இனிமேல் வாலாட்ட முடியாது... தமிழக அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு திடீர் உத்தரவு... வெச்சு செய்ய போறாங்க!
தமிழக அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு அதிரடியான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் அதிக சாலை விபத்துக்கள் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உள்ளது. தமிழகத்தில் அரசு பஸ்களும் கூட அதிகளவில் சாலை விபத்துக்களில் சிக்கி வருகின்றன. ஒரு சில டிரைவர்கள் குடி போதையிலும், செல்போனில் பேசிக்கொண்டும் பஸ்களை இயக்குவது இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக கூறப்படுகிறது.

அரசு பஸ்களின் டிரைவர்கள் மட்டுமல்லாது, கண்டக்டர்கள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. எனவே அரசு பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் உள்பட போக்குவரத்து பணியாளர்களுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதை பின்பற்ற தவறுபவர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின்படி, அரசு பஸ்களின் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் உள்பட போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் பணியாளர்கள் யாரும் மது அருந்தி விட்டு பணிக்கு வரக்கூடாது. அத்துடன் புகை பிடித்து விட்டும் பணியாளர்கள் பணிக்கு வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் வரும் காலங்களில் அரசு பஸ்கள் சாலை விபத்துக்களில் சிக்குவது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போன்று பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதை பணியாளர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. டிரைவர்கள், கண்டக்டர்கள் மட்டுமல்லாது, போக்குவரத்து கழக பணியாளர்கள் அனைவருக்கும் இந்த உத்தரவு பொருந்தும். சாலை விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர பஸ் பணிமனைகளுக்குள் நாய், பூனை போன்ற விலங்குகளை அனுமதிக்க கூடாது எனவும் தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. பஸ்கள் மோதி விலங்குகள் உயிரிழக்க கூடிய அபாயம் உள்ளதால், அவற்றை உள்ளே விடக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் எளிதில் தீப்பற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ள பொருட்களை பஸ் பணிமனைகளில் இருந்து அகற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எளிதில் தீப்பற்ற வாய்ப்புகள் உள்ள பொருட்களை பஸ் பணிமனைகளில் இருந்து பாதுகாப்பான முறையில் அகற்றும் பணிகளை பணியாளர்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதே போன்று டிரைவிங் லைசென்ஸ் இல்லாத பணியாளர்கள் பஸ்களை ஓட்ட கூடாது எனவும் தற்போது வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப ரீதியிலான பணிகளை மேற்கொள்வதற்கு முன்னரும், மேற்கொண்ட பின்னரும் பஸ்களை பணிமனைகளுக்குள் இயக்க வேண்டிய சூழல் இருக்கும். அப்போது டிரைவிங் லைசென்ஸ் இல்லாத சில பணியாளர்கள் பஸ்களை ஓட்டுவதாக புகார்கள் இருந்து வருகின்றன. எனவேதான் கைவசம் டிரைவிங் லைசென்ஸ் இல்லாத பணியாளர்கள் பஸ்களை ஓட்ட கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகள் மூலமாக தமிழகத்தில் அரசு பஸ்கள் சாலை விபத்துக்களில் சிக்குவது கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு பஸ்கள் சாலை விபத்தில் சிக்குவதால், உயிர் பலி ஏற்படுவதுடன், போக்குவரத்து கழகத்திற்கு பொருளாதார ரீதியில் நெருக்கடிகளும் ஏற்பட்டு வருகின்றன என்பது இங்கே கண்டிப்பாக குறிப்பிட வேண்டிய விஷயம் ஆகும்.

அரசு பஸ்கள் ஏற்படுத்திய சாலை விபத்துக்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்க வேண்டியுள்ளது. ஆனால் போக்குவரத்து கழகத்தின் நிதி நெருக்கடி காரணமாக சில சமயங்களில் உரிய முறையில் இழப்பீடு வழங்க முடிவதில்லை. எனவே நீதிமன்ற உத்தரவின்படி, அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

தமிழகத்தில் ஏராளமான அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டுள்ளதால், பயணிகளுக்கான சேவையில் அவற்றை ஈடுபடுத்த முடியாத சூழல் காணப்படுகிறது. இதுவும் அரசு போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துகிறது. இப்படி பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதால்தான், அரசு பஸ்கள் மூலமாக ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைக்க தீவிரமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாகதான் தற்போது போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த உத்தரவுகளை போக்குவரத்து கழக பணியாளர்கள் அனைவரும் முறையாக பின்பற்றும்பட்சத்தில், தமிழகத்தில் அரசு பஸ்கள் சாலை விபத்துக்களில் சிக்குவது குறையும் என எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








