமல் இருக்க கூடாது எனவும், கண்டக்டர்களுக்கு போக்குவரத்து கழகம் உத்தரவுகளை பிறப்பித்தது. அத்துடன் கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் மீது பொதுவாக இருந்து வரும் புகார்கள் தொடர்பாகவும் ஒரு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.

வெச்சாங்க பாரு செக்... தமிழ்நாடு அரசு பஸ் கண்டக்டர்களுக்கு அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

சில சமயங்களில் பேருந்து நிறுத்தத்தில் ஒரு பயணி மட்டுமே நிற்கிறார் என்றால், பஸ்கள் நிறுத்தப்படுவதில்லை என பயணிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதை தவிர்க்கும் வகையில், ஒருவர் மட்டுமே நிற்கிறார் என்றாலும் பஸ்ஸை நிறுத்தி அவரை ஏற்றி கொள்ள வேண்டும் என டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டது.

வெச்சாங்க பாரு செக்... தமிழ்நாடு அரசு பஸ் கண்டக்டர்களுக்கு அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

அதேபோல் பேருந்து நிறுத்தம் எதுவோ, அங்குதான் பஸ்களை நிறுத்த வேண்டும். மற்ற வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் கண்ட கண்ட இடங்களில் எல்லாம் பஸ்களை நிறுத்த கூடாது என டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு ஏராளமான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. இந்த வரிசையில் தற்போது கண்டக்டர்களுக்கு மேலும் 2 அதிரடியான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

வெச்சாங்க பாரு செக்... தமிழ்நாடு அரசு பஸ் கண்டக்டர்களுக்கு அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

சில சமயங்களில் கண்டக்டர்கள் பஸ்ஸின் முன் பகுதியில் அமர்ந்து தூங்குவதாக பயணிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து முன் பகுதியில் அமர்ந்து கண்டக்டர்கள் தூங்க கூடாது என போக்குவரத்து கழகம் தற்போது அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் தொலை தூர பயணங்களை மேற்கொள்ளும் பஸ்களில் கண்டக்டர்கள் விழிப்புடன் இருந்து, டிரைவர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்க வேண்டும் என போக்குவரத்து கழகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெச்சாங்க பாரு செக்... தமிழ்நாடு அரசு பஸ் கண்டக்டர்களுக்கு அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

இது விபத்துக்களை தவிர்க்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முன் மற்றும் பின் பக்கம் என 2 பக்க படிக்கட்டுகளையும் கண்டக்டர்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் எனவும் போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. முன் பக்கம் அமர்ந்து தூங்க கூடாது என உத்தரவிட்டுள்ள அதே நேரத்தில், கண்டக்டர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கும் போக்குவரத்து கழகம் தடை விதித்துள்ளது.

வெச்சாங்க பாரு செக்... தமிழ்நாடு அரசு பஸ் கண்டக்டர்களுக்கு அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

இனிமேல் கண்டக்டர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே வரும் காலங்களில் கண்டக்டர்கள் முன் பகுதியில் அமர்ந்து தூங்குவது மற்றும் செல்போன் பயன்படுத்துவது ஆகிய விஷயங்களை தவிர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெச்சாங்க பாரு செக்... தமிழ்நாடு அரசு பஸ் கண்டக்டர்களுக்கு அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

அதேபோல் கண்டக்டர்கள் பயணிகளை மரியாதை குறைவாக நடத்துவது, குறிப்பாக பெண்களை மரியாதை குறைவாக நடத்துவது முற்றிலும் தவிர்க்கப்படும் என நாம் எதிர்பார்க்கலாம். கண்டக்டர்கள் இவற்றை தவிர்க்கும்பட்சத்தில், அது மிகவும் மகிழ்ச்சியான விஷயமாக இருக்கும் என பேருந்து பயணிகள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வெச்சாங்க பாரு செக்... தமிழ்நாடு அரசு பஸ் கண்டக்டர்களுக்கு அதிரடி உத்தரவு... என்னனு தெரிஞ்சா சந்தோஷப்படுவீங்க!

அத்துடன் போக்குவரத்து கழகத்தின் இந்த உத்தரவுகளை மதிக்காமல் தொடர்ந்து விதிமுறைகளை மீறும் பஸ் கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் போக்குவரத்து கழகத்தின் இந்த உத்தரவுகளை பஸ் கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் முறையாக பின்பற்றுகிறார்களா? என்பதை கண்காணிக்க அவ்வப்போது சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் போக்குவரத்து கழகத்திற்கு பயணிகள் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 26, 2022, 12:47 [IST]
English summary
Tamil nadu government bus conductors barred from using cell phones on duty
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+