இனி இது இல்லாவிட்டால் பெட்ரோல், டீசல் போட முடியாது... ஹெல்மெட் அல்ல... வேற என்னனு தெரியுமா?

தமிழகத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படாது என அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இனி இது இல்லாவிட்டால் பெட்ரோல், டீசல் போட முடியாது... ஹெல்மெட் அல்ல... வேற என்னனு தெரியுமா?

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால், மத்திய, மாநில அரசுகள் மீண்டும் கட்டுப்பாடுகளை கடுமையாக்க தொடங்கியுள்ளன. தமிழக அரசும் ஒரு சில கட்டுப்பாடுகளை அதிரடியாக அறிவித்துள்ளது.

இனி இது இல்லாவிட்டால் பெட்ரோல், டீசல் போட முடியாது... ஹெல்மெட் அல்ல... வேற என்னனு தெரியுமா?

கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதில் முக கவசங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. எனவே அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. எனினும் ஒரு சிலர் இன்னமும் கூட முக கவசம் அணிவதை தவிர்த்து வருகின்றனர். கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவுவதற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக உள்ளது.

இனி இது இல்லாவிட்டால் பெட்ரோல், டீசல் போட முடியாது... ஹெல்மெட் அல்ல... வேற என்னனு தெரியுமா?

எனவே அனைவரையும் முக கவசம் அணிய வைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தமிழக பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் தற்போது அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி பெட்ரோல் பங்க்குகளுக்கு வரும் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயம். முக கவசம் இல்லாவிட்டால் பெட்ரோல், டீசல் வழங்கப்படாது.

இனி இது இல்லாவிட்டால் பெட்ரோல், டீசல் போட முடியாது... ஹெல்மெட் அல்ல... வேற என்னனு தெரியுமா?

இந்த அதிரடி உத்தரவு வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. எனவே வாகனங்களில் பயணம் செய்வோர் தவறாமல் முக கவசம் அணிந்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் பெட்ரோல் பங்க்குகளில் நீங்கள் தேவையில்லாத பிரச்னைகளை சந்திக்க நேரிடலாம். இதேபோல் காரில் தனியாக பயணம் செய்தாலும் முக கவசம் அணிய வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இனி இது இல்லாவிட்டால் பெட்ரோல், டீசல் போட முடியாது... ஹெல்மெட் அல்ல... வேற என்னனு தெரியுமா?

காரில் தனியாக பயணம் செய்யும்போது முக கவசம் அணியாத சிலருக்கு டெல்லி காவல் துறையினர் அபராதம் விதித்திருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். காரில் தனியாக பயணம் செய்யும்போது முக கவசம் எதற்கு? என அவர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் டெல்லி உயர் நீதிமன்றம் இதனை ஏற்கவில்லை.

இனி இது இல்லாவிட்டால் பெட்ரோல், டீசல் போட முடியாது... ஹெல்மெட் அல்ல... வேற என்னனு தெரியுமா?

மாறாக காரில் தனியாக பயணம் செய்யும்போதும் முக கவசம் அணிவது கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது முக கவசம் அணிவதன் அவசியத்தை நீதிபதி எடுத்துரைத்தார். முக கவசம் அணியாதவர்கள் மீது தற்போது நடவடிக்கை எடுப்பது தீவிரமடைந்து வருகிறது. எனவே முக கவசம் அணிவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.

இனி இது இல்லாவிட்டால் பெட்ரோல், டீசல் போட முடியாது... ஹெல்மெட் அல்ல... வேற என்னனு தெரியுமா?

முன்னதாக முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் பங்க்குகளில் எரிபொருள் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னதாக தலை கவசம் இல்லாமல் வருபவர்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பப்படாது என கடந்த காலங்களில் பல முறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு முறையாக பின்பற்றப்படவில்லை.

இனி இது இல்லாவிட்டால் பெட்ரோல், டீசல் போட முடியாது... ஹெல்மெட் அல்ல... வேற என்னனு தெரியுமா?

கொரோனா வைரஸிடம் இருந்து முக கவசம் காப்பாற்றுவதை போல், சாலை விபத்துக்களில் இருந்து தலை கவசம் காப்பாற்றுகிறது. அதன் அவசியத்தை உணர்ந்துதான் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கடந்த காலங்களில் தலை கவசம் அணியாவிட்டால் எரிபொருள் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டது. அதனை போல் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள முக கவச உத்தரவை நீர்த்து போக செய்யாமல் இருப்பது அவசியம்.

More from DriveSpark

Article Published On: Thursday, April 8, 2021, 23:51 [IST]
English summary
Tamil Nadu: ‘No Mask, No Fuel’-Here Are All The Details. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+