தமிழ்நாட்டு போலீஸார் இப்படி செய்வாங்கனு எதிர்பார்க்கல!! மற்றவர்களுக்கு முன் உதாரணமா இருக்க வேண்டாமா?

வாகனங்களை மாடிஃபை செய்து பயன்படுத்துவது சட்டப்படி குற்றமாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், நம் தமிழ்நாட்டை சேர்ந்த வேலூர் போலீஸார் தங்களது பயன்பாட்டிற்காக மாடிஃபை வாகனங்களை உபயோகப்படுத்த துவங்கியுள்ளனர். இதுகுறித்தும், இந்த மாடிஃபை வாகனங்களை பற்றியும் இனி பார்க்கலாம்.

ஒரு நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் வாகனத்தை வாங்கும் கஸ்டமர்ஸால் அந்த வாகனத்தை மாடிஃபை செய்ய முடியாது. அதாவது, வாகனத்தின் வெளிப்பக்க பேனல்களில் இருந்து, முக்கியமான என்ஜின் வரையில் எந்த பாகத்தையும் நீக்கி, பொருத்தமே இல்லாத வேறொரு பாகத்தை பொருத்த முடியாது.

police with modified force traveller

வாகனத்தின் நிறத்தை வேண்டுமாயின் மாற்றி கொள்ளலாம். ஆனால், அப்போதும் தற்காலிக வ்ராப்பை கொண்டு மட்டுமே வாகனத்தின் நிறத்தை மாற்ற வேண்டும். இதைதான் மோட்டார் வாகன சட்டம் சொல்கிறது. வாகனத்தில் முக்கியமான மாற்றங்களை செய்ய விருப்பப்படுகிறீர்கள் எனில், இதற்கென அங்கீகரிக்கப்பட்ட கஸ்டமைஸ்ட் நிறுவனத்தை அணுக வேண்டும்.

சட்டத்திற்கு புறம்பாக, வாகனங்களை மாடிஃபை செய்வது நம் தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதுமே அபராதத்திற்கு உரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் போலீஸாரின் ஃபோர்ஸ் டிராவலர் வாகனங்கள் மிகவும் அதிகளவிலான மாடிஃபிகேஷன்ஸ் உடன் அடையாளம் காணப்பட்டுள்ளன. நகரும் கண்ட்ரோல் மையமாக இந்த ஃபோர்ஸ் டிராவலர் வாகனத்தை தமிழ்நாட்டு போலீஸார் பயன்படுத்தவுள்ளனர்.

இதற்காக வாகனத்தை சுற்றிலும் ஏகப்பட்ட பாதுகாப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. நமக்கு கிடைத்துள்ள படங்களில், தமிழக போலீஸாரின் இந்த டிராவலர் வாகனத்தின் வெளிப்பக்கத்தில் சிசிடிவி கேமராக்கள், மேற்கூரையில் ஃப்ளாஷ் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. இவ்வளவு ஏன், ட்ரோன்கள் கூட இந்த ஃபோர்ஸ் டிராவலரில் உள்ளன.

இந்த போலீஸ் கண்ட்ரோல் வாகனம் தற்சமயம் சோதனை ஓட்டங்களில் உள்ளது. இந்த சோதனையை வேலூர் மாவட்டத்தை சேர்ந்த போலீஸார் மேற்கொண்டுள்ளனர். இந்த வாகனத்தின் முக்கிய பணி என்னவென்றல், குறிப்பிட்ட நகர/ கிராம பகுதிக்குள் நடக்கும் குற்ற செயல்களை ரியல்-டைமில் கண்காணித்து போலீஸ் நிலையத்தில் இருக்கும் கண்ட்ரோல் மையத்திற்கு தெரிவிப்பது ஆகும்.

police with modified force traveller

அதாவது, குற்ற சம்பவங்கள் அல்லது விபத்து உள்பட அசம்பாவிதங்களுக்கு நடைபெறும் பகுதிக்கு விரைவாக சென்று, தேவையான முதற்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆகும். அதுமட்டுமின்றி, போலீஸாரின் பார்வையில் இருந்து மறைந்து நடத்தப்படும் குற்றங்களையும் கண்டறிந்து போலீஸ் கண்ட்ரோல் மையத்திற்கு தெரிவிக்கும் பணியில் ஈடுப்படும் போலீஸாரும் இந்த டிராவலர் வாகனத்தை பயன்படுத்துவர்.

முக்கியமாக இத்தகைய வாகனங்கள் பேரணி, ஊர்வலத்தின்போது மிகவும் அத்தியாவசியமானதாக இருக்கும். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, வேலூர் மாவட்டத்தில் முக்கிய நகரங்களான வேலூர் புறநகர், குடியாத்தம், பெர்னாம்பட், வாலஜா, ஆர்காட், ஆம்பூர் மற்றும் வாணியம்பாடியில் இந்த மாடிஃபை ஃபோர்ஸ் டிராவலர் வாகனங்கள் போலீஸாரால் பயன்படுத்தப்பட உள்ளன.

police with modified force traveller

தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், 4 நெட்வொர்க் வீடியோ ரெகார்டர் கேமராக்கள் மற்றும் 360-டிகிரி பேன் டில்ட் ஸூம் கேமரா உள்ளிட்டவற்றுடன் கட்டிங்-எட்ஜ் தொழிற்நுட்பத்துடன் இந்த வாகனம் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. மேற்கூறப்பட்ட ஒவ்வொரு கேமராவும் 500 மீட்டர்கள் தொலைவிற்கு காட்சிகளை காட்சிப்படுத்தக் கூடியவை.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: பொது மக்கள் பயன்படுத்தும் வாகனங்களை கொண்டு குற்றவாளிகளை பிடிப்பது சிரமமாகும். ஏனெனில் போலீஸாரும் நம்மை போல் மனிதர்களே ஆவர். ஆதலால் இவ்வாறான கேமராக்கள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் போலீஸாரின் பயன்பாட்டிற்கு அவசியமாகிறது. போலீஸார் மட்டுமே இத்தகைய வாகனங்களை பயன்படுத்துகிறார்களே என இந்த விஷயத்தில் நாம் குரல் எழுப்புவது முறையற்றது.

Article Published On: Friday, July 7, 2023, 19:23 [IST]
English summary
Tamil nadu vellore police with modified force traveller
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X