சத்தமே இல்லாமல் மத்திய அரசு செய்த காரியத்தால் ஷாக் ஆன தமிழகம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க...

சத்தமே இல்லாமல் மத்திய அரசு செய்த காரியத்தால், தமிழக மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சத்தமே இல்லாமல் மத்திய அரசு செய்த காரியத்தால் ஷாக் ஆன தமிழகம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க...

ஒட்டுமொத்த உலகையும் கொரோனா வைரஸ் (கோவிட்-19) படாதபாடு படுத்தி வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கியதாக கருதப்படும் கோவிட்-19 வைரஸ், அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் மிக கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் தற்போது கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

சத்தமே இல்லாமல் மத்திய அரசு செய்த காரியத்தால் ஷாக் ஆன தமிழகம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க...

இதை தடுப்பதற்காக இந்தியாவில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல், நாடு தழுவிய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கு கடந்த ஏப்ரல் 14ம் தேதியுடன் முடிவுக்கு வருவதாக இருந்தது. ஆனால் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்ததால், ஊரடங்கு தளர்த்தி கொள்ளப்படவில்லை.

சத்தமே இல்லாமல் மத்திய அரசு செய்த காரியத்தால் ஷாக் ஆன தமிழகம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க...

அதற்கு மாறாக வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், நேற்று முதல் (ஏப்ரல் 20) தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக ஊரடங்கு காரணமாகவும், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் வாகனங்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையிலும் டோல்கேட்களில் சுங்க கட்டணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்தது.

சத்தமே இல்லாமல் மத்திய அரசு செய்த காரியத்தால் ஷாக் ஆன தமிழகம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க...

டோல்கேட்களில் கட்டணம் வசூலிப்பதை, கடந்த மார்ச் 25ம் தேதியில் இருந்து, மத்திய அரசு தற்காலிகமாக ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. ஊரடங்கு காரணமாக போக்குவரத்து முடங்கியிருந்தாலும், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு இதனால் பயன் கிடைத்து வந்தது.

சத்தமே இல்லாமல் மத்திய அரசு செய்த காரியத்தால் ஷாக் ஆன தமிழகம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க...

இந்த சூழலில்தான், டோல்கேட்களில் சுங்க கட்டணம் வசூலிக்கும் பணிகள் ஏப்ரல் 20ம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு கடந்த ஒரு சில நாட்களுக்கு முன் வெளியானது. இதன்படி நேற்று முதல் சுங்க கட்டணம் மீண்டும் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் லாரி உரிமையாளர்களும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சத்தமே இல்லாமல் மத்திய அரசு செய்த காரியத்தால் ஷாக் ஆன தமிழகம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க...

மீண்டும் சுங்க கட்டண வசூல் என்ற அறிவிப்பை கேட்டு அதிர்ச்சியில் இருந்தவர்களுக்கு, சுங்க சாவடிகளில் நுழைந்தபோது மற்றொரு அதிர்ச்சி கிடைத்தது. ஆம், சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. தமிழகத்தை பொறுத்தவரை 26 டோல்கேட்களில் தற்போது சுங்க கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

சத்தமே இல்லாமல் மத்திய அரசு செய்த காரியத்தால் ஷாக் ஆன தமிழகம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க...

தமிழகத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் 48 டோல்கேட்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், 26 டோல்கேட்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. டோல்கேட்களுக்கு ஏற்றவாறு ரூ.5 முதல் ரூ.15 வரை கட்டணம் உயர்ந்துள்ளது. இதனால் லாரி உள்ளிட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சத்தமே இல்லாமல் மத்திய அரசு செய்த காரியத்தால் ஷாக் ஆன தமிழகம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க...

இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில், சுழற்சி அடிப்படையில் டோல்கேட்களில் சுங்க கட்டணம் மாற்றியமைக்கப்படும். இதன்படி கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

சத்தமே இல்லாமல் மத்திய அரசு செய்த காரியத்தால் ஷாக் ஆன தமிழகம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க...

ஆனால் சுங்க கட்டணம் வசூலிக்கும் பணிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருந்ததால், கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய கட்டணம் அமலுக்கு வரவில்லை. ஆனால் நேற்று முதல் டோல்கேட்களில் மீண்டும் கட்டண வசூல் தொடங்கப்பட்டுள்ளது. எனவே புதிய கட்டண உயர்வு அமலுக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது'' என்றனர்.

சத்தமே இல்லாமல் மத்திய அரசு செய்த காரியத்தால் ஷாக் ஆன தமிழகம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க...

அதே சமயம் தமிழகத்தின் எஞ்சிய டோல்கேட்களில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டண உயர்வு அமல் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த டோல்கேட்களில் அப்போதைய நிலவரத்திற்கு ஏற்ப கட்டண உயர்வு அமலுக்கு கொண்டு வரப்படலாம். போக்குவரத்து சங்கங்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில்தான் டோல்கேட்களில் தற்போது மீண்டும் கட்டண வசூல் தொடங்கப்பட்டுள்ளது.

சத்தமே இல்லாமல் மத்திய அரசு செய்த காரியத்தால் ஷாக் ஆன தமிழகம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க...

கட்டண வசூலை மீண்டும் தொடங்குவதை தள்ளி வைக்க வேண்டும் என எதிர்கட்சிகளும், பொதுமக்களும் விடுத்த கோரிக்கைகளையும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இரட்டை அதிர்ச்சியாக கட்டணமும் உயர்த்தப்பட்டிருப்பதால், வாகன உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர். இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

சத்தமே இல்லாமல் மத்திய அரசு செய்த காரியத்தால் ஷாக் ஆன தமிழகம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க...

தமிழகத்தில் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ள டோல்கேட்களின் விபரங்களை கீழே காணலாம்:

1. ஆத்தூர், தாம்பரம்-திண்டிவனம்

2. நல்லூர், சென்னை-தடா

3. பரனூர் (செங்கல்பட்டு), தாம்பரம்-திண்டிவனம்

4. சூரப்பட்டு, சென்னை பைபாஸ்

5. வானகரம், சென்னை பைபாஸ்

6. நெமிலி (ஸ்ரீபெரும்புதூர்)

7. வாணியம்பாடி, கிருஷ்ணகிரி-வாலஜாபேட்டை

8. சென்னசமுத்திரம் (வாலஜாபேட்டை)

சத்தமே இல்லாமல் மத்திய அரசு செய்த காரியத்தால் ஷாக் ஆன தமிழகம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க...

9. கிருஷ்ணகிரி, ஒசூர்-கிருஷ்ணகிரி

10. லம்பலக்குடி, திருச்சி-காரைக்குடி

11. லட்சுமணப்பட்டி, திருச்சி-காரைக்குடி

12. போகலூர், மதுரை-ராமநாதபுரம்

13. நாங்குநேரி, மூன்றடைப்பு-அஞ்சுகிராமம்

14. பூதக்குடி, திருச்சி பைபாஸ்-துவரங்குறிச்சி-மதுரை

15. பழைய கந்தர்வகோட்டை, தஞ்சாவூர்-புதுக்கோட்டை

16. பள்ளிகொண்டா, கிருஷ்ணகிரி-வாலஜாபேட்டை

17. சிட்டாம்பட்டி, திருச்சி பைபாஸ்-துவரங்குறிச்சி-மதுரை

சத்தமே இல்லாமல் மத்திய அரசு செய்த காரியத்தால் ஷாக் ஆன தமிழகம்... என்னனு தெரிஞ்சா கோவப்படுவீங்க...

18. பட்டறைபெரும்புதூர், திருப்பதி-திருத்தணி-சென்னை

19. புதுக்கோட்டை (வைகைகுளம்), திருநெல்வேலி-தூத்துக்குடி

20.எஸ்.வி.புரம், திருப்பதி-திருத்தணி-சென்னை

21.சாலைப்புதூர், மதுரை-திருநெல்வேலி-பனகுடி-கன்னியாகுமரி

22.செண்பகம்பேட்டை, திருமயம்-மானாமதுரை

23.எட்டூர்வட்டம், மதுரை-திருநெல்வேலி-பனகுடி-கன்னியாகுமரி

24.திருப்பாச்சேத்தி, மதுரை-ராமநாதபுரம்

25.கனியூர், செங்கப்பள்ளி-கோயமுத்தூர் பைபாஸ்

26.கப்பலூர், மதுரை-திருநெல்வேலி-பனகுடி-கன்னியாகுமரி

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tamil Nadu: User Fee Hiked By Rs.5 To Rs.15 In 26 Toll Plazas. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X