தமிழக அமைச்சர்களுக்கு புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்

Written By:

 முதல்வர் உள்பட தமிழக அமைச்சர்கள் 32 பேருக்கு புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்கள் வழங்கப்பட உள்ளன. இந்த கார்கள் டெலிவிரி பெறப்பட்டு தலைமை செயலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

விரைவில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் இந்த கார்களை அமைச்சர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பின் இந்த காரை தங்களது அதிகாரப்பூர்வ வாகனமாக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பயன்படுத்த உள்ளனர்.

 சிறப்பான தேர்வு

சிறப்பான தேர்வு

அடிக்கடி சென்னையிலிருந்து தொகுதிக்கு சென்று பணிகளை பார்வையிடுவதற்காக பயணிக்க வேண்டிய அவசியம் அமைச்சர்களுக்கு உள்ளது. இதனால், நீண்ட தூர பயணங்களுக்கு மிக பொருத்தமான டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அமைச்சர்களுக்கு புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்!

சில கார்களுக்கு 2525 மற்றும் 9999 ஆகிய பேன்ஸி பதிவு எண்களும் வாங்கப்பட்டுள்ளன. அமைச்சர் செங்கோட்டையன் புதிய டொயோட்டா இன்னோவா காரையே இப்போது பயன்படுத்தி வருகிறாராம்.

சொகுசு கார் அந்தஸ்து

சொகுசு கார் அந்தஸ்து

இதுவரை டொயோட்டா இன்னோவா கார் தனிநபர் வாடிக்கையாளர் சந்தை மட்டுமின்றி, டாக்சி மார்க்கெட்டிலும் கோலோய்ச்சி வந்தது. ஆனால், தற்போது புதிய டொயோட்டா இன்னோவா காரில் எக்கச்சக்க வசதிகளையும், தொழில்நுட்பத்தையும் சேர்த்து பிரிமியம் மாடலாக மாற்றிவிட்டது. இதனால், இப்போது சொகுசு கார் அந்தஸ்துக்கு உயர்ந்து விட்டது புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார்.

கவர்ச்சி

கவர்ச்சி

கடந்த ஆண்டு இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா கார் விற்பனையில் சக்கை போடு போட்டு வருகிறது. இதற்கு காரணம், இந்த காரின் டிசைன், நவீன வசதிகளும், சக்திவாய்ந்த புதிய எஞ்சின் ஆப்ஷன்களும் முக்கிய காரணமாக மாறி இருக்கிறது.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

எப்போதுமே அரசியல் வாதிகள் தங்களது அந்தஸ்தை புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரில் அட்டகாசமான புதிய க்ரில் அமைப்பு, புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், 17 இன்ச் அலாய் வீல்கள், புதிய டெயில் லைட் க்ளஸ்ட்டர் என முற்றிலும் சிறப்பாக மாறி இருக்கிறது.

 இடவசதி

இடவசதி

இன்னோவா என்றாலே இடவசதி என்று பொருள்படும் அளவுக்கு இந்த கார் பெயர் பெற்று நிற்கிறது. புதிய டொயோட்டா இன்னோவா காரிலும் மூன்று வரிசை இருக்கையிலும் மிகச் சிறப்பான இடவசதி இருக்கிறது.

 இன்டீரியர்

இன்டீரியர்

உட்புறத்தை பொறுத்தவரையில், புதிய டேஷ்போர்டு அமைப்பு மிக கவர்ச்சியாக இரு்ககிறது. டிஎஃப்டி திரையுடன் கூடிய மல்டி இன்ஃபர்மேஷன் சாதனம், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவை மிக முக்கிமான சிறப்பம்சங்கள். புஷ் பட்டன் ஸ்டார்ட், ஆம்பியன்ட் லைட் செட்டிங், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி போன்ற வசதிகளும் உள்ளன.

எஞ்சின்

எஞ்சின்

இந்த கார் 147 பிஎச்பி பவரையும், 343 என்எம் டார்க் திறனையும் அளிக்க வல்ல 2.4 லிட்டர் டீசல் எஞ்சின், 175 பிஎச்பி பவரையும் 360 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்ல 2.8 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 2.7 லிட்டர் எஞ்சின் அதிகபட்மசாக 166 பிஎச்பி பவரை வழங்க வல்லது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

அடிக்கடி நீண்ட தூர பயணம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கும் தமிழக அமைச்சர்களுக்கு ஏற்றவாறு சிறந்த பாதுகாப்பு வசதிகளையும் பெற்றிருக்கிறது. உயிர்காக்கும் காற்றுப்பைகள், பிரேக் சக்தியை அனைத்து சக்கரங்களுக்கும் சரியான விகிதத்தில் செலுத்தும் இபிடி நுட்பம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார் நிலைத்தன்மை இழக்காமல் இருப்பதற்கான ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் போன்ற பல பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்று இருக்கின்றன.

விலை மதிப்பு

விலை மதிப்பு

தமிழக அமைச்சர்களுக்கு சில்வர் வண்ண இன்னோவா க்ரிஸ்ட்டா கார்கள் வாங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு காரும் ரூ.25 லட்சம் விலை மதிப்பு கொண்டது. மொத்தம் ரூ.7.5 கோடி மதிப்பில் இந்த 32 கார்களும் வாங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இந்த காரையே வாங்கி பயன்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் படங்கள்!

புதிய டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரின் பிரத்யேக படங்களின் தொகுப்பை கீழே உள்ள கேலரியில் காணலாம்.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Read in Tamil: Tamilnadu Ministers Will Get New Toyota Innova Crysta Car Soon.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark