ஊரே சிரிக்குது! 10 ரூபாக்கு ஆசப்பட்டு பணத்தை மொத்தமா இழந்த பிரபலம்! இனி வெளில எங்கயும் தல காட்ட முடியாது!

தமிழ்நாடு (Tamil Nadu) உள்பட நாடு முழுவதும் நடு ரோட்டில் குளிக்கும் (Bath) சம்பவங்கள் தற்போது அதிகளவில் நடைபெற்று வருகின்றன. கோடை கால வெயிலை (Summer Heat) காரணம் காட்டி, இளைஞர்களும், இளம்பெண்களும் இப்படி செய்து கொண்டுள்ளனர். கோடை வெயில் சுட்டெரித்து கொண்டுள்ளது என்பது என்னவோ உண்மைதான்.

ஆனால் வாகனத்தில் சென்று கொண்டிருக்கும்போது, நடு ரோட்டில் குளிப்பது அவசியமா? என்ற கேள்வி எழுகிறது. உண்மையை சொல்வதென்றால், சமூக வலை தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே அனைவரும் இப்படி செய்து வருகின்றனர். தற்போதெல்லாம் வித்தியாசமாக ஏதாவது ஒன்றை செய்தால், அந்த வீடியோ வைரல் ஆகி விடுகிறது.

Tamil Nadu Man Takes A Bath While Riding Scooter

இந்த வைரல் வீடியோக்களுக்காகவே (Viral Video) இதுபோன்ற காரியங்கள் அரங்கேற்றப்படுகின்றன. இந்த வரிசையில் ஈரோடு நகரில் நடைபெற்றுள்ள ஒரு சம்பவம் பொதுமக்களை கடுமையான கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த மிகவும் பரபரப்பான சாலையில், இளைஞர் ஒருவர் குளித்ததுதான் இதற்கு காரணம்.

இதற்கு காரணம் வெயில் அல்ல. ஒரு பந்தயம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஈரோடு நகருக்கு அருகே உள்ள வெள்ளோடு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவரும், இவரது நண்பர் ஒருவரும் சமீபத்தில் பந்தயம் ஒன்றை கட்டியிருந்தனர். பார்த்திபன் நடுரோட்டில் குளித்தால், அவரது நண்பர் அவருக்கு 10 ரூபாய் கொடுக்க வேண்டும் என்பதுதான் இந்த பந்தயம்.

Tamil Nadu Scooter Rider Takes Bath On Road

இந்த பந்தயத்தில் வெல்ல வேண்டும், அதை வீடியோவாக எடுத்து சமூக வலை தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக பார்த்திபன் உடனடியாக களத்தில் இறங்கி விட்டார். நீங்கள் ஈரோடு சுற்று வட்டார பகுதியை சேர்ந்தவராக இருந்தால், பன்னீர்செல்வம் பார்க் சிக்னல் எவ்வளவு நெரிசலாக இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும்.

அப்படிப்பட்ட ஒரு இடத்தை தேர்வு செய்து, அங்கே வெற்றிகரமாக குளித்துள்ளார் நம் கதையின் நாயகன் பார்த்திபன். ஒரு ஸ்கூட்டரின் முன் பகுதியில் பக்கெட்டை வைத்து கொண்டு, வீட்டில் ஜாலியாக குளிப்பதை போல் அவர் குளித்துள்ளார். அவர் மட்டுமல்லாது, அவரை சுற்றியிருந்த ஒரு சிலரும் பார்த்திபன் மீது தண்ணீரை ஊற்றுகின்றனர்.

தற்போது சமூக வலை தளங்களில் வைரல் ஆக பரவி வரும் வீடியோவில் இந்த காமெடி காட்சிகளை நம்மால் தெளிவாக காண முடிகிறது. மிகவும் பரபரப்பான ஒரு சாலையில் எத்தனை பேர் அவசரமாக வேலைக்கு சென்று கொண்டிருப்பார்கள்? எத்தனை பேர் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருப்பார்கள்? என்பதை எல்லாம் இவர்கள் உணரவில்லை.

10 ரூபாய் பந்தயத்தில் வெல்ல வேண்டும், பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக சாலையில் மற்ற வாகன ஓட்டிகளுக்கும், பாதசாரிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். எனவே காவல் துறை உடனடியாக பார்த்திபன் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. பார்த்திபனுக்கு 3,500 ரூபாய் அபராதம் (Fine) விதிக்கப்பட்டிருப்பதாக காவல் துறை தரப்பில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

''பில்டப் பண்றமோ இல்ல பீலா விட்றமோ... நாம எதை பண்ணிணாலும் இந்த உலகம் உடனே நம்மள உத்து பாக்கணும்'' என வைகைப்புயல் வடிவேலு பாணியில், கடந்த காலங்களில் பார்த்திபன் இன்னும் பல்வேறு சேட்டைகளை செய்துள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி மீனை சமைக்காமல் அப்படியே சாப்பிடுவது, சக்கரைக்கு பதிலாக டீ-யில் உப்பு போட்டு குடிப்பது, ஒரு இரவு முழுவதும் சாலையில் தூங்குவது போன்ற சவால்களை பார்த்திபன் வெற்றிகரமாக முடித்துள்ளாராம். இந்த சேட்டைகள் தற்போது எல்லை மீறி போக, காவல் துறை அவருக்கு தக்க பாடம் புகட்டியுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமூக வலை தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பது அவரவர் விருப்பம். அதில் யாரும் தலையிட முடியாது. ஆனால் இதற்காக செய்யும் காரியங்கள் நகைச்சுவையாக இருந்தால் மட்டும் பரவாயில்லை. பொழுதுபோக்கிற்காக அதை பார்ப்பவர்களும் சிரித்து விட்டு, கடந்து சென்று விடுவார்கள். ஆனால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவதை ஏற்க முடியாது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 31, 2023, 14:12 [IST]
English summary
Tamil nadu scooter rider takes bath on road to win rs 10 bet viral video full details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+