கேரளாவில் தமிழ்நாட்டின் மானத்தை வாங்கிய லாரி டிரைவர்!! இவ்வளவு பெரிய மலையாள நடிகரை தெரியாத அளவிற்கா மது போதை?

ஆபத்தான முறையில் லாரியை ஓட்டிய தமிழகத்தை சேர்ந்த டிரைவர் மீது பிரபல கேரள நடிகர் ஒருவர் புகார் அளித்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். யார் அந்த பிரபல கேரள நடிகர்? கைது செய்யும் அளவிற்கு இந்த லாரி டிரைவர் எந்த அளவிற்கு மோசமாக லாரியை ஓட்டியுள்ளார்? என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.

ஆக்ரோஷமான டிரைவிங் எந்தவொரு சூழலிலும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்பதை பல்வேறு சம்பவங்களில் பார்த்துள்ளோம். அதிலிலும் குறிப்பாக, வசிக்கும் மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு சென்று விட்டாலே எங்கிருந்துதான் அப்படியொரு தைரியம் வருகிறதோ தெரியவில்லை, பல வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை தாறுமாறாக ஓட்ட ஆரம்பித்துவிடுகின்றனர்.

tamil nadu lorry driver arrested in kerala

ஆனால் சொந்த மாநிலத்தில் வாகனத்தை ஓட்டுவதை காட்டிலும் மாற்று மாநிலத்தில் வாகனம் ஓட்டுவதுதான் சிரமம் மற்றும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை பலர் மறந்து விடுகின்றனர். இவ்வாறு, தாறுமாறாக லாரி ஓட்டியை தமிழகத்தை சேர்ந்த டிரைவர் மீது கேரள போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வகையில் கேரள போலீஸாரிடம் பிடிப்பட்டுள்ள தமிழக லாரி டிரைவரின் பெயர் பரத், வயது 29.

தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு லாரியை ஓட்டி சென்றுள்ளார். லாரியை டிரைவர் பரத் ஆக்ரோஷமாக ஓட்டியதாக கூறப்படுகிறது. சரியாக அந்த சமயத்தில், சாலை விபத்தில் உயிரிழந்த நடிகர் கொல்லம் சுதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரிச்சூருக்கு சென்று கொண்டிருந்த முன்னணி மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் பார்வையில் பரத்தின் லாரி பட்டுள்ளது.

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், பரத்தின் லாரிக்கு பின்னால்தான் சுரேஷ் கோபியின் கார் சென்றுள்ளது. முன்னால் செல்லும் லாரியின் ஆக்ரோஷமான டிரைவிங்கை கண்ட நடிகர் சுரேஷ் கோபி தனது கார் டிரைவரிடம் கூறி தொடர்ந்து ஹார்ன் அடிக்க கூறியுள்ளார். பின்னர் லாரிக்கு இணையாக சென்று லாரியை ஓரங்கட்டும் படி கூறியுள்ளனர். ஆனால் இதையெல்லாம் லாரி டிரைவர் பரத் கேட்பதுபோல் தெரியவில்லை.

இதில் எரிச்சலடைந்த நடிகர் சுரேஷ் கோபி அருகில் இருந்த காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் யாவும் எர்ணாகுளம் பகுதியில் நடைபெற்றுள்ளது. சுரேஷ் கோபியின் புகாரை அடுத்து தமிழக பதிவெண் கொண்ட பரத்தின் லாரியை கண்டறியும் முயற்சியில் போலீஸார் இறங்கினர். அதன்படி, அங்கமாலி என்ற பகுதியில் டிரைவர் பரத்தை அவரது லாரியுடன் போலீஸார் பிடித்துள்ளனர்.

போலீஸார் விசாரித்ததில் டிரைவர் பரத் மது அருந்தியிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, டிரைவர் பரத்தின் மீது வழக்கு பதிவு செய்த கேரள போலீஸார் பரத் இயக்கிவந்த லாரியையும் பறிமுதல் செய்து கோர்டில் ஒப்படைத்துள்ளனர். டிரைவர் பரத்துக்கு எவ்வளவு அபராதம் விதிக்கப்பட்டது? சிறைத்தண்டனைகள் ஏதும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்த விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: சாலை விபத்தில் உயிரை மாய்த்து கொண்ட ஒருவரின் இறுதி சடங்கில் பங்கேற்று வந்தவருக்கு அடுத்த சில நாட்களுக்கு சாலையில் ஆக்ரோஷமாக வாகனங்களை ஓட்டுபவர்களை பார்த்தால் எரிச்சல் ஏற்படத்தான் செய்யும். உயிரிழந்துள்ளவர் இன்னும் நெருங்கிய பழக்கமானவர் என்றால், பல வருடங்களுக்கு அந்த தாக்கம் இருக்கும். அத்தகைய மனநிலையில் இருந்த நடிகர் சுரேஷ் கோபியை இன்னும் எரிச்சலடைய செய்துள்ளார் இந்த தமிழக லாரி டிரைவர் பரத்.

More from DriveSpark

Article Published On: Thursday, June 8, 2023, 11:06 [IST]
English summary
Tamil nadu lorry driver arrested after malayalam actor suresh gopi police complaint
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+