சென்னை-நெல்லை வந்தேபாரத் ரயில் கன்ஃபார்ம்! எதுக்காக வெயிட்டிங் தெரியுமா?

தமிழகத்திற்கு 3வது வந்தே பாரத் ரயிலாகச் சென்னை- திருநெல்வேலி இடையே விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து மத்திய இணையமைச்சர் எல் முருகன் சமீபத்தில் ஒரு பொதுமக்கள் மத்தியில் பேசியிருந்தார். இது எந்த அளவிற்குச் சாத்தியம் என்பதைத் தான் இந்த பதிவில் நாம் விரிவாகக் காணப்போகிறோம்.

இந்தியாவில் வந்தே பாரத் எனப்படும் இந்தியாவிலேயே முழுமையாகத் தயாரிக்கப்பட்ட செம ஹைஸ்பீடு ரயில்கள் ஒவ்வொரு ரூட்டிலும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அதிக முன்னுரிமை கொண்ட இந்த ரயிலில் பயணிக்க மக்கள் பலர் ஆர்வமாக இருக்கின்றனர். இந்த ரயில் தங்கள் பகுதிக்கு வரவேண்டும் என மக்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர்.

chennai to tirunelveli vande bharat

வந்தே பாரத் ரயிலைப் பொருத்தவரை தற்போது தமிழகத்திற்கு 2 ரூட்டில் தான் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையிலிருந்து பெங்களூரு வழியாக மைசூருவிற்கும், அடுத்ததாகச் சென்னையிலிருந்து ஈரோடு வழியாகக் கோவைக்கும் இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்திற்கான 3வது வந்தே பாரத் ரயில் தென் தமிழகத்திற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

அதன் படி சமீபத்தில் மத்திய இணையமைச்சர் எல் முருகன் தமிழகத்திற்கான 3வது வந்தே பாரத் ரயில் குறித்து சமீபத்தில் ஒரு கூட்டத்தில் பேசியிருந்தார். அதில் அவர் சென்னையிலிருந்து - நெல்லை வரை வந்தே பாரத் ரயில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவித்திருந்தார். இது குறித்து ரயில்வே வட்டாரங்களில் விசாரித்த போது இந்த தகவல் உண்மை என்பது தெரியவந்துள்ளது.

chennai to tirunelveli vande bharat

ஏற்கனவே நெல்லை எம்எல்ஏ நைனார் நாகேந்திரன் இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவிடம் இது குறித்துப் பேசியிருந்தார். அப்பொழுதே இதற்கான பணிகள் துவங்கப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. இந்த ரயில் சென்னை - திருச்சி - மதுரை - நெல்லை ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.

தமிழகத்தில் இந்த ரயில் ரூட்கள் அதிகமாக மக்கள் பயன்படுத்தி வரும் ரயில் ரூட்டாகும். இந்த ரூட்டில் வந்தேபாரத் ரயில் வந்தால் அதற்குச் சிறப்பான வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரூட்டில் வந்தே பாரத் ரயில் 138 கி.மீ வேகத்தில் பயணிக்க அனுமதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

chennai to tirunelveli vande bharat

இந்நிலையில் இவ்வளவு வேகத்தில் ரயில் பயணிக்கும் அளவிற்குத் தண்டவாளங்களைத் தயார் செய்ய வேண்டும் என்பதற்கான அதற்கான சோதனை நடந்து வருவதாகவும். அந்த சோதனையில் இந்த வேகத்தில் ரயில் செல்வதற்கான தண்டவாளங்கள் இந்த வழித் தடத்தில் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்த பிறகு இந்த ரயிலுக்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தண்டவாளங்கள் மட்டுமல்லாமல் வழியில் உள்ள சிறிய பாலங்களின் பலத்தையும் ஆய்வு செய்து வருகின்றனர். பெரிய பாலங்களில் ரயில் வேகம் குறைக்கப்படும்.உதாரணமாகக் காவேரி ஆற்றுப் பாலம், வைகை ஆற்றுப் பாலங்களை ரயில் கடக்கும் போது குறைவான வேகத்தில் தான் கடந்து செல்லும். ஆனால் சிறிய பாலங்கள் பலமாக இருக்கவேண்டும் என்பதால் சற்று காலதாமதம் ஆகலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழகத்திற்கான 3வது வந்தேபாரத் ரயில் வருவது உறுதியாகியுள்ளது. எப்பொழுது இது துவங்கப்படும் என்ற அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகக் கூடும். சென்னையிலிருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் இந்த ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயிலுக்காக தென் மாவட்ட மக்கள் வெயிட்டிங்.

More from DriveSpark

Article Published On: Sunday, June 18, 2023, 16:34 [IST]
English summary
Tamilnadu 3rd vande bharat train confirmed on chennai to tirunelveli route
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X