இனி Gpay, Phonepe மூலம் பஸ் டிக்கெட் எடுக்கலாம்... பணம் கொண்டு செல்ல தேவையில்லை...

டிசம்பர் மாதம் முதல் தமிழக அரசு பஸ்களில் இ-டிக்கெட் முறை அறிமுகப்படுத்தப்போவதாகத் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

இனி G pay , Phone pe மூலம் பஸ் டிக்கெட் எடுக்கலாம் . . . பணம் கொண்டு செல்ல தேவையில்லை. . .

இந்தியாவில் கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பிற்குப் பிறகு இந்தியாவில் UPI என்ற பணப்பரிமாற்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் படி ஒருவர் தனது வங்கிக் கணக்கிலிருந்து மற்றொருவர் வங்கிக் கணக்கிற்கு நொடி பொழுதில் பணத்தைப் பரிமாற்றம் செய்து விட முடியும். இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இந்தியாவில் பணப்பரிமாற்றம் எளிமையானது. இன்று சிறிய பெட்டிக் கடைகள் முதல் பெரிய பெரிய கடைகள் வரை எல்லா இடங்களிலும் இந்த பரிவர்த்தனை வந்துவிட்டது.

இனி G pay , Phone pe மூலம் பஸ் டிக்கெட் எடுக்கலாம் . . . பணம் கொண்டு செல்ல தேவையில்லை. . .

செல்போனை பயன்படுத்தி க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தால் அதன் மூலம் ஒருவர் வங்கிக் கணக்கிலிருந்து எளிதாகப் பணம் பரிமாற்றம் ஆகிவிடும். இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டவுடன் இந்தியாவில் பல நிறுவனங்கள் பல விதத்தில் இந்த வகை பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர். போக்குவரத்து வசதிகளைப் பொருத்தவரை இந்தியாவில் ஆன்லைன் முன்பதிவுகளில் இந்த முறையில் பரிவர்த்தனை செய்வது பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.

இனி G pay , Phone pe மூலம் பஸ் டிக்கெட் எடுக்கலாம் . . . பணம் கொண்டு செல்ல தேவையில்லை. . .

ஆனால் முன்பதிவில்லாத போக்குவரத்தில் டிஜிட்டல் முறை பரிவர்த்தனை அமலுக்கு வரவில்லை. அந்த வகை பயணங்களுக்கு இன்றும் மக்கள் பணத்தைக் கொடுத்தே டிக்கெட்களை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்த முறையில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளைக் கொண்டுவர வேண்டும் என மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாகக் கோரிக்கை எழுந்து வந்தது.

இனி G pay , Phone pe மூலம் பஸ் டிக்கெட் எடுக்கலாம் . . . பணம் கொண்டு செல்ல தேவையில்லை. . .

இந்தியாவில் முன்பதிவில்லாத போக்குவரத்தில் மெட்ரோ போக்குவரத்தில் டிஜிட்டல் முறை டிக்கெட்கள் வழங்கப்படுகின்றனர். அதில் ஒருவர் ஸ்மார்ட் கார்டு ஒன்றை வாங்கி அதில் ரீசார்ஜ் செய்து கொண்டால் நீங்கள் மெட்ரோல்வில் பயணிக்கும் போது அந்த ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி டிக்கெட் எடுக்க முடியும். இதே போன்ற திட்டத்தை மற்ற போக்குவரத்திலும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை இருந்தது.

இனி G pay , Phone pe மூலம் பஸ் டிக்கெட் எடுக்கலாம் . . . பணம் கொண்டு செல்ல தேவையில்லை. . .

இந்நிலையில் இன்று காலை சென்னையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி பள்ளி மாணவர்களுக்கு பஸ்பாஸ்க்காக ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் கார்களை இந்த கல்வியாண்டிற்காகப் புதிதாக மாற்றும் திட்டத்தைச் செயல்படுத்தி வருவதாகவும் அதுவரை பழைய கார்டுகளை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் கூறினார்.

இனி G pay , Phone pe மூலம் பஸ் டிக்கெட் எடுக்கலாம் . . . பணம் கொண்டு செல்ல தேவையில்லை. . .

மேலும் அவர் தமிழகத்தில் இந்தாண்டு இறுதிக்குள் இடிக்கெட் நடைமுறை பஸ்டிக்கெட்களில் கொண்டு வரப்படும் எனக் கூறினார். அதன்படி பயணிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். அந்த ஸ்மார்ட் கார்டு மூலம் பயணிகள் தமிழக பேருந்துகளில் பயணித்துக்கொள்ளலாம். அதற்கான பணத்தை UPI பணப்பரிவர்த்தனை மூலம் கட்டிக்கொள்ள முடியும்.

இனி G pay , Phone pe மூலம் பஸ் டிக்கெட் எடுக்கலாம் . . . பணம் கொண்டு செல்ல தேவையில்லை. . .

இந்த நடைமுறை அமுலுக்கு வந்துவிட்டால் இனி பஸ்களில் பயணிக்கும் போது பணத்தைக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. செல்போன் மூலமே டிக்கெட் எடுத்துக்கொள்ள முடியும். இதனால் மக்களுக்கு பஸ் பயணம் சுலபமாக அமையும். இன்று மக்கள் மத்தியில் UPI பரிவர்த்தனை சுலபமாகிவிட்ட நிலையில் இந்த திட்டம் பெரிய அளவில் போக்குவரத்தில் மாற்றம் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி G pay , Phone pe மூலம் பஸ் டிக்கெட் எடுக்கலாம் . . . பணம் கொண்டு செல்ல தேவையில்லை. . .

ரயில்களைப் பொருத்தவரை முன்பதிவில்லாத டிக்கெட்களுக்கு டிக்கெட் வென்டிங் மிஷினில் க்யூஆர் கோடு மூலம் பணம் பரிவர்த்தனை செய்யும் திட்டம் தற்போது ஜெய்ப்பூரில் சோதனை முயற்சியில் நடந்து வருகிறது. இது வெற்றி பெற்றால் இனி நாடு முழுவதும் படிப்படியாக இந்த திட்டம் அமல் படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tamilnadu Transport minsiter talks about introduction of e tickets in Government buses
Story first published: Monday, June 6, 2022, 20:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X