உலகமே இப்ப தமிழ்நாட்டை தான் திரும்பி பார்க்குது! டுரோன் தயாரிப்பில் இவ்வளவு வளர்ச்சியா?
மத்திய அரசு கடந்த மாதம் ஆப்ரேஷன் சிந்தூரை நட்தி யபிறகு இந்தியா எல்லை பாதுகாப்பு விஷயத்தில் எவ்வளவு தூரம் தொழிற்நுட்பத்தை நம்பியிருக்கிறது என்பது பலரு்கம் தெரியவந்தது. தற்போது இந்திய ராணுவ ஆப்ரேஷன்களில் தொழிற்நுட்பங்கள் மிகப்பெரிய உதவியை செய்து வருகுின்றனர். இந்த தொழிற்நுட்ப பாதுகாப்பு விஷயங்களை 3 விதமாக பிரிக்கலாம். டுரோன் பாதுகாப்பு, லேயர்டு ஆகாய பாதுகாப்பு, எலெக்ட்ரானிக் பாதுகாப்பு என இதை பிரிக்க முடியும்.
இதில் இந்தியாவில் டுரோன் மார்கெட் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. உலகம் முழுவதும் உள்ள டுரோன் மார்கெட்டில் இந்தியாவில் மட்டும் 12.2 சதவீதம் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் வெளிநாட்டு டுரோன்களையும் அதற்கான உதிரி பாகங்களையும் இறக்குமதி செய்ய இருக்கும் தடை காரணமாக உள்நாட்டில் உற்பத்தி அதிகமாகியுள்ளது.

இந்த தடை கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி அமலுக்கு வந்தது. அதற்கு பிறகு இந்தியாவில் டுரோன் துறையில் மட்டும் ரூ120 கோடி முதலீடு வந்துள்தாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் தமிழ்நாடு தான் மிக முக்கிய பங்கு வகிப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ராணுவத்திற்கான டுரோன் தயாரிப்பு அதிகரித்துள்ளது. இதில் ஆளில்லா டுரோன்களை தாக்குவது, சரக்குகளை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது உள்ளிட்ட டுரோன்கள் ராணுவத்திற்கு அதிகம் பயன்படுகிறது.
தமிழகத்தில் மட்டும் தற்போது தக்ஷா, கருடா ஏரோஸ்பேஸ், ஸூப்பா ஜியோ நேவிகேஷன், இ-பிளேன் கம்பெனி, பிக் பேங்க் பூம், டேட்டா பேட்டர்ன்ஸ் உள்ளிட்ட நிறுவனம் இந்த டுரோன்களை தயாரிக்கும் பணியில் இருக்கின்றனர். இதில் பல நிறுவனங்கள் இந்திய ராணுவத்திற்கான டுரோன் டெக்னாலஜியில் பல்வேறு உதவிகளை செய்துள்ளனர். தொடர்ந்து இந்திய ராணுவத்தை வலுப்படுத்த தமிழகம் முக்கிய பங்கு வகிப்பது இதன் மூலம் தெரிகிறது.

தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள் சிறிய ரக ஆளில்லா கண்காணிப்பு டுரோன்கள், விவசாய பணிகளுக்கான டுரோன்கள், பெரிய வேர் ஹவுன் மேனேஜ்மென்டிற்கான டுரோன்கள், கட்டுமான பணிகளுக்கு பயன்படும் டுரோன்கள், உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான டுரோன்களை தற்போது உருவாக்கி வருகின்றனர்.
இந்த டுரோன்கள் எதிர்காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியையும் மாற்றத்தையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையி் இந்த டுரோன் தயாரிப்புக்கு தமிழகம் முக்கியத்துவம் அளித்துள்ளது தமிழகம் எந்த அளவிற்கு தொலைநோக்கு பார்வையில் இருக்கிறது என்பதை பிரதிபலிக்கிறது. தமிழகத்தில் இந்த டுரோன் தயாரிப்பு வருங்காலத்தில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
இது மட்டுமல்ல தமிழகம் ராணுவத்திற்கான தளவாடங்களை தயாரிக்கும் காரிடார் பகுதியாக இருப்பதால் இங்கு ஆட்டோமொபைல், டுரோன் தயாரிப்பு எலெக்ட்ரிகானிக்ஸ் தயாரிப்புகளில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி ஏற்படுகிறது. மேலும் எம்ஐடி, ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்கள் இருப்பதால் இங்கிருந்து தரமான தயாரிப்புகள் வெளியே வருகிறது. இது போக டுரோன் பைலட்கள் அதிகம் இருப்பதால் இந்த துறையில் தமிழகம் வேகமாக வளர்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தமிழகம் டுரோன் தயாரிப்பில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது பலரை குஷிப்படுத்தும் என எதிர்பார்க்கலாம். இந்தியாவின் ராணுவத்திற்கு தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட பல டுரோன்கள் அனுப்பபடும் செய்தியும் தமிழக மக்களை குஷிப்படுத்தியுள்ளது. ஆட்டோமொபைல் துறை போல தமிழகத்தில்இந்த டுரோன் துறையும் மிகப்பெரிய வளர்ச்சியை பெறும்.


Click it and Unblock the Notifications








