தமிழகத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வருகிறது புதிய சாலை! நிலத்தை கையகப்படுத்த மட்டும் ரூ.7கோடி ஒதுக்கீடு!
தலைநகரம் சென்னையும், அதை சுற்றியுள்ள பகுதியும் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி தினந்தோறும் தவித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே தமிழகத்தின் மாநில நெடுஞ்சாலைத் துறை புதிய நெடுஞ்சாலையை அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையின் தெற்கு புறநகர் பகுதியான உத்திரமேரூரிலேயே புதிய புறவழிச்சாலை அமைக்கப்பட இருக்கின்றது.
காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளை விரைந்து சென்றடையவும், தற்போது உள்ள பாதையில் நிலவும் அதிகப்படியான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவுமே புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. போக்குவரத்து நெரிசலை மட்டும் இது குறைக்கப்போவதில்லை, அத்துடன், பலமடங்கு நேரத்தையும் இந்த புதிய மிச்சப்படுத்தும் என கூறப்படுகின்றது.

குறிப்பு படம் உதாரணத்திற்கு வழங்கப்பட்டது. டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டு இருக்கும் தகவலின்படி, 35 கோடி ரூபாய் செலவில் இந்த புதிய வழிப்பாதை மேற்கொள்ளப்பட இருப்பது தெரிய வந்திருக்கின்றது. 4 கிமீ தூரத்திற்கே இந்த பைபாஸ் சாலை அமைக்கப்பட இருக்கின்றது. இந்த வழித்தடத்தில் முக்கிய நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன.
இரும்பு நிறுவனம், சிமெண்ட் மற்றும் துணி நிறுவனங்கள் என பலதரப்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு புதிய சாலை மிகப் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது. குறிப்பாக, இப்போது இருப்பதைக் காட்டிலும் பலமடங்கு நிறுவனங்களின் செயல்பாட்டை அதிகப்படுத்த இது பெரும் உதவியாக இருக்கும்.
கார்கள் மட்டும் சுமார் 7 ஆயிரத்திற்கு அதிகமாக பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த புதிய சாலை ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் மாநில நெடுஞ்சாலை 118 இடன் இணையும் இடத்தில் அதிகளவில் விபத்துகள் ஏற்படும் சூழல் இருப்பதையும் மாநில நெடுஞ்சாலைத் துறைக் கண்டறிந்திருக்கின்றது.
எனவே அந்த பகுதிகளைப் பாதுகாப்பானதாக மாற்றும் கடமை அத்துறைக்கு உள்ளது. இதன் அடிப்படையிலேயே பல்வேறு இடங்களில் நான்கு வழி, டி வடிவ மற்றும் ஒய் வடிவ சந்திப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக தனியார் நிறுவனம் ஒன்றுடன் அது கூட்டணியையும் தொடங்கி இருக்கின்றது.
சென்ற வாரமே இதற்கான டெண்டர் வெளியிடப்பட்டது. தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனமே நான்கு பேருந்துகள் மட்டுமே பயணிக்கும் பாதையையும் புதிய சாலையில் உருவாக்க இருப்பதாகக் கூறப்படுகின்றது. அதேவேளையில், இந்த உத்திரமேரூர் புற வழிச்சாலை திட்டம் சென்ற அதிமுக ஆட்சியிலேயே அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
2018 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு இதற்கான பணிகளைத் தொடங்கியது. ஆனால், எந்தவொரு வளர்ச்சியும் இல்லாமல் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையிலேயே தற்போது ஆளும் திமுக அரசு இந்த திட்டத்தை மீண்டும் கையில் எடுத்து முன்னேற்ற பாதையை நோக்கி பயணிக்கச் செய்ய வைத்திருக்கின்றது.
புதிய சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கி இருக்கின்றன. நிலத்தை இழப்பவர்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. நிலம் உரிமையாளர்களுக்கு இழப்பீடு மட்டுமே சுமார் 7 கோடி ரூபாய் ஒதுக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்த புதிய சாலைக்கும் நில உரிமையாளர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், இந்த பாதை அமைப்பு பணிகள் சுமூக நிறைவுறும் என்றும் அதிகாரிகள் சிலர் நம்பிக்கைத் தெரிவித்து இருக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகள் பலவற்றில் முன்பைக் காட்டிலும் இப்போது வாகனங்களின் போக்குவரத்து மிக நெரிசல் மிக அதிகளவில் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதற்கு மிக சிறந்த உதாரணமாக சென்னையின் நுழைவு வாயிலான செங்கல்பட்டு-திருச்சி நெடுஞ்சாலை இருக்கின்றது. குறிப்பாக, விடுமுறை நாட்களில் இந்த நெடுஞ்சாலையில் பயணிப்பது என்பது இயலாத ஒன்று. இதைப்போலவே சென்னையை சுற்றியிருக்கும் மற்ற புறநகர் வழிச்சாலையும் பெரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications








