தமிழக அரசு பஸ்களில் வரப்போகும் அதிரடி மாற்றம், தனியார் பஸ்களுக்கு எல்லாம் மவுசு குறையப்போகுது!
தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் ஏசி அல்லாத பஸ்களில் அதிரடியாக ஒரு மாற்றத்தை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த மாற்றத்தால் வயதானவர்கள் முதல் சிங்கிள்கள் வரை அனைவரும் பயன்பெற உள்ளனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தமிழக அரசு நீண்ட தூர பயண பஸ்களை எல்லாம் தமிழக அரசு விரைவு பேருந்து கழகம் மூலம் இயக்கி வருகிறது. இதனால் பஸ்களில் நீண்ட தூரம் பயணிப்பவர்கள் இந்த ரக பஸ்களை மட்டுமே பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. இதற்கு போட்டியாக பல தனியார் நிறுவனங்களும் பஸ் போக்குவரத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தனியார் பஸ்கள் எல்லாம் ஸ்லீப்பர் வசதி கொண்ட பஸ்களை இயக்கியதால் மக்கள் பலர் ஸ்லீப்பர் ரக பஸ்களை விரும்பிய நிலையில் தற்போது அரசு பஸ்களும் ஸ்லீப்பர் வசதியுடன் மாற்றப்பட்டுள்ளது. ஏசி வசதி கொண்ட ஸ்லீப்பர் மற்றும் ஏசி வசதி அல்லாத சிலிப்பர் என பஸ்கள் பிரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஏசி அல்லாத தமிழக அரசின் ஸ்லீப்பர் பஸ்களில் ஸ்லீப்பர் படுக்கைகள் இரண்டு சீட்டு கொண்ட பக்கத்தில் மேற்புறமும், ஒரு சீட் கொண்ட பக்கத்தில் மேற்புறமும் மட்டும்தான் இருக்கிறது. கீழ்ப்பக்கத்தில் படுக்கும் வசதி கொண்ட சீட்டுகள் எதுவும் இல்லை. இந்த படுக்கைக்கு செல்ல ஏணிகளை பொருத்தியுள்ளனர். இதன் மூலம் பயணிகள் மேலே ஏறி செல்ல வேண்டும்.

இதனால் வயதானவர்கள் பலர் மேலே ஏற சிரமப்பட்டு வருகின்றனர் கீழே அமர்ந்தாலும் சீட்டில் தான் அமர வேண்டும் என்பதால் அவர்கள் அந்த பஸ்களில் பயணிக்கவே யோசித்து வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கேட்ட தமிழக முழுவதும் இயங்கி வரும் ஏசி அல்லாத ஸ்லீப்பர் பஸ்களில் ஒரு முக்கியமான மாற்றத்தை கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி ஏசி அல்லாத ஸ்லீப்பர் பஸ்களில் கீழ்ப்பக்கம் ஒற்றை சீட்டாக இருக்கும் பகுதியை முழுவதும் ஸ்லீப்பர் பெட்டுகளாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனால் வயதானவர்கள் குழந்தைகள் என மேலே ஏற முடியாதவர்கள் இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இதற்காக தற்போது இயங்கி வரும் பஸ்களில் ஒற்றை சீட்டு உள்ள பகுதியில் சீட்டுகளை முழுவதுமாக நீக்கிவிட்டு அங்கு ஸ்லீப்பர் பெர்த்களை பொருத்துவதோடு ஃபுட் பாத் லைட்டுகளையும் பொருத்த திட்டமிட்டு வருகின்றனர். இந்த லைட்டுகள் அரசு பஸ்களில் இல்லாததும் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்தது.
நீண்ட தூர பஸ்கள் எல்லாம் பெரும்பாலும் இரவு நேரத்தில் பயணிப்பதால் இரவு நேரத்தில் பஸ்கள் நிற்கும்போது நடைபாதை லைட் இல்லாமல் பலர் சிரமப்பட்டு வருகின்றனர். தனியார் பஸ்களில் எல்லாம் இப்படியாக ஃபுட் பாத் லைட்டுகள் வழங்கப்பட்டு பயணிகளுக்கு பயனளிக்கும் வகையில் வசதிகளை செய்து கொடுக்கின்றனர்.
இதையடுத்து தமிழக அரசும் இந்த வசதிகளை அரசு பஸ்களில் கொண்டுவர இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. அடுத்த ஒரு சில நாட்களில் இதற்கான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பஸ் பயன்பாட்டிற்கு வரும்போது மக்களுக்கு மிகவும் செளகரியமான பயணம் தமிழக அரசு பஸ்களால் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழக அரசு பஸ் வசதியை செய்வதில் தனியாருடன் ஒப்பிடும்போது மிகவும் பின்தங்கியே இருக்கிறது. மற்ற மாநிலங்களில் எல்லாம் நீண்ட தூர பஸ் வசதிக்காக சிறப்பான பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தமிழகத்தின் பஸ்கள் போதுமான தகுதியில் இல்லை. தமிழக அரசு வேகமாக செயல்பட்டு போக்குவரத்து துறையில் தமிழகத்திற்கு சிறப்பான பஸ்களை வாங்கி செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.


Click it and Unblock the Notifications
