முதல்வர் ஜெயலலிதாவின் கார் கலெக்ஷன்... அவரது பிறந்தநாள் ஸ்பெஷல்!

By Saravana

சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தலில் வெற்றி பெறும் வியூகத்துடன் அனைத்து அரசியல் கட்சிகளும் கற்ற வித்தைகளையும் போட்டு காட்டி வருகின்றன. ஆளும் அதிமுகவும் தேர்தல் பணிகளை கமுக்கமாக செய்து வருகிறது. இந்தநிலையில், அதிமுக தலைவரும், முதல்வருமான ஜெயலலிதா தனது 68வது பிறந்தநாள் விழாவை இன்று கொண்டாடுகிறார்.

தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திரமாக ஜொலித்து, பின்னர் தமிழகத்தின் முக்கிய அரசியல் சக்தியாக வலம் வரும் முதல்வர் ஜெயலலிதா மிக தீவிரமான வாகன பிரியர். இது அவரது வாகன சேகரிப்பை பார்த்தாலே புரிந்துவிடும். மேலும், தான் வாங்கிய அம்பாசடர் காரை 35 ஆண்டுகளாக அவர் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார் என்றால் அவருக்கு கார்கள் மீது இருக்கும் கொள்ளை பிரியம் புலனாகும். வாருங்கள், முதல்வர் ஜெயலலிதாவும் கார் கலெக்ஷன் மற்றும் சுவாரஸ்யமானத் தகவல்களுடன் இந்த செய்தித் தொகுப்பு அமைகிறது.

கார் கலெக்ஷன் விபரம்

கார் கலெக்ஷன் விபரம்

கடந்த ஆண்டு ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அவர் போட்டியிட்டபோது, அவரிடம் இருக்கும் கார்களின் விபரங்களை வெளியிட்டார். அதன்படி, அவரிடம் 9 கார் உள்ளிட்ட வாகனங்கள் உள்ளன. அந்த வாகனங்களின் மொத்த மதிப்பு ரூ.42.25 லட்சம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தற்போது பயன்படுத்தும் டொயோட்டா எல்சி200 கார்கள் அவரது பெயரில் இல்லை.

அம்பாசடர் கார்

அம்பாசடர் கார்

முதல்வர் ஜெயலலிதா ஜோதிட நம்பிக்கையும் சென்டிமென்ட்டும் மிக்கவர். அவரிடம் 1980 மாடல் அம்பாசடர் கார் ஒன்று இருக்கிறது. இதன் மதிப்பு 10,000 ரூபாயாக வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த காரை ராசிமிக்கதாகவும் கருதி, பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்.

மினி பஸ்

மினி பஸ்

1988ம் ஆண்டு மாடல் ஸ்வராஜ் மஸ்தா மேக்ஸி மினி பஸ் ஒன்றும் இருப்பதாக வேட்பு மனுவில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார். இந்த மினி பஸ்ஸின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.10,000 என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையும் தன்னுடைய கராஜில் வைத்து பராமரித்து வருகிறார்.

03. டெம்போ ட்ராக்ஸ்

03. டெம்போ ட்ராக்ஸ்

1989ம் ஆண்டு மாடல் டெம்போ ட்ராக்ஸ் எஸ்யூவி ஒன்றும் அவரது பெயரில் இருக்கிறது. இந்த எஸ்யூவியின் தற்போதைய மதிப்பு ரூ.30,000 என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 04. கான்டெஸா கார்

04. கான்டெஸா கார்

1990ம் ஆண்டு கான்டெஸா கார் ஒன்றும் தன்னிடம் இருப்பதாக ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார். அந்த கால சொகுசு கார் மாடலாக வர்ணிக்கப்படும் கான்டெஸ்ஸா காரின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.5,000 என வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 05. மஹிந்திரா பொலிரோ

05. மஹிந்திரா பொலிரோ

இந்தியாவின் சிறந்த எஸ்யூவி மாடலாக விளங்கி வரும் மஹிந்திரா பொலிரோவும் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருக்கிறது. 2000ம் ஆண்டு மாடலான இந்த எஸ்யூவியின் தற்போதைய மதிப்பு ரூ.80,000 என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 06. டெம்போ டிராவலர் வேன்

06. டெம்போ டிராவலர் வேன்

அரசியல் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்கு ஆஸ்தான வாகனமாக விளங்கும் டெம்போ டிராவலர் ஒன்றும் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருக்கிறது. 2000ம் ஆண்டு மாடலான இந்த டெம்போ டிராவலரின் இப்போதைய மதிப்பு ரூ.80,000 என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

07. மஹிந்திரா ஜீப்

07. மஹிந்திரா ஜீப்

இந்தியர்களின் பிரியமான ஆஃப்ரோடு வாகனமான மஹிந்திரா ஜீப் ஒன்றும் உள்ளது. 2001ம் ஆண்டு மாடலான இந்த மஹிந்திரா ஜீப்பின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.10,000 என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

08. டொயோட்டா பிராடோ

08. டொயோட்டா பிராடோ

தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் இரண்டு டொயோட்டா பிராடோ சொகுசு எஸ்யூவிகள் உள்ளன. 2010ம் ஆண்டு மாடலாக இவை இரண்டும் குறிப்பிடப்பட்டிருப்பதுடன், ஒவ்வொன்றின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.20 லட்சம் என்று வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், முதல்வர் ஜெயலலிதா இப்போது பயன்படுத்தும் ஆஸ்தான வாகனம் எது தெரியுமா? அடுத்த ஸ்லைடிற்கு வாருங்கள்.

இப்போது...

இப்போது...

தற்போது 4 டொயோட்டா எல்சி200 எஸ்யூவிகள் முதல்வர் ஜெயலலிதாவிடம் உள்ளது. அதில், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட இரண்டு எல்சி200 கார்களை துரதிருஷ்டம் என கருதி, சமீபத்தில் 2 புதிய டொயோட்டா எல்சி200 கார்களை வாங்கியிருக்கின்றனர். ஆனால், அவை இப்போது முதல்வர் ஜெயலலிதா பெயரில் இல்லை. சமீபத்தில் வாங்கப்பட்ட இரண்டு டொயோட்டா எல்சி200 கார்களின் ஒவ்வொன்றின் மதிப்பும் தலா ரூ.1.50 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

தற்போது தமிழக முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்தி வரும் டொயோட்டா எல்சி200 கார்கள் குண்டு துளைக்காத வசதி கொண்டவை. மேலும், மோதல்களின்போது பயணிகளை காப்பதற்காக 10 உயிர் காக்கும் காற்றுப்பைகளை கொண்டிருக்கின்றன. இருக்கையின் அமைப்பை துல்லியமாக அறிந்துகொண்டு விரிவடையும் வசதி கொண்டவை இந்த காற்றுப் பைகள். அதுதவிர, 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி வசதி உள்ளது.

லிட்டருக்கு 5 கிமீ மைலேஜ்...

லிட்டருக்கு 5 கிமீ மைலேஜ்...

சக்திவாய்ந்த எஸ்யூவி இந்த டொயோட்டா எல்சி200 கார்களில் 262 பிஎச்பி பவரையும், 650 என்எம் டார்க்கையும் வழங்கும். சக்திவாய்ந்த 4.5 லிட்டர் வி8 டீசல் எஞ்சின் இருக்கிறது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. லிட்டருக்கு சராசரியாக 5 கிமீ மைலேஜ் தரும். அதற்காகவே, இந்த எஸ்யூவியில் 93 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் உண்டு. சரி, முதல்வர் ஜெயலலிதாவின் கார் கலெக்ஷனை பார்த்து அவரது ஆர்வத்தை புரிந்து கொண்டிருப்பீர். தற்போது அவரது பார்வையை பெறுவதற்காக கார்களிலும், பைக்குகளிலும் அவரது அபிமானிகள் செய்திருக்கும் சில சுவாரஸ்யங்களை அடுத்த ஸ்லைடில் காணலாம்.

அம்மாவுக்கு காரில் சிலை

அம்மாவுக்கு காரில் சிலை

பிஸ்கட் பாபு என்பவர் தனது ஃபோக்ஸ்வேகன் காரின் கூரை மீது முதல்வர் ஜெயலலிதாவின் சிலையை வைத்து சுற்றி வருகிறார். இந்த முறை எம்.எல்.ஏ. சீட் வாங்கி விட வேண்டும் என்ற உறுதியில், அம்மாவின் பார்வையை பெறுவதற்காக இந்த வித்தியாசமான முயற்சியை செய்திருக்கிறார். அதேபோன்று, நம்பர் பிளேட்டில் தமிழ்நாடு என்பதற்கு பதிலாக, அம்மா நாடு என்று ஒருவர் தனது காரில் எழுதியிருந்ததும் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். முதல்முறையாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு வித்தியாசமான முறையில் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து வரும் திமுக தலைவர் கருணாநிதியின் கார் பற்றிய விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

Photo Credit: Sriram

கருணாநிதி கார்

கருணாநிதி கார்

உடலால் முதிர்ந்தாலும், உள்ளத்தால் துறுதுறுப்பாக இயங்கி வரும் அவரின் வேகத்துக்கு டொயோட்டா அல்ஃபார்டு மினிவேன்தான் ஈடுகொடுத்து வருகிறது. முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவரால் காரில் ஏறி இறங்க முடியாத நிலை ஏற்பட்டதால் ஆட்சிப் பணிகளுக்கும், கட்சிப் பணிகளுக்கும் ஏற்ற வகையில் இந்த வேனை கஸ்டமைஸ் செய்து வாங்கினர்.

ஹைட்ராலிக் இருக்கை

ஹைட்ராலிக் இருக்கை

ஹைட்ராலிக் இருக்கை மூலம் காருக்குள் எளிதாக ஏறி இறங்கும் வசதி கொண்டதாக அவருக்காக இந்த வேன் கஸ்டமைஸ் செய்யப்பட்டது. பல்வேறு பணி நிமித்தங்களுக்கு அவர் செல்ல நேரிட்டபோது அவருக்கு உறுதுணையாக நின்றது இந்த மினிவேன்தான் என்றால் மிகையில்லை.

சொகுசு வேன்

சொகுசு வேன்

2002ம் ஆண்டு இந்த மினி வேன் தயாரிப்பை துவங்கியது டொயோட்டா. 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் மாடல்களில் கிடைக்கும் இந்த வேனில் திமுக தலைவர் கருணாநிதிக்காக சிறப்பு வசதிகளுடன் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது.

எஞ்சின்

எஞ்சின்

அல்ஃபார்டில் 117 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

இந்த சொகுசு மினி வேன் அதிகபட்சம் மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்லும் திறன் கொண்டது.

வடிவமைப்பு பரிமாணம்

வடிவமைப்பு பரிமாணம்

4840 மிமீ நீளமும், 1830 மிமீ அகலமும், 1905 மிமீ உயரமும் கொண்டது. 1800 கிலோ எடையும் கொண்டதாக உள்ளது.

வசதிகள்

வசதிகள்

லேன் மானிட்டரிங் சிஸ்டம், ராடர் குரூஸ் கன்ட்ரோல், பிளைன்ட் ஸ்பாட் டிடெக்ஷன் சிஸ்டம், பேக் கெய்டு மானிட்டர் உள்ளிட்ட நவீன வசதிகளை கொண்டது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

இந்த சொகுசு வேனில 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டிராக்ஷன் கன்ட்ரோல் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளை அல்ஃபார்டு கொண்டுள்ளது.

விலை மதிப்பு

விலை மதிப்பு

இந்த மினி வேனை இறக்குமதி செய்யப்பட்டது. ஒரு கோடி மதிப்பில் இந்த மினி வேனை அவர் வாங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சொகுசு வேனை நேரடியாக இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் டொயோட்டா திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Tamilnadu CM Jayalalitha's Car Collection.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X