இதை பார்த்து தமிழ்நாடே ஷாக் ஆகிடுச்சு! ஆனா அசால்டா லெஃப்ட் ஹேண்டில் டீல் பண்ண தமிழக அரசு!

திருநெல்வேலி போக்குவரத்து கழகத்தின் நாகர்கோவில் பணிமனையில் ஒரே நம்பரில் மூன்று பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இது பலரை அதிர்ச்சி அடைய வைத்திருந்தது. அரசே அரசை ஏமாற்றும் வகையிலான வேலையில் ஈடுபட்டிருப்பதாக வெளியான செய்தி பலரை அதிர்ச்சி அடைய வைத்த நிலையில், இது குறித்து தமிழக அரசு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வைரலாக பரவியது. அந்த புகைப்படத்தில் மூன்று விதமான பஸ்கள் இருந்தன. மூன்று விதமான பஸ்களின் பதிவு இன்னும் ஒரே பதிவு எண்ணாக இருந்தது அதாவது. TN74N1813 என்ற பதிவு இருந்தது. ஒரே பதிவில் எப்படி மூன்று பசங்களுக்கு வந்தது என்ற கேள்விகளுடன் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

3 different buses in same registration number

இந்த புகைப்படத்தை பார்த்ததும் தமிழக அரசு போக்குவரத்து கழகமே அரசை ஏமாற்றும் வகையில் ஒரே பதிவில் கொண்ட மூன்று பஸ்களை இயக்கி வருவதாக பலர் குற்றச்சாட்டு சொல்லி இந்த புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்கள். இது தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கான காரணம் குறித்து பலர் சமூக வலைதளங்களில் கேட்டு வந்து நிலையில் தமிழக அரசு இதற்காக விளக்கம் அளித்துள்ளது.

தமிழக அரசு அளித்துள்ள விளக்கத்தின்படி இந்த மூன்று பஸ்களும் ஒரே பதிவெண்னை கொண்டு வேறு வேறு மாடலில் இருந்தாலும் ஒரே பஸ்களாக தான் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த பஸ் முதன் முதலில் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8ம் தேதி பயன்பாட்டிற்கு வந்தது. அப்பொழுது இந்த பஸ் பச்சை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டு நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் தமிழக அரசு பஸ்ஸாக இயக்கப்பட்டு வந்தது.

3 different buses in same registration number

அதன் பின்னர் இந்த பஸ் கடந்த 2020ம் ஆண்டு மீண்டும் வண்ணம் பூசப்பட்டு நகரப் பேருந்தாக மாற்றப்பட்டது. அப்பொழுது நாகர்கோவிலில் இருந்து மேல்மிடாலர் என்ற பகுதிக்கு இந்த பஸ் இயக்கப்பட்டது. அப்பொழுது நகர பேருந்துகள் எல்லாம் என்ன வண்ணத்தில் இருக்குமோ அந்த வண்ணத்தில் இந்த பஸ் மாற்றப்பட்டு இயக்கப்பட்டு வந்தது.

இறுதியாக கடந்த 2023ம் ஆண்டு அரசு உத்தரவுப்படி இந்த பஸ் முழுமையாக பாடி மாற்றப்பட்டு புதிய பஸ் போன்ற தோற்றத்தில் மாற்றப்பட்டு மகளிர் விடியல் நகர பேருந்து பஸ்ஸாக இயக்கப்பட்டு வருகிறது. இப்படியாக ஒரே பஸ்சை தான் அரசு போக்குவரத்து கழகம் அவ்வப்போது புதுப்பித்து வேறு வேறு பயன்பாட்டிற்காக பயன்படுத்தி வந்துள்ளது.

இதை யாரோ ஒருவர் தனித்தனியான காலகட்டங்களில் புகைப்படம் எடுத்து அதை ஒன்றாக சேர்த்து ஒரே நேரத்தில் ஒரே பதிவெண் கொண்ட மூன்று பஸ்கள் இயக்கப்படுவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி அதை சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளார் என தமிழக அரசு தரப்பில் இருந்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளார்கள்.

தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் இப்படியாக ஒரு பஸ்ஸின் கண்டிஷனை பொருத்து அதன் பயன்பாட்டை மாற்றுவது வழக்கம் அப்படியாக மாற்றும்போது பஸ்ஸை புதுப்பித்து புதிய பயன்பாட்டிற்காக தயார் செய்வார்கள். இப்படியாகத்தான் இந்த பஸ் ரூட் பஸ்ஸிலிருந்து டவுன் பஸ்ஸாக மாறியுள்ளது. மற்றபடி ஒரே பதிவில் மூன்று பஸ்கள் இயக்கப்படுவது என பரவிய செய்தி முற்றிலும் வதந்தியாகும்.

தமிழக அரசு போக்குவரத்து கழகங்கள் பஸ்களை இப்படி அடிக்கடி மாற்றிக் கொண்டே இருப்பது வழக்கமான ஒரு விஷயம்தான். இதனால் பஸ் பதிவெண்னை வைத்து வேறு வேறு பஸ்கள் ஒரே பதிவு எண்ணில் இயக்கப்படுகிறது என கூறுவது சரியான விஷயமாக இருக்காது. இதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் இதற்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதையும் பொதுமக்கள் தெரிந்தால் தான் இது போன்ற வதந்திகள் பரவுவது தடுக்க முடியும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் பயன்படுத்தப்படும் பஸ்கள் பெரும்பாலும் ஒவ்வொரு போக்குவரத்து கழகங்களுக்கும் மாற்றி மாற்றி பயன்படுத்தும் வசூலாக உள்ளன. இந்த பசுக்களின் பதிவினை வைத்து பஸ்களின் வகை மற்றும் பயன்பாடு குறித்து எல்லாம் முடிவு செய்து விட முடியாது. இன்று ஒரு பயன்பாடுக்காக இருக்கும் போது நாளை வேறுபாட்டிற்காக கூட பயன்படுத்தப்படும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

Source: Vikatan

More from DriveSpark

Article Published On: Monday, October 21, 2024, 10:45 [IST]
English summary
Tamilnadu govt clarifies same bus registration operating in 3 different forms
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+