உயிரை பணயம் வைத்து மின்னல் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ் டிரைவர்! காரணத்தை கேட்டு தமிழ்நாடே பாராட்டுது

தஞ்சையில் இருந்து மதுரைக்கு மின்னல் வேகத்தில் ஆம்புலன்ஸை ஓட்டி சென்ற டிரைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

உயிரை பணயம் வைத்து மின்னல் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ் டிரைவர்! காரணத்தை கேட்டு தமிழ்நாடே பாராட்டுது

இந்தியாவில் உடல் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இதனை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் தற்போது நடைபெற்றுள்ளது. அதுவும் தமிழகத்தில். சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த இளம்பெண் ஒருவரின் கல்லீரல் மற்றொருவருக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.

உயிரை பணயம் வைத்து மின்னல் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ் டிரைவர்! காரணத்தை கேட்டு தமிழ்நாடே பாராட்டுது

இதற்கு ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் உறுதுணையாக இருந்துள்ளார். பொதுவாக இந்தியாவில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் போன்ற அவசர கால வாகனங்களுக்கு வழிவிடுவது தொடர்பாக மக்களுக்கு போதிய அளவில் விழிப்புணர்வு இல்லை. அவசர கால வாகனங்கள் செல்வதற்கு, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சில சமயங்களில் இடையூறு ஏற்படுத்துகின்றனர்.

உயிரை பணயம் வைத்து மின்னல் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ் டிரைவர்! காரணத்தை கேட்டு தமிழ்நாடே பாராட்டுது

ஆனால் இந்த சம்பவத்தில் பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். அத்துடன் போக்குவரத்து காவல் துறையினரும், உரிய முன்னேற்பாடுகளை கச்சிதமாக செய்தனர். இதன் காரணமாக ஆம்புலன்ஸ் விரைவாக சென்று, கல்லீரல் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. தஞ்சையில் சமீபத்தில் சாலை விபத்து ஒன்றில் சிக்கிய 25 வயது இளம்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உயிரை பணயம் வைத்து மின்னல் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ் டிரைவர்! காரணத்தை கேட்டு தமிழ்நாடே பாராட்டுது

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயரத்திற்கு மத்தியிலும் அவரின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க அவரது பெற்றோர் முன்வந்தனர். அந்த இளம்பெண்ணின் கல்லீரல் வேறு ஒரு நோயாளிக்கு பொருத்தமாக இருந்தது. அவர் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரை பணயம் வைத்து மின்னல் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ் டிரைவர்! காரணத்தை கேட்டு தமிழ்நாடே பாராட்டுது

எனவே கல்லீரலை மதுரைக்கு கொண்டு செல்லும் பணிகள் வேகம் எடுத்தன. தஞ்சையில் இருந்து மதுரைக்கு சுமார் 190 கிலோ மீட்டர்கள். கல்லீரலை ஆம்புலன்ஸ் மூலம் சாலை மார்க்கமாக கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. எனவே போக்குவரத்து போலீசார் காலம் தாழ்த்தாமல் உடனடியாக முன்னேற்பாடு பணிகளை செய்தனர்.

உயிரை பணயம் வைத்து மின்னல் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ் டிரைவர்! காரணத்தை கேட்டு தமிழ்நாடே பாராட்டுது

இதன் காரணமாக 190 கிலோ மீட்டர் தூரத்தை ஆம்புலன்ஸ் வெறும் 1 மணி நேரம் மற்றும் 50 நிமிடங்களில் கடந்தது. ஆம்புலன்ஸில் பத்திரமாக கொண்டு வரப்பட்ட கல்லீரல், அறுவை சிகிச்சையின் மூலம் அந்த நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இந்த ஆம்புலன்ஸை சுப்ரமணியன் என்ற டிரைவர் ஓட்டினார்.

உயிரை பணயம் வைத்து மின்னல் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ் டிரைவர்! காரணத்தை கேட்டு தமிழ்நாடே பாராட்டுது

அவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஏனெனில் அவர் 140 கிலோ மீட்டர்கள் வேகத்தில் ஆம்புலன்ஸை இயக்கி, கல்லீரலை வெற்றிகரமாக மதுரை கொண்டு வந்து சேர்த்துள்ளார். இதுகுறித்து ஆம்புலன்ஸ் டிரைவர் சுப்ரமணியன் கூறுகையில், ''ஒரு உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஆம்புலன்ஸை மிகவும் கவனமாக ஓட்டினேன்.

உயிரை பணயம் வைத்து மின்னல் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ் டிரைவர்! காரணத்தை கேட்டு தமிழ்நாடே பாராட்டுது

சூழ்நிலையை புரிந்து கொண்டு, ஆம்புலன்ஸ் விரைவாக செல்ல பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்கினர். போலீசாரும் தங்கள் பங்கிற்கு போக்குவரத்தை திறம்பட கையாண்டனர்'' என்றார். ஆம்புலன்ஸ் போன்ற அவசரகால வாகனங்கள் விரைவாக செல்வதற்கு உதவி செய்வது என்பது அனைவரின் கடமை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

உயிரை பணயம் வைத்து மின்னல் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ் டிரைவர்! காரணத்தை கேட்டு தமிழ்நாடே பாராட்டுது

இதனால் வேகமாக செல்லும் ஆம்புலன்ஸ்களுக்கு எக்காரணத்தை கொண்டும் இடையூறு ஏற்படுத்த கூடாது. ஆனாலும் ஒரு சிலர் உரிய விழிப்புணர்வு இல்லாமல், அவசர கால வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்தி கொண்டுதான் உள்ளனர். அத்தகைய நபர்கள் மீது தற்போது போலீசார் கடும் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Dinamani

More from DriveSpark

Article Published On: Tuesday, March 3, 2020, 15:38 [IST]
English summary
Tamil Nadu: This Ambulance Driver Covered 190 kms In 1 Hour 50 Minutes To Save A Patient's Life. Read in Tamil
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+