Just In
- 6 hrs ago
17 இன்ச் அலாய் சக்கரங்களுடன், கேமிரா கண்களில் மீண்டும் சிக்கிய 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!!
- 8 hrs ago
பிஎஸ்-6 கவாஸாகி நின்ஜா 300 விற்பனைக்கு அறிமுகம்... விலை அதிரடியாக உயர்வு... எவ்ளோனு தெரியுமா?
- 10 hrs ago
ஐரோப்பியர்களுக்கு குறி... ஹூண்டாய் பையான் எஸ்யூவி வெளியீடு... இந்திய சந்தையில் விற்பனைக்கு வருமா?
- 10 hrs ago
ஒரு வழியாக இந்தியாவில் அறிமுகமானது சிஎஃப் மோட்டோ 300என்கே பைக்!! ஷோரூம் விலை ரூ.2.29 லட்சம்
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 03.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் வார்த்தைகளை கவனமாக பயன்படுத்தவும்…
- News
ஒரு இடத்தில்கூட வெல்லவிட மாட்டோம்.. 5 மாநில தேர்தலில்.. பாஜகவுக்கு எதிராக களமிறங்கும் விவசாயிகள்
- Finance
டெஸ்லா-வை மிஞ்சும் அமெரிக்க நிறுவனம்.. பிட்காயின் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!
- Movies
கடைக்குட்டி சிங்கம் டு சில்லுனு ஒரு காதல்.. நடிகை இந்துமதி பேட்டி!
- Sports
கட்டைவிரல் இன்னும் சாரியாகலனு ஜடேஜா யோசிப்பார்.. காயத்துல கூட கிண்டலா..கவாஸ்கர் சுவாரஸ்ய பதில்
- Education
ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இதெல்லாம் எங்கயோ கேட்ட மாதிரியே இருக்கே... 2019ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டை மறந்து போய் வாசித்தாரா ஓபிஎஸ்?
2019ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில் வெளியிட்ட அதே அறிவிப்பை, இன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டிலும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் அறிவித்திருப்பதாக மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

தமிழக சட்டமன்றத்திற்கு வெகு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் இன்று (பிப்ரவரி 23) இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் கவனம் பெற்றுள்ளன. இதில், தமிழக மக்களின் பயன்பாட்டிற்காக 12 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்ற அறிவிப்பு முக்கியமானது. இந்த 12 ஆயிரம் புதிய பேருந்துகளும், அடுத்த சில ஆண்டுகளில் கொள்முதல் செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்றது முதலே, தமிழக அரசு போக்குவரத்து கழகத்திற்கு, புதிய பேருந்துகள் தொடர்ச்சியாக கொள்முதல் செய்யப்பட்டு வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஓட்டை, உடைசல்களாக இருந்த பழைய பேருந்துகளுக்கு பதிலாக, படிப்படியாக புதிய பேருந்துகள் பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில்தான் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் 12 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். இதில், 2 ஆயிரம் மின்சார பேருந்துகளும் அடக்கம். 2 ஆயிரம் மின்சார பேருந்துகள் உள்பட ஒட்டுமொத்தமாகதான் 12 ஆயிரம் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ஐசி இன்ஜினில் இயங்க கூடிய 2,200 பேருந்துகளும், 500 மின்சார பேருந்துகளும் கொள்முதல் செய்யப்படும் எனவும் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது பிஎஸ்-6 விதிகள் அமலில் உள்ளதால், முதற்கட்டமாக கொள்முதல் செய்யப்படவுள்ள 2,200 ஐசி இன்ஜின் பேருந்துகளும் பிஎஸ்-6 விதிகளுக்கு இணக்கமானதாக இருக்கும்.

ஆனால் இதில் விசேஷம் என்னவென்றால், தமிழக மக்களின் பயன்பாட்டிற்கு மொத்தம் 2 ஆயிரம் மின்சார பேருந்துகள் வாங்கப்படும் எனவும், இதில் முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் எனவும் பட்ஜெட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பது இது முதல் முறை கிடையாது என்பதுதான்.

ஏனெனில் இதற்கு முன்பாக கடந்த 2019ம் ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டிலும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இதே அறிவிப்பை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முழுமையாக இரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையிலும், தற்போது வரை தமிழகத்தில் மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரவில்லை. பட்ஜெட்டில் வெறும் அறிவிப்புடனே நின்று விடுகிறது.

இந்தியாவில் காற்று மாசுபாடு மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு ஆகிய பிரச்னைகளை குறைப்பதற்காக, சிஎன்ஜி போன்ற மாற்று எரிபொருட்களில் இயங்கும் பேருந்துகள் மற்றும் மின்சார பேருந்துகளை அதிகளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர பல்வேறு மாநில அரசுகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன.

டெல்லி, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். ஆனால் ஐசி இன்ஜினில் இயங்க கூடிய பழைய ஓட்டை, உடைசல் பேருந்துகளை படிப்படியாக மாற்றினாலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பேருந்துகளின் பயன்பாட்டை அதிகரிக்கும் விஷயத்தில் தமிழக அரசு ஆமை வேகத்தில் இயங்கி வருவதாக சமூக வலை தளங்களில் மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.
Note: Images used are for representational purpose only.