முதலமைச்சர் ஸ்டாலின் கான்வாயில் எத்தன காருகள் பயன்படுத்துறாங்க தெரியுமா! ஒவ்வொரு காரோட விலையும் இவ்ளோவா!
'தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின்-இன் கான்வாயில் இத்தனை கார்களையா பயன்படுத்துறாங்க'.. என ஆச்சரியத்துடன் கேட்கச் செய்கின்ற அளவிற்கு அவரின் கான்வாயில் மிக மிக அதிக எண்ணிக்கையில் கார்கள் பயன்படுத்தப்படுகின்றன. தலைவர்களின் பாதுகாப்பு கருதி அவர்கள் பயணிக்கும் வாகனங்களுக்கு முன்னாலும், பின்னாலும் வாகனங்கள் பல அணிவகுத்து செல்லும். அந்தவகையிலேயே முதலமைச்சர் முக ஸ்டாலின் கான்வாயிலும் அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் அணிவகுத்து பயணிக்கின்றன. இந்த நிலையிலேயே முதலமைச்சரின் கான்வாயில் எத்தனை கார்கள் பயன்படுத்தப்படுகின்றன? என்னென்ன கார் மாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன? என்கிற விபரம் தெரிய வந்திருக்கின்றது.
சமீபத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் அவருடைய தொகுதியான சென்னை கொளத்தூருக்கு சென்றார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவின் அடிப்படையில் அவருடைய கான்வாயில் என்ன மாதிரியான கார்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பது தெரிய வந்திருக்கின்றது. அவருடைய கான்வாயில் டொயோட்டா இன்னோவா (Toyota Innova) கார் மாடல்கள் மட்டும் 15-க்கும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.

இதுதவிர, இரண்டுக்கும் மேற்பட்ட ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) கார்களும் அந்த கான்வாயில் இடம் பெற்றிருந்தன. மிக முக்கியமாக இந்திய பணக்காரர்களின் பிரியமான சொகுசு கார் மாடலான டொயோட்டா வெல்ஃபையர் எம்பிவி (Toyota Vellfire MPV) ரக காரும் முதலமைச்சர் முக ஸ்டாலின் கான்வாயில் இடம் பெற்றிருந்தது. இது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
இதன் ஒரே ஒரு யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 1.5 கோடிக்கும் அதிகம் ஆகும். இதுதவிர, உலக புகழ்பெற்ற சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 (Land Rover Defender 110) கார் மாடலும் இந்த கான்வாயில் இடம் பெற்றிருந்தது.
இதுவே முதலமைச்சர் முக ஸ்டாலினின் பிரதான வாகனம் ஆகும். இதன் விலையும் மிக மிக அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் விலை ரூ. 1.39 கோடி ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதேபோல், இந்தியாவில் ஒரே ஒரு இன்னோவா க்ரிஸ்டா கார் மாடலே ரூ. 19.99 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
இது வெறும் ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதன் அதிகபட்ச விலை ரூ. 26.55 லட்சம் ஆகும். இத்தகைய விலை உயர்ந்த கார் மாடலையே பெரும் எண்ணிக்கையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் கான்வாயில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர, சில ஃபார்ச்சூனர் கார் மாடல்களும் இந்த கான்வாயில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.
இந்த கார் மாடலின் ஒரே ஒரூ யூனிட்டின் இன்றைய மதிப்பு ரூ. 33 லட்சத்திற்கும் அதிகம் என்பது கவனிக்கத்தகுந்தது. இதுவும் ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இத்தனை கார்கள் கான்வாயில் பயன்படுத்தப்பட்டு இருந்தாலும், அவரின் கான்வாயில் டொயோட்டா வெல்ஃபையர் பயன்படுத்தப்பட்டு இருப்பதுதான் ஆச்சரியத்தின் உச்சமாக இருக்கின்றது.
இது புதிய தலைமுறை வெர்ஷன் ஆகும். மிக மிக அதிக ஆடம்பர அம்சங்களை தாங்கிய ஓர் வாகனமே இதுவாகும். சொகுசு கப்பல்களுக்கு இணையான பயண அனுபவத்தை வழங்கும் வகையிலேயே இந்த காரை டொயோட்டா வடிவமைத்திருக்கின்றது. தொழில்நுட்ப விஷயத்திலும் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தக் கூடிய ஓர் கார் மாடலாக இது காட்சியளிக்கின்றது.
அந்தவகையில், டிவி போன்ற பெரிய 14 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், அதிக அளவிலான ஏசி துவாரங்கள், வெண்டிலேஷன் மற்றும் சூடாகும் வசதிக் கொண்ட இருக்கைகள், மடித்துக் கொள்ளும் வசதிக் கொண்ட டேபிள்கள் என ஏகப்பட்ட அம்சங்கள் அந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும்.
இதுதவிர, ஹெட்ஸ் அப் திரை, வயர்லெஸ் சார்ஜர், எட்டு வழிகளில் அட்ஜெஸ்ட் செய்துக் கொள்ளும் வசதிக் கொண்ட இருக்கை, 60-க்கும் மேற்பட்ட கார் இணைப்பு அம்சம் உள்ளிட்ட வசதிகளையும் இந்த காரில் டொயோட்டா வழங்கி இருக்கின்றது. இதுபோன்ற ஏராளமான அம்சங்களைக் கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான் இந்த காருக்கு இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
குறிப்பாக, இந்திய திரை நட்சத்திரங்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்பு இந்த காருக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதேபோல், முதலமைச்சர் முக ஸ்டாலின் பயன்படுத்திய லேண்ட் ரோவர் டிஃபெண்டர் 110 கார் மாடலுக்கும் இந்திய பிரபலங்கள் பலரின் பிரியமான கார் மாடலாக காட்சியளிக்கின்றது.
ஆஃப்-ரோடு மற்றும் ஆன்-ரோடு என இரு விதமான சாலைகளையும் அசால்டாக சமாளிக்கும் திறன் கொண்ட காரே இதுவாகும். மேடு, பள்ளங்களில் ஏறி இறங்கினாலும்கூட பெரியளவில் அதனால் ஏற்படும் அசௌகரியமான உணர்வு பயணிகளுக்கு ஏற்படாது. இத்தகைய திறனைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த கார் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பயன்படுத்தப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் பயன்படுத்தும் கார்கள் முதலமைச்சரின் கான்வாயில் பயன்படுத்தப்பட்டு இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவின் பிற மாநிலங்களிலும் அரசியல்வாதிகள் சிலர் ஆடம்பர கார்களை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








