"காலில் விழுந்து கேட்கிறேன், ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க" -தன் கண்ணீரால் பிறர் கண்களை கலங்க வைத்த போலீஸ்!
சென்னை அண்ணா சாலையைச் சேர்ந்த போக்குவரத்து போலீஸார் தன் கண்ணீரால், பிறர் கண்களில் இருந்து கண்ணீரை வர வைத்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலக நாடுகள் அனைத்திற்கும் கருப்பு தினத்தை உருவாக்கும் வகையில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தி வருகின்றது கொரோனா எனும் உயிர் கொல்லி வைரஸ். இதனைக் கண்டு அஞ்சத் தேவையில்லை என மருத்துவர்கள் அறிவுறுத்தி வந்தாலும், அதன் தாக்கம் மக்களை கடும் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பாக, அதன் பரவும் தன்மை உலக சுகாதாரத்துறைக்கே பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
கொரோனா தொற்றுடைய பெரும்பாலானோர், தான் நோய் தொற்றைக் கொண்டிருக்கின்றோம் என்பதை உணராமலே மற்றவர்களுக்கு வைரஸ் தொற்றை ஏற்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக, வைரஸ் தொற்றுடைய நபர் இரும்புவது மற்றும் தும்புவதுன் மூலம் உருவாகும் கண்களுக்கு புலப்படாத நீர் குமிழ்களினாலயே அந்த வைரஸ் பரவும் தன்மையைக் கொண்டிருக்கின்றது. இதுவே, சுகதாரத்துறைக்கு மிகப்பெரிய சிக்கலாக அமைந்துள்ளது.

தொடர்ந்து, கொரோனா வைரஸைக் கட்டுபடுத்துவதற்கான மருந்துகள் தற்போதே பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இருப்பினும், கொரோனாவின் தீவிரம் மற்றும் பரவும் தன்மை நாளுக்கு நாள் புதிய இலக்கை எட்டியவாறு இருக்கின்றது.

இது, மக்கள் அடர்த்தி அதிகம் கொண்டு நாடுகளில் மட்டுமின்றி குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட இத்தாலி போன்ற நாடுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.
ஆகையால், பேராபத்தை ஏற்படுத்தும் உயிர் கொல்லி வைரஸ் கொரோனாவிடம் இருந்து மக்களைக் காக்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கு அந்தந்த மாநில அரசும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றது.

இதன்படியே தற்போது நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன. மேலும், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களை இணைக்கும் அனைத்து போக்குவரத்து வசதிகளுக்கும்கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், மக்களை தனிமைப்படுத்தி கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து காக்க முடியும் என மத்திய, மாநில அரசுகள் அதிகளவில் நம்பிக்கை வைத்திருக்கின்றன.
இந்த ஊரடங்கு உத்தரவானது முன்னதாக வருகின்ற 31ம் தேதி வரை மட்டுமே அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வருகின்ற ஏப்ரல் மாதம் 14ம் தேதி வரை அது நீட்டிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய (மார்ச் 24) தினம் மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்த இத்திட்டத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் ஒத்துழைப்பில்லை. தொடர்ச்சியாக வெளியே சுற்றித் திரிந்த வண்ணம் இருக்கின்றனர். இதனை வெளிப்படுத்தும் வகையில் சென்னை அண்ணா சாலையில் ஓர் சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

வழக்கமாக ஸ்பென்சர் பிளாசாவுக்கு அருகில் அமைந்திருக்கும் சிக்னலில் எப்போதும் ஏராளமான வாகனங்கள் வரிசைக் கட்டி நிற்கும். ஆனால், இப்போது நிலைமை அப்படியே தலைகீழாக மாறியிருக்கின்றது. கொரோனா தாக்கத்தினால் பெரியளவில் வாகன புழக்கம் இல்லை.

இருப்பினும், ஒரு சிலர் மட்டும் தங்களது பயணத்தைத் தொடர்ந்தவாறு இருக்கின்றனர். அப்போது, ஸ்பென்சர் பிளாசா சிக்னலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டிராஃபிக் போலீஸ், கொரோனாவின் பேராபத்தை உணராமல் மக்கள் இப்படிச் சுற்றி திரிவதைக் கண்டு அதிர்ந்துபோனார்.

தொடர்ந்து அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளிடம், "உலகத்தின் பல வல்லரசு நாடுகளே கொரோனாவின் தீவிரத்தை தாங்க முடியாமல் கதறிக் கொண்டிருக்கின்ற வேலையில், இந்தியா வளர்ச்சியடையாத நாடு, மக்கள் தொகை அதிகம் கொண்டது. ஆகையால், தயவு செய்து யாரும் வெளியே வராதீர்கள். தயவு செய்து வெளியே வராதீர்கள் சாமி. உங்களைக் கையெடுத்து கும்பிடுகிறேன்" என இரு கைகளையும் கூப்பி வாகன ஓட்டிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து, "தயவு செய்து புரிஞ்சிக்கோங், சீரியஸ்னஸைப் புரிஞ்சுக்கோங்க. உங்கள் கால்களை தொட்டு வணங்குகிறேன், போங்க" என அடுத்தடுத்து வரும் வாகன ஓட்டிகளிடம் கூறியவாறு அனுப்பி வைத்தார். மேலும், இந்த சம்பவத்தின்போது அவர் கண்கள் கலங்கியதாக கூறப்படுகின்றது.
மேலும், இந்த சம்பவத்தின் அவ்வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் போலீஸாரின் செய்கையைக் கண்டு அவரில் காலில் விழுந்தும் சென்றார்.

டிராஃபிக் போலீஸாரின் இந்த அறிவுரைகுறித்த வீடியோ தற்போது பேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் டுவிட்டர் ஆகிய சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. தொடர்ந்து, போக்குவரத்து போலீஸாரின் இந்த கண்களை கலங்க வைக்கின்ற வீடியோவைக் கண்டு பலர் பாராட்டியும், சாலைகளில் தேவையின்றி சுற்றித் திரியும் வாகன திட்டியும் வருகின்றனர்.


Click it and Unblock the Notifications








