தேவத மாதிரி இருக்காங்க! மஹிந்திரா காரை ஷோரூமுக்கே வந்து வாங்கனது அவங்களா! நேர்ல பாக்க குடுத்து வெச்சிருக்கணும்

ஸ்ரீகோபிகா (Shree Gopika) என்ற பெயரை கேள்விப்படாத இல்லத்தரசிகளே தமிழ்நாட்டில் இருக்க முடியாது. பிரபல சீரியல் நடிகையான (Serial Actress) இவர் தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். அது மஹிந்திரா தார் (Mahindra Thar) ஆகும். இது எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்தது.

புத்தம் புதிய மஹிந்திரா தார் எஸ்யூவி காரை டெலிவரி எடுப்பது மற்றும் ஓட்டுவது ஆகிய காட்சிகள் அடங்கிய வைரல் வீடியோவை (Viral Video), ஸ்ரீகோபிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

Mahindra Thar

இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மஹிந்திரா தார் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை 11.25 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 17.20 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

பொதுவாக நடிகைகள் பலரும் சொகுசு எஸ்யூவி கார்களைதான் வாங்குவார்கள். ஆனால் ஸ்ரீகோபிகா வாங்கியுள்ள மஹிந்திரா தார், லைஃப்ஸ்டைல் எஸ்யூவி (Lifestyle SUV) ரகத்தை சேர்ந்தது. சவால் நிறைந்த ஆஃப் ரோடு (Off-road) பயணங்களுக்கும் மஹிந்திரா தார் எஸ்யூவி காரை பயன்படுத்த முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Tamil Serial Actress Shree Gopika Buys Mahindra Thar SUV

எனவே ஸ்ரீகோபிகா மஹிந்திரா தார் எஸ்யூவி காரை வாங்கியிருப்பது பலரின் புருவங்களையும் உயர்த்தியுள்ளது. மஹிந்திரா தார் எஸ்யூவி காரில் பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) என 2 வகையான இன்ஜின் ஆப்ஷன்களும் வழங்கப்படுகின்றன. அத்துடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் என 2 வகையான கியர் பாக்ஸ் ஆப்ஷன்களும் கொடுக்கப்படுகின்றன.

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஜிம்னி ​(Maruti Suzuki Jimny) மற்றும் ஃபோர்ஸ் குர்கா (Force Gurkha) ஆகிய கார்களுடன், மஹிந்திரா தார் போட்டியிட்டு வருகிறது. ஸ்ரீகோபிகாவிற்கு முன்னதாக இன்னும் பல்வேறு பிரபலங்களும் மஹிந்திரா தார் எஸ்யூவி காரை வாங்கியுள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

இதில், பிரகாஷ் ராஜ் (Prakash Raj) மற்றும் கியாரா அத்வானி (Kiara Advani) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். இதுதவிர கிரிக்கெட் வீரர்கள் பலருக்கும், மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவால் (Anand Mahindra), மஹிந்திரா தார் எஸ்யூவி கார் பரிசாகவும் வழங்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் மஹிந்திரா தார் எஸ்யூவி கார் சாமானிய வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாது, பிரபல மனிதர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வருகிறது. சீரியல் நடிகை ஸ்ரீகோபிகா மூலம் இது மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, February 24, 2024, 23:39 [IST]
English summary
Tamil serial actress shree gopika buys mahindra thar suv viral video
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+