சுற்றி நின்று ஊரே பார்க்க களம் காண்பாய்... தோனிக்கு அப்புறம் இவருக்குதான் இந்த பாட்டு கரெக்ட்டா செட் ஆகுது!!
இண்டிகோ (Indigo) விமானி ஒருவர் முதல்முறையாக தனது விமான பயணத்தில் அவரது தாத்தாவை ஏற்றி சென்றுள்ளார். இதில் என்ன சிறப்பு உள்ளது என கேட்கிறீர்களா? இதில்தான் ஒரு சர்பிரைஸான விஷயம் நடந்துள்ளது. அது என்ன என்பதை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
30,000 - 40,000 அடி உயரத்தில் பயணம், ஒவ்வொரு நாளும் புது புது நாடுகள், நகரங்களுக்கு செல்லலாம் என்பதினாலேயே விமானி ஆக வேண்டும் என்கிற ஆசை நம்மில் பெரும்பாலானோருக்கு சிறுவயதில் நிச்சயமாக இருந்திருக்கும். ஆனால், சிலரால் மட்டுமே அந்த கனவை நிஜமாக்க முடிகிறது. ஆதலால், விமானியாக பணியாற்றுவது எவரொருவருக்குமே கொஞ்சம் ஸ்பெஷல் ஆகும்.

இதனாலேயே விமானியாக தங்களது முதல் பயணத்தை காலத்திற்கும் நினைவில் கொள்ள முடிந்தவரையில் எதாவது சர்பிரைஸாக செய்ய முயலுகின்றனர். அதேபோல், தான் இயக்கும் விமானத்தில் தனது குடும்பத்தினர் பயணிக்கவுள்ளனர் என்றால் எந்தவொரு விமானிக்கும் கொஞ்சம் பிரம்மிப்பாக இருக்கும். அந்த வகையில், இங்கு ஒரு இண்டிகோ விமானி முதல்முறையாக அவரது தாத்தாவை விமானத்தில் அழைத்து சென்றுள்ளார்.
இதனை கொஞ்சம் ஸ்பெஷலானதாக மாற்றும் விதமாக, விமானத்தை ஓட்ட போகும் விமானி தான் என்பதை சர்பிரைஸாக வைத்து, விமானத்தினுள் சென்ற பின் உண்மையை தெரிவித்துள்ளார். பேரனை விமானி உடையில் கண்டவுடன் தாத்தாவுக்கு ஆச்சிரியமாகவும், பிரம்மிப்பாகவும் இருந்தது. இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை கீழே காணலாம்.
இந்தியாவின் பிரபலமான இண்டிகோ ஏர்லைன் நிறுவனத்தில் விமானியாக பணியாற்றும் இந்த இளைஞரின் பெயர் பிரதீப் கிருஷ்ணன் ஆகும். இவரது தாத்தா மற்றும் மொத்த குடும்பமுமே நம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களாவர். விமானி பிரதீப் கிருஷ்ணனின் இந்த சர்பிரைஸான பயணம் ஆனது சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு இயக்கப்பட்ட இண்டிகோ விமானத்தில் நடந்தது.
அதாவது இந்த விமானத்தை இயக்கிய விமானிகளுள் பிரதீப் கிருஷ்ணனும் ஒருவர். ஆனால், தனது பேரன் தான் விமானத்தை ஓட்ட போகிறது தாத்தாவுக்கு தெரியாது. பயணிகள் அனைவரும் ஏறிவிட்டனர், விமானம் கிளம்ப போகும் சமயத்தில் ஒரு ஸ்பெஷல் அறிவிப்பு வருகிறது. "என்னுடன் எனது குடும்பத்தினர் பயணம் செய்கிறார்கள் என்பதை அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

என் தாத்தா, பாட்டி, அம்மா ஆகியோர் 29வது வரிசை இருக்கைகளில் அமர்ந்துள்ளனர். என் தாத்தா இன்று முதல்முறையாக என்னுடன் பறக்கிறார்" என்பதுதான் அந்த ஸ்பெஷல் அறிவிப்பு ஆகும். இதனை வெளியிட்டவர் வேறு யாரும் இல்லை, விமானி பிரதீப் கிருஷ்ணன் ஆவார். விமானம் கிளம்புவதற்கு முன்னர் விமானிகள் இவ்வாறு பயணிகளின் முன் பேசுவது வாடிக்கையானதே.
ஒரு சில விமானிகள் காக்பிட் கேபினுக்குள் இருந்தவாறு மைக்கில் பேசுவர். சிலர் நேரடியாக வெளியே வந்து பயணிகளின் முன் நின்று பேசுவர். பிரதீப் கிருஷ்ணன் விமானி கோலத்தில் அவரது குடும்பத்தினர் முன் நின்று தனது ஸ்பெஷல் அறிவிப்பை தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்த மொழியில் வெளியிட்டார். மேலும் பேசிய விமானி பிரதீப் கிருஷ்ணன், "தாத்தாவின் டிவிஎஸ் 50 பைக்கில் பின் இருக்கையில் அமர்ந்து நான் பலமுறை பயணம் செய்திருக்கிறேன்.

இப்போது அவரை சவாரி செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது" என கூற, பிரதீப்பின் தாத்தா எழுந்து நின்று கைக்கூப்பிய படி வாழ்த்துகளை பெற்றுக் கொண்டார். மறுப்பக்கம் பிரதீப்பின் பாட்டிக்கு கண்களில் ஆனந்த கண்ணீர் வழிந்தோடியது. இதனை கண்டு சுற்றி அமர்ந்திருந்த பயணிகள் கைத்தட்டி பாராட்டினர். பின்னர், இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் விமானி பிரதீப் கிருஷ்ணன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விமானியாக பிரதீப் கிருஷ்ணன் 2018ஆம் ஆண்டில் பொறுப்பேற்றுக் கொண்டார். விமானியாக தனது முதல் பயணத்தில் பிரதீப் அவரது தாய் மற்றும் பாட்டியை அழைத்து சென்றது அந்த சமயத்தில் இணையத்தில் வைரலாகியது. தாத்தாவை அழைத்து சென்றது இதுவே முதல்முறை. இதில் இருந்து பிரதீப் கிருஷ்ணனுக்கு அவரது தாத்தாவை எந்த அளவிற்கு பிடிக்கும் என்பதை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications









