ஒரே வருஷத்துல இவ்வளவு கோடி வசூலா? தமிழக சுங்க சாவடிகளில் கண்ணுக்கே தெரியாமல் இவ்வளவு பணம் போகுது!
தமிழகத்தில் சுங்க கட்டண வசூல் கடந்த 2023-24நிதியாண்டில் 10% அளவுக்கு அதிகரித்துள்ளது. கடந்த 2022-23ம் இந்தியாண்டில் நடந்த வசூலை ஒப்பிடும்போது தற்போது அதிகமாக வசூலாகியுள்ளது. இதனால் தமிழகம் தொடர்ந்து போக்குவரத்தில் அதிகமாக ஈடுபாடு காட்டி வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் அதிக போக்குவரத்தை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது. இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் போக்குவரத்திற்கான முதுகெலும்பாக தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் எல்லாம் ஒரு ஊரை விட்டு மற்றொரு ஊருக்கு விரைவாக செல்ல முடியும். இந்நிலையில் இதை தயவு செய்து நெடுஞ்சாலையில் வாகனங்கள் பயணிப்பதற்காக சுங்க கட்டணம் செலுத்த வேண்டும். இதற்காக ஆங்காங்கே சுங்கசாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது இந்தியாவில் செயல்படும் 99 சதவீதமான வாகனங்கள் சுங்க கட்டணத்தை ஃபாஸ்ட் டேக் கார்டு மூலம் செலுத்தி வருகிறார்கள். இப்படியாக வசூலிக்கப்படும் சுங்க கட்டணத்தை வைத்து அரசு அந்த பகுதியில் உள்ள சாலையை மேம்படுத்த செலவு செய்து வருகிறது. இந்நிலையில் இந்த சுங்க கட்டண வசூல் விபரத்தை வைத்து ஒரு குறிப்பிட்ட பகுதி எந்த அளவுக்கு வளர்ச்சி பெறுகிறது என்பதை சொல்லிவிட முடியும்.
அதிகமான போக்குவரத்து இருந்தால் தான் சுங்க கட்டண வசூல் என்பது அதிகரிக்கும். சுங்க கட்டண வசூல் அதிகரிக்கிறது என்றால் அதிக போக்குவரத்தை வழங்கும் அளவுக்கு அப்பகுதியில் தேவை இருப்பது நமக்கு தெரிய வரும். இதைப்பார்க்கும் போது குறிப்பிட்ட பகுதி எந்த அளவுக்கு வளர்ச்சி பெறுகிறது, அப்பகுதியில் இருக்கும் நிறுவனங்கள் எல்லாம் எப்படி வளர்ச்சியை சந்தித்து வருகின்றன என நம்மால் ஒப்பிட முடியும்.

இப்படியாக கடந்த நிதியாண்டில் மட்டும் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரூபாய் 4221 கோடி வசூலாகி உள்ளது. இது கடந்த 2021-2023 நிதியாண்டில் வசூலான 3817 கோடி என்ற வசூலை ஒப்பிடும் போது 10 சதவீதம் அதிகமாகும். தமிழகத்தில் யாரும் எதிர்பாராத அளவிற்கு இந்த சுங்கச்சாவடி வசூல் என்பது மிக அதிகமாக அதிகரித்துள்ளது.
கடந்த 2019-20ம் நிதியாண்டில் தமிழகத்தின் மொத்தம் 2610 கோடி தான் சுங்க கட்டண வசூலாக இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சுங்க கட்டண வசூல் 61% அளவுக்கு அதிகரித்துள்ளது. இது மிகப்பெரிய வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. தமிழகம் மிக வேகமாக வளர்ந்து வருவதற்கு இது ஒரு முக்கியமான அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் தற்போது 67 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. அதில் 15 சுங்கசாவடிகள் கடந்த ஐந்தாண்டுகளில் அமைக்கப்பட்ட சுங்க சாவடிகளாக உள்ளன. இதில் கிருஷ்ணகிரி தொப்பூர் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகள் தான் தமிழகத்திலேயே அதிக அளவிலான வசூலை பெற்றுள்ளன.
கிருஷ்ணகிரி தோப்பூர் சுங்கச்சாவடி கடந்த நிதியாண்டில் மொத்தம் ரூ269 கோடியை வசூலாக பெற்றுள்ளது. கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் ரூ257 கோடி வசூலாக பெறப்பட்டுள்ளது. இந்த சுங்கச்சாவடிகள் இந்தியாவிலேயே முறையே 8 மற்றும் 15 வது இடத்தில் இருக்கும் சுங்கச்சாவடிகளாக உள்ளன. தமிழகம் இந்தியாவிலேயே அதிகமான சுங்க கட்டணத்தை வசூல் செய்யும் ஐந்தாவது மாநிலமாக மாறி உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை அதிகபட்சமாக உத்தரப்பிரதேசமும் அதை தொடர்ந்து ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் அதிக அளவிலான சுங்க கட்டணத்தை வசூல் செய்து வருகின்றன. அதை தொடர்ந்து 5வது இடத்தில் தமிழகம் தான் இருக்கிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது பரப்பளவில் சிறிய மாநிலமாக இருந்தாலும், இங்கு அதிகமான போக்குவரத்து நடப்பதால் வசூல் அதிகமாக இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சுங்க கட்டணம் வசூல் செய்யும் அரசு அந்த பணத்தை சாலையை மேம்படுத்துவதற்காக பயன்படுத்துவதாக கூறுகிறது. இந்த கட்டணம் அதிகமாக இருப்பதாக மக்கள் கருதுகிறார்கள். மக்கள் விரும்பும் அளவுக்கு குறைந்த சுங்க கட்டணத்தை வசூல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருக்கிறது. மத்திய அரசு இதை பரிசீலனை செய்து சுங்க கட்டணத்தை குறைத்தால் நாட்டின் வளர்ச்சி மேலும் அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications









