போலீஸ் வாகன தணிக்கையில் நடந்த விபரீத சம்பவம்... வாழ்க்கையை முடித்து கொண்ட சென்னை இளம்பெண்...

போலீஸ் வாகன தணிக்கையில் நடந்த விபரீத சம்பவம் காரணமாக சென்னை இளம்பெண் வாழ்க்கையை முடித்து கொண்டுள்ளார்.

போலீஸ் வாகன தணிக்கையில் நடந்த விபரீத சம்பவம்... வாழ்க்கையை முடித்து கொண்ட சென்னை இளம்பெண்...

இந்தியாவில் கடந்த செப்டம்பர் 1ம் தேதி புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. இதில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகள் அனைவரும் போக்குவரத்து விதிமுறைகளை ஒழுங்காக கடைபிடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த அதிரடி நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது.

போலீஸ் வாகன தணிக்கையில் நடந்த விபரீத சம்பவம்... வாழ்க்கையை முடித்து கொண்ட சென்னை இளம்பெண்...

ஆனால் அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால், புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஒரு சில மாநில அரசுகளே இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஒரு சில மாநில அரசுகள், அபராத தொகைகளை அதிரடியாக குறைத்துள்ளன.

போலீஸ் வாகன தணிக்கையில் நடந்த விபரீத சம்பவம்... வாழ்க்கையை முடித்து கொண்ட சென்னை இளம்பெண்...

இருந்தபோதும் புதிய மோட்டார் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, வாகன ஓட்டிகளிடம் போலீசார் கடுமையாக கெடுபிடி காட்டி வருகின்றனர். தமிழ் நாட்டை பொறுத்தவரை புதிய மோட்டார் வாகன சட்டத்தின் கீழ், வாகன ஓட்டிகளுக்கு போலீசார் பெரும்பாலும் அபராதம் விதிப்பது கிடையாது. தமிழகத்தில் அபராத தொகைகள் குறைக்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

போலீஸ் வாகன தணிக்கையில் நடந்த விபரீத சம்பவம்... வாழ்க்கையை முடித்து கொண்ட சென்னை இளம்பெண்...

ஆனால் அதன்பின் அது தொடர்பாக எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. எனினும் போலீசார் வழக்கம் போல வாகன தணிக்கையில் கடும் கெடுபிடி காட்டி கொண்டுதான் உள்ளனர். இந்த சூழலில் போலீசாரின் வாகன தணிக்கையால் சாலை விபத்தில் சிக்கிய பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் வாகன தணிக்கையில் நடந்த விபரீத சம்பவம்... வாழ்க்கையை முடித்து கொண்ட சென்னை இளம்பெண்...

இந்த விபரீத சம்பவம் தமிழக தலைநகர் சென்னையில் அரங்கேறியுள்ளது. சென்னை செங்குன்றம் அருகே உள்ள நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிவந்தி ஆதித்தன் நகரை சேர்ந்தவர் யுவனேஷ். இவருக்கும் பிரிய தர்ஷினி என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த சூழலில் கடந்த செப்டம்பர் 20ம் தேதி பிரியதர்ஷினி டூவீலரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

போலீஸ் வாகன தணிக்கையில் நடந்த விபரீத சம்பவம்... வாழ்க்கையை முடித்து கொண்ட சென்னை இளம்பெண்...

செங்குன்றத்தில் இருந்து அவர் வீடு நோக்கி பயணித்து கொண்டிருந்தார். அப்போது சரியாக மாலை 5 மணி என கூறப்படுகிறது. அந்த சமயத்தில் திருவள்ளூர் நெடுஞ்சாலை காந்தி நகர் போலீஸ் பூத் அருகே காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் பிரியதர்ஷினி வந்த டூவீலரை லத்தியை காட்டி தடுத்து நிறுத்த முயன்றனர்.

போலீஸ் வாகன தணிக்கையில் நடந்த விபரீத சம்பவம்... வாழ்க்கையை முடித்து கொண்ட சென்னை இளம்பெண்...

ஆனால் அப்போது பிரியதர்ஷினி வளைவில் திரும்பி கொண்டிருந்ததால், அவரால் டூவீலரை கட்டுப்படுத்த முடியவில்லை. நிலை தடுமாறிய பிரியதர்ஷினி சாலையில் விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்று பிரியதர்ஷினியின் மீது மோதியது. இதனால் இடுப்பு மற்றும் கால்களில் பிரியதர்ஷினிக்கு காயம் ஏற்பட்டது.

போலீஸ் வாகன தணிக்கையில் நடந்த விபரீத சம்பவம்... வாழ்க்கையை முடித்து கொண்ட சென்னை இளம்பெண்...

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் உடனே பிரியதர்ஷினியை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. முன்னதாக இந்த சம்பவம் காரணமாக மக்கள் கடும் ஆத்திரமடைந்தனர். இந்த சம்பவத்தை கண்டிக்கும் விதமாக அவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போலீஸ் வாகன தணிக்கையில் நடந்த விபரீத சம்பவம்... வாழ்க்கையை முடித்து கொண்ட சென்னை இளம்பெண்...

மேலும் சம்பவ இடத்தில் இருந்து போலீஸ் பூத் மற்றும் காவல் துறையினர் வாகனங்களை அவர்கள் அடித்து நொறுக்கினர். இந்த சம்பவங்கள் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக சோழவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதன்பின்னர் சிவந்தி நகர் மற்றும் காந்தி நகர் பகுதிகளை சேர்ந்த 10க்கும் அதிகமானோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

போலீஸ் வாகன தணிக்கையில் நடந்த விபரீத சம்பவம்... வாழ்க்கையை முடித்து கொண்ட சென்னை இளம்பெண்...

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பிரியதர்ஷினி தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த பின் பிரியதர்ஷினி சமீபத்தில் வீடு திரும்பினார். இந்த சூழலில் அவர் தற்போது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

போலீஸ் வாகன தணிக்கையில் நடந்த விபரீத சம்பவம்... வாழ்க்கையை முடித்து கொண்ட சென்னை இளம்பெண்...

விபத்தில் சிக்கியதால் ஏற்பட்ட உடல் நல பாதிப்புகள் காரணமாக அவர் மனமுடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகதான் அவர் வீட்டில் யாரும் இல்லாதபோது புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் வாகன தணிக்கையில் நடந்த விபரீத சம்பவம்... வாழ்க்கையை முடித்து கொண்ட சென்னை இளம்பெண்...

வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.

Note: Accident Images used are for representational purpose only.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tamil Nadu Woman, Who Lost Her Leg In Road Accident During Police Vehicle Checking, Kills Self. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X