சத்தமே வராத 300 ஆம்னி பஸ்களை இறக்க போறாங்க! அரசு பஸ்கள் பக்கம் இனி யாரும் திரும்பி கூட பார்க்க மாட்டாங்க!

தமிழகத்தில் அடுத்த ஒரு வருடத்தில் 300 எலெக்ட்ரிக் ஆம்னி பஸ்கள் இயங்கும் என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளதாக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் கூறியுள்ளார். இதனால் மக்களுக்கு என்ன பயன்? டிக்கெட் விலை கூடுமா குறையுமா? இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழகத்தில் நீண்ட தூர பயணம் என்றால் மக்கள் ரயிலுக்கு அடுத்தபடியாக தேர்வு செய்வது ஆம்னி பஸ்கள் தான். தனியார்கள் நடத்தி வரும் இந்த ஆம்னி பஸ்கள் நீண்ட தூர பயணத்திற்கு பல்வேறு வசதிகளை வழங்கி வருகிறது. குறிப்பாக படுக்கை வசதி, ஏசி வசதி உள்ளிட்ட பல முக்கியமான வசதிகளை பயணிகளுக்கு வழங்குவதால் பயணிகள் இந்த ரக பஸ்களை அதிகம் விரும்புகின்றனர்.

300 Electric Omni Bus for Tamilnadu

விடுமுறை காலங்களில் இந்த பஸ்களில் கூட்டம் நிரம்பி வழியும். இந்நிலையில் தற்போது டீசல் இன்ஜின்களில் தான் இந்த ஆம்னி பஸ்களில் இயக்கப்பட்டு வருகிறது. டீசல் இனஜின்களால் உலகில் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வருகிறது என்ற பேச்சு எழுந்து உள்ளது. இந்நிலையில் டீசல் வாகனங்களை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கு மாறாக எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் ஆகி உள்ளது மக்கள் பலர் பெட்ரோல், டீசல் வாகனங்களை விட்டுவிட்டு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். இப்படியாக எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதால் அதற்கான எரிபொருள் செலவு என்பது குறைகிறது. பெட்ரோல் டீசல் விலை மிக உச்சத்தில் இருக்கும் நிலையில் குறைவான செலவில் பயணிக்கும் வாகனத்தை தான் மக்கள் விரும்புகின்றனர்.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் பேட்டரியில் இயங்கும் பஸ்களுக்கான பதிவுகளை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறும்போது: "தமிழகத்தில் பேட்டரியில் இயங்கும் பஸ்கள் பதிவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் வரவேற்கத்தக்கது தான். பேட்டரியில் ஓடும் பஸ்களை இயக்கினால் எரிபொருள் செலவு மிச்சமாகும்.

பேட்டரியில் ஒரு பஸ்சை இயக்கும்போது ஆண்டுக்கு ரூபாய் 5 லட்சம் வரை மிச்சமாக வாய்ப்பு உள்ளது. தற்போது உள்ள எலெக்ட்ரிக் பஸ்கள் 90 கிலோ மீட்டர் வேகம் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. ஒருமுறை பேட்டரி சார்ஜ் செய்தால் 300 கிலோ மீட்டர் வரை தாராளமாக பயணிக்கலாம்.

அதே நேரம் சார்ஜ் ஏறவும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகள் இருக்கிறது. ஒரு பஸ்க்கு 20 முதல் 30 நிமிடங்கள் வரை சார்ஜ் போட்டாலே முழுமையாக சார்ஜ் ஏறிவிடும் வகையில் பேட்டரிகளும் சார்ஜரும் வந்து விட்டன. இதனால் சென்னையில் இருந்து திருப்பதி, புதுச்சேரி, திருச்சி உள்ளிட்ட குறைவான தூரங்களில் இருக்கும் நகரங்களுக்கு எலெக்ட்ரிக் பஸ்கள் இயக்க தற்போது வாய்ப்பு உள்ளது.

முதற்கட்டமாக இந்த பகுதிகளில் சார்ஜிங் செய்யும் மையங்களை நிறுவி அங்கு பஸ்களை சார்ஜ் ஏற்ற ஏற்பாடுகளை செய்த பின் வரிசையாக பஸ்களை அறிமுகம் செய்வோம். இந்த நகரங்களுக்கு பின் மேலும் சார்ஜிங் மையங்களை எங்கு எல்லாம் அமைக்க முடியுமோ அங்கு எல்லாம் அமைத்து மற்ற நகரங்களுக்கும் எலெக்ட்ரிக் பஸ்கள் அறிமுகம் செய்யும் முயற்சியில் இறங்கி உள்ளோம்." என்று கூறினார்.

இதனால் அடுத்த ஓராண்டுக்கு தமிழகத்தில் எலெக்ட்ரிக் ஆம்னி பஸ்களின் பயன்பாட்டை பார்க்க முடியும். தற்போது வரை அரசு பஸ்களில் டவுண் பஸ்களில் மட்டும் தான் எலெக்ட்ரிக் பஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இனி விரைவில் நீண்ட தூரம் செல்லும் எலெக்ட்ரிக் பஸ்களும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பஸ்களின் டிக்கெட் விலை என்பது பஸ்களுக்கான செலவு, அதற்கான எரிபொருள் செலவு என அனைத்தையும் கணக்கிட்டு தான் நிர்ணயம் செய்யப்படுகிறது. எலெக்ட்ரிக் பஸ்கள் பயன்படுத்துவதால் எரிபொருள் செலவு மிச்சமாகும் என்பதால் பஸ்களின் டிக்கெட் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதற்கான தீர்வை தமிழக அரசும், பஸ் உரிமையாளர்களும் விரைவில் கொண்டு வர வேண்டும்.

image is used for representation

Article Published On: Tuesday, July 25, 2023, 18:54 [IST]
English summary
Tamil nadu is set to receive 300 electric omni buses next year
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+