கல்யாணத்துக்கு முன்னாடியே இத வாங்கிட்டாங்களா! பின்னணி குரல்-தாங்க அல்டிமேட்டே.. தனியாளா ஜெயிச்சிருக்காங்க!
ஒட்டுமொத்த தமிழ் திரையுலகின் இப்போதைய டாக்காக காமெடி நடிகர் கிங்ஸ்லீ மற்றும் தொலைக்காட்சி தொடர் நடிகை சங்கீதாவின் திருமணம் பற்றியது இருக்கின்றது. சினிமாவில் குழு நடனக் கலைஞராக அறிமுகமானவரே ரெடின் கிங்ஸ்லி ஆவார். இவர் ஓர் சிறந்த பிசினஸ் மேனும் ஆவார்.
ஸ்பெல் ஃபோன் எனும் ஈவெண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தை அவர் நடத்தி வருகின்றார். இதுதவிர, நடன பயறிச்சி பள்ளி ஒன்றையும் அவர் நடத்தி வருகின்றார். இந்த நிலையிலேயே ரெடின் கிங்ஸ்லி, சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார். இவர்களின் திருமணம் கடந்த ஞாயிற்றுக் கிழமை (டிசம்பர் 10) அன்றே நடைபெற்றது.

மைசூரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புதிய படப்பிடிப்பு தளத்தில் வைத்தே அவர்கள் திருமணம் செய்துக் கொண்டனர். இந்த நிலையிலேயே, சங்கீதா புதிய கார் ஒன்றை வாங்கியது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகத் தொடங்கி இருக்கின்றது. அவர் ஹூண்டாய் நிறுவனத்தின் கவர்ச்சிகரமான தயாரிப்புகளில் ஒன்றான வெர்னா காரையே வாங்கி இருக்கின்றார்.
இது ஓர் பிரீமியம் தர செடான் ரக கார் மாடல் ஆகும். இந்த காரின் ஆரம்ப விலையே ரூ. 10.96 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். அதேவேளையில், இந்த கார் மாடலின் உயர்நிலை தேர்வானது 17.37 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இத்தகைய விலை உயர்ந்த கார் மாடலையே சங்கீதா வாங்கி இருக்கின்றார்.

பாதுகாப்பு விஷயத்தில் மிக சிறந்த ரேட்டிங்கைப் பெற்ற கார் மாடலாகவும் ஹூண்டாய் வெர்னா காட்சியளிக்கின்றது. ஐந்துக்கு 5 ஸ்டார்களையே இந்த கார் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றிருக்கின்றது. சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என இருவர்களின் பாதுகாப்பு விஷயத்திலும் இத்தகைய ரேட்டிங்கையே அது பெற்றிருக்கின்றது.
ஹூண்டாய் நிறுவனம் இந்த காரில் 30-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அம்சங்களை ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கி இருக்கின்றது. ஆறு ஏர்பேக்குகள், மும்முனை சீட் பெல்ட், சீட் பெல்ட் ரிமைண்டர் போன்ற அத்தியாவசிய பாதுகாப்பு அம்சங்களை மிகவும் தாராளமாக வெர்னாவில் ஹூண்டாய் வழங்கி இருக்கின்றது.

இதுதவிர அட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சத்தின் வாயிலாக தானாக பிரேக் பிடித்தல், வேகமாக செல்லும்போது தானாக கதவுகளை லாக் செய்வது, ஆட்டமேட்டிக் ஹெட்லேம்ப் மற்றும் விபத்து நேரங்களில் தானாகவே கதவுகளை திறத்தல் உள்ளிட்ட வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இதுபோன்று இன்னும் பல பாதுகாப்பு அம்சங்களை ஹூண்டாய் நிறுவனம் இந்த வெர்னா காரில் வழங்கி இருக்கின்றது. மிக முக்கியமாக இஎஸ்சி, ஹில் அசிஸ்ட் கன்ட்ரோல், டிஸ்க் பிரேக்குகள், ஃப்ரண்ட் பார்க்கிங் சென்சார்கள் போன்ற அம்சங்களையும் இந்த செடான் காரில் உற்பத்தியாளர் கொடுத்திருக்கின்றார்.

ஆனால், இதுபோன்ற உயர்நிலை பாதுகாப்பு அம்சங்கள் வெர்னாவின் உயர்நிலை தேர்விலேயே கிடைக்கும் என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். டயர் பிரஷ்ஷர் மானிட்டரிங் சிஸ்டம், கார்னரிங் லேம்ப் மற்றும் ஹூண்டாய் ஸ்மார்ட் சென்ஸ் உள்ளிட்ட அம்சங்களையும் உயர்நிலை தேர்வுகளில் பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும், ஹூண்டாய் வெர்னாவின் ஆரம்ப நிலை வேரியண்டுகளில் 8.0 அங்குல தொடு திரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் இணைப்பு வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், இதன் உயர்நிலை தேர்வில் 10.25 அங்குல திரை வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், வெர்னாவில் ஸ்பிளிட் ரக ஹெட்லேம்ப் வழங்கப்பட்டு இருக்கின்றது.

மேலும், முகப்பு பகுதியின் முழு நீளத்தை ஆளும் வகையில் மெல்லிய பகல்நேர எல்இடி லைட் ஆகியவையும் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்தகைய சூப்பரான காரையே கிங்ஸ்லியின் மனைவி சங்கீதா வாங்கி இருக்கின்றார். இந்த காரை அவர் திருமணத்திற்கு முன்னதாகவே வாங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 46 ஆண்டுகளாக திருமணம் ஆகாமல் இருந்தநிலையில் இப்போதே கிங்ஸ்லி திருமணம் நடைபெற்றிருக்கின்றது. ஆகையால், இவரின் திருமணம் பற்றிய பேச்சே தமிழ் திரையுலகம் முழுவதும் உள்ளது. பலர் சங்கீதாவின் கார் கொள்முதலுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். குறிப்பாக, திரையுலகம் இவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications









