ஐ.பி.எஸ் அதிகார்கள் கார்களில் இருக்கும் சுழல் விளக்குகளை அகற்ற தமிழக அரசு இறுதி எச்சரிக்கை..!!

Written By:

அரசு உயர் அதிகாரிகள் சிவப்பு மற்றும் நீல நிற சுழல் விளக்குகளை பயன்படுத்த தடை விதித்து மத்திய அரசின் உள்துறை அமைச்சக்ம் உத்தரவு பிறப்பத்திருந்தது.

சுழல்விளக்குகள் பயன்படுத்த தமிழகஅரசு மீண்டும் கிடுக்கிப்பிடி

அதன்படி, தமிழ்நாட்டில் ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகார்களின் வாகனங்களில் பொருத்தப்பட்டு இருந்த சுழல் விளக்குகள் அகற்றப்பட்டன.

சுழல்விளக்குகள் பயன்படுத்த தமிழகஅரசு மீண்டும் கிடுக்கிப்பிடி

ஆனால் அவை முழுமையாக தமிழ்நாட்டில் அகற்றப்பட்டனவா என்றால் இல்லை என்பதற்கான காட்சிகளும் அவ்வப்போது அரங்கேறின.

சுழல்விளக்குகள் பயன்படுத்த தமிழகஅரசு மீண்டும் கிடுக்கிப்பிடி

ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கார்களில் உள்ள நீல நிற விளகுக்குகள் இருப்பது குறித்து தமிழக போக்குவரத்து துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியது.

சுழல்விளக்குகள் பயன்படுத்த தமிழகஅரசு மீண்டும் கிடுக்கிப்பிடி

அதனை தொடர்ந்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் செயலாளர் நிரஞ்சன்ஷா, காவல்துறை தலைமை இயக்குனர் டி.கே.ராஜேந்திரன், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் ஆகியோருக்கு கடிதம் அனுப்பினார்.

சுழல்விளக்குகள் பயன்படுத்த தமிழகஅரசு மீண்டும் கிடுக்கிப்பிடி

அதில், தமிழக அரசு உத்தரவு வெளியிட்ட மே 1ம் தேதிக்கு பிறகும், சென்னை உட்பட தமிழகத்தின் சில பகுதிகளில் உள்ள ஐ.பி.எஸ் அதிகாரிகள் தங்களது வாகனங்களில் நீல நிற சுழல் விளக்குகளை பொருத்தி உள்ளனர்.

சுழல்விளக்குகள் பயன்படுத்த தமிழகஅரசு மீண்டும் கிடுக்கிப்பிடி

இது அரசின் உத்தரவை மீறிய செயல் என்றும், அதனால் உடனே சுழல் விளக்கை பயன்படுத்தி வரும் அதிகாரிகள் அதை உடனே அகற்றிட வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சுழல்விளக்குகள் பயன்படுத்த தமிழகஅரசு மீண்டும் கிடுக்கிப்பிடி

உள்துறை கூடுதல் செயலாளர் நிரஞ்சன்ஷாவின் கடிதத்தை பெற்ற பிறகு சுழல் விளக்கை பயன்படுத்தி வரும் ஐபிஎஸ் அதிகாரிகள் பலர், அதை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுழல்விளக்குகள் பயன்படுத்த தமிழகஅரசு மீண்டும் கிடுக்கிப்பிடி

மத்திய அரசு சுழல் விளக்கை பயன்படுத்துவதில் அதீத கட்டுபாடுகளை விதித்து கடந்த ஏப்ரலில் உத்தரவு பிறப்பித்தது.

சுழல்விளக்குகள் பயன்படுத்த தமிழகஅரசு மீண்டும் கிடுக்கிப்பிடி

இதற்கு பிறகு தமிழகத்தின் உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகார்கள் ஆகியோர் தங்களது கார்களில் இருந்த சுழல் விளக்குகளை அகற்றிவிட்டனர்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Tamil Nadu Government final orders to Ban Red and Blue Beacon on IPS officers Vehicles.
Story first published: Thursday, July 27, 2017, 16:41 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark