சென்னையில் ரூ. 2,000 கோடி செலவில் வாகன நிறுத்துமிடம்: ஓபிஎஸ்!

தமிழக அரசின் 2019-20 ஆம் ஆண்டுக்கான நிதி நிலைய அறிக்கையை துணை முதலமைச்சரும், நிதியமைச்சருான ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.

பட்ஜெட் 2019

2019-20ம் ஆண்டிற்கான பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை தமிழக துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இவர், இத்துடன் 8வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

காலை 10 மணிக்கு ஆரம்பித்த பட்ஜெட் தாக்கல் மதியம் சுமார் 1 மணி வரை நடைபெற்றது. மேலும், இந்த பட்ஜெட்டில் பல்வேறு துறைகளின் மேம்பாட்டிற்காக பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது.

பட்ஜெட் 2019

அதில், சாலை மற்றும் போக்குவரத்துறைச்சார்ந்த நிதி ஒதுக்கீடுகளை இந்த பதிவில் பார்ப்போம்.

போக்குவரத்து துறைக்கு ரூ.1,297 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ. 2,681 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

டீசல் மானியத்திற்காக 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அம்மா இருசக்கர வாகன திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ரூ. 250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் 2019

இதைத்தொடர்ந்து, சென்னையில் ரூ. 2,000 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட நவீன வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் என ஓபிஎஸ் தெரிவித்தார். அதில், 2 லட்ச நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 2 லட்ச இரு சக்கர வாகனங்களை நிறுத்தக்கூடிய அளவில் கட்டமைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

பட்ஜெட் 2019

மேலும், முன்னதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறியிருந்ததை உறுதிப்படுத்தும் வகையில், ஜெர்மன் நாட்டின் வங்கி மூலம் கடன் பெற்று 2 ஆயிரம் மின்சாரம் மற்றும் 12 ஆயிரம் பிஎஸ்-4 ரக பேருந்துகளை வாங்க இருப்பதாக அறிவித்தார்.

பட்ஜெட் 2019

அதில், முதற்கட்டமாக சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 500 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தகவல் தெரிவித்தார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tamilnadu Budget 2019 Allotted Various Public Dept. Read In Tamil.
Story first published: Friday, February 8, 2019, 15:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X