அடக்கடவுளே... மழைக்காக டோல்கேட்டில் ஒதுங்கியவருக்கு நேர்ந்த கதி... என்னனு தெரிஞ்சா கடுப்பாயிருவீங்க

திண்டுக்கல் அருகே இரு சக்கர வாகன ஓட்டியை சுங்கசாவடி ஊழியர்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடக்கடவுளே... மழைக்காக டோல்கேட்டில் ஒதுங்கியவருக்கு நேர்ந்த கதி... என்னனு தெரிஞ்சா கடுப்பாயிருவீங்க

தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கசாவடிகள் என்றாலே, ஓட்டுனர்களுக்கும், வாகன உரிமையாளர்களுக்கும் அலர்ஜிதான். சுங்கசாவடிகளில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராமல் கட்டண கொள்ளை நடைபெறுவதாக ஓட்டுனர்களும், வாகன உரிமையாளர்களும் நீண்ட காலமாக புகார் தெரிவித்து வருகின்றனர்.

அடக்கடவுளே... மழைக்காக டோல்கேட்டில் ஒதுங்கியவருக்கு நேர்ந்த கதி... என்னனு தெரிஞ்சா கடுப்பாயிருவீங்க

அத்துடன் சுங்கசாவடிகளில் விதிமுறைகளை மீறி கட்டணம் வசூல் செய்யப்படுவதாகவும் நீண்ட காலமாக புகார்கள் இருந்து வருகின்றன. எனவே வேண்டா வெறுப்பாகதான் சுங்கசாவடிகளில் ஓட்டுனர்களும், வாகன உரிமையாளர்களும் கட்டணம் செலுத்தி செல்கின்றனர். சுங்கசாவடிகளில் காத்திருக்கும் நேரமும் வாகன ஓட்டிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்துகிறது.

அடக்கடவுளே... மழைக்காக டோல்கேட்டில் ஒதுங்கியவருக்கு நேர்ந்த கதி... என்னனு தெரிஞ்சா கடுப்பாயிருவீங்க

பாஸ்ட்டேக் வருகைக்கு பின் காத்திருக்கும் நேரம் குறையும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன்பின்னரும் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாக கொரோனா வைரஸ் ஊரடங்கு அமலுக்கு வரும் முன் வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்து கொண்டே இருந்தனர். ஆனால் ஊரடங்கு அமலுக்கு வந்த பின்னர் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன போக்குவரத்து கடுமையாக குறைந்தது.

அடக்கடவுளே... மழைக்காக டோல்கேட்டில் ஒதுங்கியவருக்கு நேர்ந்த கதி... என்னனு தெரிஞ்சா கடுப்பாயிருவீங்க

இதன் காரணமாக சுங்கசாவடிகளும் வெறிச்சோடின. எனினும் தற்போது ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் வாகன போக்குவரத்து கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இதன் காரணமாக மீண்டும் சுங்கசாவடிகளில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாக ஒரு சில வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர்.

அடக்கடவுளே... மழைக்காக டோல்கேட்டில் ஒதுங்கியவருக்கு நேர்ந்த கதி... என்னனு தெரிஞ்சா கடுப்பாயிருவீங்க

இப்படி பல்வேறு அதிருப்திகளுக்கு மத்தியில் கட்டணம் செலுத்தும் வாகன ஓட்டிகள், சுங்கசாவடிகளில் நடைபெறும் அத்துமீறல்களை தட்டி கேட்டால், குண்டர்கள் மூலம் தாக்கப்படுவதாகவும் நீண்ட காலமாக உள்ளது. தற்போது அவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக நிகழ தொடங்கியிருப்பது வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அடக்கடவுளே... மழைக்காக டோல்கேட்டில் ஒதுங்கியவருக்கு நேர்ந்த கதி... என்னனு தெரிஞ்சா கடுப்பாயிருவீங்க

குறிப்பாக திண்டுக்கல் அருகே உள்ள கொடை ரோடு சுங்கசாவடியில், அதன் ஊழியர்கள், வாகன ஓட்டிகளை தாக்குவதாக தற்போது புகார்கள் எழுந்துள்ளன. கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர், கட்டணம் செலுத்துவது தொடர்பாக வாகன ஓட்டி ஒருவரை கொடை ரோடு சுங்கசாவடி ஊழியர்கள் தாக்க முயன்றதாக தகவல்கள் வெளிவந்தன.

அடக்கடவுளே... மழைக்காக டோல்கேட்டில் ஒதுங்கியவருக்கு நேர்ந்த கதி... என்னனு தெரிஞ்சா கடுப்பாயிருவீங்க

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது அதே சுங்கசாவடியில் மற்றொரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. இதன்படி கனமழை பெய்த காரணத்தால், இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் கொடை ரோடு சுங்கசாவடியில் ஒதுங்கியதாக கூறப்படுகிறது. அப்போது அவரை சுங்கசாவடி ஊழியர்கள் தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடக்கடவுளே... மழைக்காக டோல்கேட்டில் ஒதுங்கியவருக்கு நேர்ந்த கதி... என்னனு தெரிஞ்சா கடுப்பாயிருவீங்க

இதுகுறித்து நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. மழைக்காக ஒதுங்கிய இரு சக்கர வாகன ஓட்டியை சுங்கசாவடி ஊழியர்கள் தாக்கிய சம்பவம் வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த விவகாரத்தில் மேற்கொண்டு எந்த தகவல்களும் வெளியாகவில்லை. எனவே இதுகுறித்து காவல் துறை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Note: Toll Plaza Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tamil Nadu: Two Wheeler Rider Attacked By Toll Plaza Employees. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X