தகர சீட்டும், உலோக கம்பிகள் இருந்தால் போதும் போலையே.. டிவிஎஸ் எக்ஸ்எல்லை பண்ணை வாகனமா மாற்றிய தமிழக இளைஞர்!

"டிவிஎஸ் எக்ஸ்எல் (TVS XL)-லை இப்படியும் பயன்படுத்தலாமா" என ஆச்சரியத்துடன் கேட்கச் செய்திருக்கின்றார் தமிழகத்தைச் சேர்ந்த சத்திஷ் எனும் இளைஞர். சிறிய வாகனங்களை வீட்டிலேயே வைத்து தயாரிப்பதில் இவர் கை தேர்ந்தவர். ஆட்டோ-விலேயே மினி ஆட்டோ, குட்டி லாரி, பழைய இரும்பு டிரம்-மால் உருவாக்கப்பட்ட கார் என பல விதமான வாகனங்களை அவர் இதுவரை தயார் செய்திருக்கின்றார். இந்த நிலையிலேயே அவர் யாரும் நம்ப முடியாத வகையில் டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனத்தை அவர் மாற்றி இருக்கின்றார்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் அந்த வாகனத்தை பண்ணைகளில் பயன்படுத்தும் வாகனமாக மாற்றி இருக்கின்றார். அதாவது, சாலையில் கொட்டப்பட்டு இருக்கும் வைக்கோல் மற்றும் நெல் உமி-யை தள்ளும் எந்திரமாக பயன்படுத்தும் வகையில் மொபட்டை மாற்றி இருக்கின்றார். இது பலருக்கும் ஆச்சரியத்தை வழங்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

Tamilnadu youth converts moped to excavator

பொருட்களைத் தள்ளுவதற்காக அவர் உலோக ஷீட்டைப் பயன்படுத்தி இருக்கின்றார். பார்ப்பதற்கு ஓர் பழைய டிரம்மின் பாதியைப் போன்றும் தெரிகின்றது. தொடர்ந்து, அந்த கருவியை மேலே மற்றும் கீழே இறக்கும் வகையில் அவர் தயார் செய்திருக்கின்றார். இதற்காக தனி ஓர் மோட்டாரை அவர் பொருத்தி இருக்கின்றார்.

இதுவே அதிக எடைக் கொண்டிருந்தாலும் அந்த பொருளை தூக்க உதவுகின்றது. அதேவேளையில் இதில் மிக அதிக பொருட்களை தள்ள முடியுமா என்பது சந்தேகமாக உள்ளது. அதேநேரத்தில் குறிப்பிட்ட எடை வரையிலான பொருட்களை இந்த வாகனத்தில் வாயிலாக தாராளமாகத் தள்ளிக் கொண்டு போக முடியும்.

இதுவரை சரக்கு ஏற்றி செல்வது போன்ற பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட் வாகனம் பண்ணை வாகனமாக தமிழகத்தைச் சேர்ந்த இளைஞரால் உருவெடுத்திருக்கின்றது. இதுபோன்று வாகனங்களை மாற்றிக் கொள்வது இந்தியாவில் சட்டப்படி குற்றமாகும். அதேவேளையில், இதுபோன்று மலிவு விலை வாகனங்களை பண்ணை வாகனமாக மாற்றுவதன் வாயிலாக ஏழை விவசாயிகள் பெரும் பலன் அடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பண்ணை வாகனமாக மாற்றுவதற்காக எவ்வளவு செலவானது என்பது பற்றிய விபரம் வெளியாகவில்லை. அதேநேரத்தில் இந்த மாற்றத்திற்கு ஒரு சில ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே செலவாகியிருக்கும் என யூகிக்கப்படுகின்றது. இந்தியாவில் டிவிஎஸ் எக்ஸ்எல் மொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

எக்ஸ்எல் 100 ஹெவி டியூட்டி, எக்ஸ்எல் 100 கம்ஃபோர்ட் ஐ-டச் ஸ்டார்ட், எக்ஸ்எல் 100 ஹெவி டியூட்டி ஐ-டச் ஸ்டார்ட் மற்றும் எக்ஸ்எல் 100 வின் எடிசன் ஆகியவை அவை ஆகும். இதில் ஹெவி டியூட்டியே ஆரம்ப நிலை வேரியண்ட் ஆகும். இது ரூ. 44,999 என்கிற மிக மிக குறைவான விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இதில் 4 ஸ்ட்ரோக் சிங்கிள் சிலிண்டர் எஞ்சினை பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது 99.7 சிசி திறன் கொண்ட மோட்டார் ஆகும். அதிகபட்சமாக 4.3 பிஎச்பி மற்றும் 6.5 என்எம் டார்க்கை இந்த மோட்டார் வெளியேற்றும்.130 கிலோ வரையிலான எடையைத் தாங்கும் திறன் கொண்டதே இந்த மொபட் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழக இளைஞரின் இந்த மாற்றம் பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக வாகன ஆர்வலர்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவில் இந்த மாதிரி வாகனங்களை மாடிஃபை செய்வது சட்டப்படி குற்றம் என்றாலும், இதை ரசிக்காமல் இருக்க முடியவில்லை என்பதை நாம் இங்கு ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 18, 2025, 16:47 [IST]
English summary
Tamilnadu youth transforms tvs xl moped into functional excavator
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+