தமிழகத்தில் விரைவில் ஹெலிகாப்டர் சேவை.. ஓலா ஆட்டோ-பைக்கை போல ஈசியா புக் பண்ணி ரைடு செய்யலாம்!

தமிழகத்தில் விரைவில் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பணியில் தற்போது ஆளும் திமுக அரசு தீவிரமாக களமிறங்கி இருக்கின்றது. இந்த சேவை தமிழகத்தை இணைக்கும் வகையிலும், குறிப்பாக, தமிழகத்தில் உள்ள நகரங்களை இணைக்கும் வகையிலும் தொடங்கப்பட இருக்கின்றது. இதுகுறித்த அரசாணையை விரைவில் தமிழக அரசு வெளியிட உள்ளது. மேலும், தமிழகத்தில் ஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட இருப்பதை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் (Tamil Nadu Industrial Development Corporation) நிர்வாக இயக்குநர், சந்தீப் நந்தூரி-யும் உறுதிப்படுத்தி இருக்கின்றார்.

தமிழ்நாட்டில் இப்போதைய நிலவரப்படி 80 இடங்களில் ஹெலிகாப்டர்கள் தரையிறங்கும் வசதிகள் உள்ளன. இவற்றை சீரமைக்கும் பணிகளை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் தொடங்கி உள்ளது. ஒன்றிய அரசின் தேசிய சிவில் விமானப் போக்குவரத்துக் கொள்கை மற்றும் ஹெலிகாப்டர் கொள்கை மூலம் இவற்றை புதுப்பித்து வருகின்றனர். இந்த பணிகள் நிறைவடையும் பட்சத்தில் தமிழ்நாட்டின் நகரங்களுக்கு இடையிலான ஹெலிகாப்டர் சேவை அறிமுகப்படுத்தப்படும்.

TN to launch helicopter service

உள்ளூர் பொருளாதாரம் மேம்படும்: தமிழகத்தில் ஹெலிகாப்டர் சேவை தொடங்கும்பட்சத்தில், நகரங்களை இணைப்பது மட்டுமல்ல அந்தந்த நகரங்களின் பொருளாதாரமும் மேம்படும். குறிப்பாக, தமிழகத்தில் உள்ள தொலைதூரப் பகுதிகளை விரைந்து சென்றடையவும் முடியும். கோயம்புத்தூர், மதுரை, திருச்சி போன்ற பகுதிகளிக்கு சில மணி நேரங்களிலேயே சென்றுவிட முடியும்.

உதாரணமாக, சென்னையில் இருந்து கோயம்பத்தூர் சாலை மார்க்க செல்ல வேண்டும் எனில் சுமார் 8 மணி நேரத்திற்கும் அதிகமா செலாவகும். ரயிலில் இதே நேரமே ஆகின்றது. ஒரு நாளில் பாதி நேரம் பயணத்திற்கே சென்றுவிடும். இந்த மாதிரியான அதிக நேரம் எடுக்கும் பயணங்களை ஹெலிகாப்டரில் மேற்கொள்ளும்போது பலமடங்கு நேரம் மிச்சமாகும்.

Helicopter

ஒரு மணி நேரம் அல்லது அதற்கு குறைவான நேரமே எடுத்துக் கொள்ளும். எனவே ஒரு படத்தின் இடைவெளி வருவதற்குள் நாம் சேரும் இடம் வந்துவிடும். இத்தகைய அதி வேக பயணத்தை வழங்கும் பொருட்டே தமிழகத்தில் ஹெலிகாப்டர் சேவை அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்: தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கும் இந்த ஹெலிகாப்டர் சேவையை அரசியல்வாதிகள், விஐபி-க்கள் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கலாம். சாமானியர் மற்றும் உள்ளூர் தொழிலதிபர்கள் என அனைவரும் நுகரும் நோக்கிலேயே தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் மாநிலத்தில் ஹெலிகாப்டர் சேவையை தொடங்கும் பணியில் களமிறங்கி இருக்கின்றது.

குறிப்பாக, சாமானியர்களால் மலிவு விலையில் இந்த சேவையில் பறக்க முடியும். இதன் வாயிலாக உள்ளூர் உற்பத்தி அதிகரிக்கும் மற்றும் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாகும். இத்திட்டம் கட்டம் கட்டமாக செயல்படுத்தப்பட இருக்கின்றது. அவசர மருத்துவ சேவைகள், சட்டம் மற்றும் ஒழுங்கு, சுற்றுலா, உடல் உறுப்புகளை விரைந்து எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற நோக்கத்திற்காகவும் இந்த சேவை மாநிலத்தில் தொடங்கப்பட இருக்கின்றது.

தமிழகத்தில் எங்கு அதிகம் ஹெலிபேட்கள் இருக்கின்றன: ஹெலி திஷா மற்றும் ஹெலி சேவா ஆகியவற்றின் வழிகாட்டுதல் மற்றும் குறிப்புகளின் அடிப்படையிலேயே ஹெலிகாப்டர் சேவைக்கான பொறியியல் முறை உருவாக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், எந்த நிலையிலும் தவறுகள் ஏற்பட வாய்ப்பு இருக்காது என தெரிகின்றது. இந்த திட்டம் அரசு நிறுவனங்கள் மற்றும் ஹெலிகாப்டர் ஆபரேட்டர்களின் ஒத்துழைப்பை உள்ளடக்கும்.

ஏற்கனவே, ஹெலிபேடுகளின் உரிமையாளர்களிடத்தில் பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகின்றது. விரைவில் ஹெலிபேட்கள் சேவைக்கு ஏற்ப சீரமைக்கப்பட்டு அவை பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருக்கின்றன. இப்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி, திருச்சி நகரத்தில் மட்டும் பல்வேறு நிறுவனங்களுக்கு சொந்தமான நான்கு ஹெலிபேடுகள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. ஏஏஐ (AAI), தமிழ்நாடு சிறப்பு போலீஸ், பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் பெல் (BHEL) ஆகியவற்றிற்கு சொந்தமான ஹெலிபேடுகளே திருச்சி நகரத்தில் உள்ளன.

ஹெலிபேடின் தரநிலை: ஒவ்வொரு ஹெலிபேடுக்கும் குறைந்தபட்ச தரநிலை இருக்க வேண்டும் என்பதை டிட்கோ உறுதிப்படுத்தி இருக்கின்றது. அதை சுற்று வேலி இருப்பது, எளிதில் தரையிறங்குவது, பயணிகளுக்கான வசதிகள், மின்சாரம் மற்றும் நீர் போன்ற அத்தியாவசிய வசதிகள் இருக்க வேண்டும் என்பதையும் டிட்கோ கட்டாயமாக்கி இருக்கின்றது. இதுதவிர, ஹெலிபேட் பாதுகாவலர்களும் தொடர் கண்கானிப்பில் இருப்பார்கள் என கூறப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தற்போது அரசுக்குச் சொந்தமான ஹெலிபேடுகளைக் கண்டறியும் பணிகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முன்முயற்சியானது, ஹெலிகாப்டர் பயணத்தை தமிழகத்தில் சாத்தியமானதாக மாற்றுவதையும், பயணத்தை மேம்படுத்துவதையும், உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஹெலிகாப்டர் சேவையின் துள்ளியமான நாள் மற்றும் கட்டணம் விபரங்கள் வெளியிடப்படவில்லை. விரைவில் இதுபற்றிய அனைத்து தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 29, 2024, 14:46 [IST]
English summary
Tamil nadu plans to launch helicopter services for easier regional air connectivity
மேலும்... #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X