போலீஸ் பாதுகாப்புடன் சாலையை கிழித்துக் கொண்டு சென்ற காஸ்ட்லீ கார்கள்! உள்ளே இருந்தது அவரா?

மாநிலத்தின் முதல்வர் ஆகிவிட்டாலே எத்தனை சந்திப்புகள், எத்தனை கலந்துரையாடல்கள் மற்றும் எத்தனை பணிகள் இருக்கும் என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஒரே நாளில் மாநிலத்தின் 2, 3 இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும். அவசர கால நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டியிருக்கும். இவ்வாறு மாநிலத்தின் முதலமைச்சர் 24 மணிநேரமும் படு பிசியாகவே இருக்கக் கூடியவர். இதனாலேயே எப்போதுமே தேவையான அதிகாரிகளையும், உதவியாளர்களையும், பாதுகாவலர்களையும் முதலமைச்சர் கூடவே வைத்திருப்பதை பார்க்க முடியும்.

இத்தனை பேர் உடன் இருப்பதினாலேயே, மாநிலத்தின் முதலமைச்சர் செல்கிறார் என்றாலே கூடவே 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் வரிசையாக செல்கின்றன. அதுவும், ஏதேனும் முக்கியமான பார்வையிடலுக்காக செல்வதாக இருந்தால் அதுதொடர்பான அதிகாரிகளையும், தனது பாதுகாப்புக்கான போலீசார் மற்றும் மத்திய அரசாங்கத்தின் பாதுகாப்பு வீரர்களையும் முதலமைச்சர் கும்பலாக அழைத்து செல்ல வேண்டியிருக்கும்.

chief minister mk stalin convoy

அவ்வாறான முதலமைச்சர் வாகன பேரணியை கண்டாலே இத்தனை வாகனங்களுக்கு எரிபொருள் கொடுத்து எவ்வாறு சமாளிக்கிறார்கள்? என்றே நினைக்க தோன்றும். அதுவும் முதலமைச்சரின் வாகன பேரணியில் பயன்படுத்தப்படும் கார்களை எல்லாம் பார்த்தால், சில கிமீ-கள் மட்டுமே மைலேஜ் தரக்கூடிய விலையுயர்ந்த கார்களாக இருக்கின்றன.

எந்த அளவிற்கு விலையுயர்ந்த கார்கள் என்றால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் கான்வே வாகனங்கள் செல்லும் வீடியோ ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த கான்வேயில் 19 டொயோட்டா இன்னோவா (Toyota Innova) கார்கள், 4 டொயோட்டா ஃபார்ச்சூனர் (Fortuner) கார்கள் மற்றும் ஒரு ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார் என மொத்தம் 24 விலையுயர்ந்த கார்கள் இடம்பெற்றுள்ளன.

chief minister mk stalin convoy

சாலையில் மழைநீர் தேங்கி இருந்ததால், 24 கார்கள் அடங்கிய முதல்வரின் இந்த கான்வே சாலையில் வளைந்துக் கொண்டு பாம்பு போல் செல்வதை வீடியோவில் காணலாம். தமிழ்நாட்டில் எந்த பகுதியில் இந்த வீடியோ காட்சிப்படுத்தப்பட்டது என்பது தெரியவில்லை. முதலமைச்சரின் இந்த கான்வேயில் விலை குறைவான கார் என்றால் அது டொயோட்டா இன்னோவா ஆகும்.

ஆனால், அதன் எக்ஸ்-ஷோரூம் விலைகளே தற்சமயம் ரூ.25 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. எக்ஸ்-ஷோரூம் விலையே இவ்வளவு என்றால், ஆன்-ரோடு விலை இன்னும் சில லட்ச ரூபாய்கள் அதிகமாக வரும். கான்வேயின் துவக்கத்தில் வெள்ளை நிறத்திலான இன்னோவா கார்கள் வரிசையாக வருவதை வீடியோவில் பார்க்கலாம். அதேநேரம், நான்கு கருப்பு நிறத்திலான இன்னோவா கார்களும் கான்வேயில் உள்ளன.

இந்த இன்னோவா கார்களில் அதிக ஒலியை எழுப்பக்கூடிய சைரன்கள் மற்றும் பெக்கான் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளதால், இவற்றில் பெரும்பாலனவை முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களாக இருக்கலாம். கருப்பு நிறத்திலான இன்னோவா கார் ஒன்றில் கண்காணிப்பு கேமராக்களும் உள்ளன. இந்த கான்வேயில் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்களும் உள்ளதாக கூறினோம் அல்லவா... ஃபார்ச்சூனரின் ஆரம்ப விலை இன்னும் அதிகமாக ரூ.44.58 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.

அந்த ஒரேயொரு ரேஞ்ச் ரோவர் கார் ஆனது தமிழ்நாடு முதலமைச்சரின் பயன்பாட்டிற்கானது ஆகும். அதில், முதல்வரின் தனிப்பட்ட உதவியாளர்களும் எப்போதுமே அவருடன் இருப்பர். இந்த ரேஞ்ச் ரோவர் காரை தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடந்த சில வருடங்களாக அதிகமாக பயன்படுத்தி வருகிறார். சமீப வருடங்களில் பல நிகழ்வுகளில் முதல்வரை இந்த ரேஞ்ச் ரோவர் காரில் பார்த்துள்ளோம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழ்நாட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் பயன்படுத்துவது பழைய தலைமுறை ரேஞ்ச் ரோவர் ஆகும். ஆனால், மிகவும் பழைய ஜென்ரேஷன் ரேஞ்ச் ரோவர் கார் கிடையாது. தற்சமயம் ரேஞ்ச் ரோவர் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.3 கோடியில் இருந்து ஆரம்பிக்கின்றன. இன்னும் பல சொகுசு கார்களை வைத்திருப்பினும், இந்த குறிப்பிட்ட ரேஞ்ச் ரோவர் காரை மட்டும் தமிழ்நாட்டு முதலமைச்சர் அதிகமாக பயன்படுத்துவதில் இருந்து இந்த கார் மீது எந்த அளவிற்கு அவர் நம்பிக்கை வைத்துள்ளார் என்பதை அறிய முடிகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 31, 2025, 23:34 [IST]
English summary
Tamilnadu chief minister mk stalin convoy with 19 toyota innova cars
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+