இலட்ச ரூபாய் கொடுத்து பைக் வாங்கி கொடுக்குறது வேஸ்ட்! நடுரோட்டில் இளைஞர்கள் செய்த முகம் சுளிக்க வைக்கும் செயல்
தீபாவளி பண்டிகையை தமிழ்நாட்டில் இளைஞர்கள் சிலர் நடுரோட்டில் மோட்டார்சைக்கிளில் பட்டாசு வெடித்துக் கொண்டாடி உள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இலட்ச ரூபாய் கொடுத்து வாங்கப்படும் மோட்டார்சைக்கிளில் இவ்வாறு தீப்பொறிகளை ஏற்படுத்தக்கூடிய பட்டாசுகளை வெடிப்பது எந்த அளவிற்கு ஆபத்தானது என்பதை இனி பார்க்கலாம்.
இணைய மோகம் நம்மை ஆட்டி படைத்து வருகிறது. கையில் மொபைல் போனை வைத்துக் கொண்டு சமூக வலைத்தளங்களில் லைக்குகளையும், கமெண்ட்களையும் பெற ஏங்குவோரே அதிகம். இதனாலேயே, சமூக வலைத்தள பக்கங்களில் கவனத்தை பெற பலர் பல்வேறு விதமான செயல்களில் ஈடுப்பட்டு, அதனை வீடியோவாக காட்சிப்படுத்தி இணையத்தில் பதிவிடுகின்றனர்.

ஆரம்பத்தில் இவ்வாறான செயல்கள் ரசிக்கக்கூடியவை ஆகவும், விழிப்புணர்வையும், அறிவையும் வளர்க்கக்கூடியவை ஆகவும் இருந்தன. ஆனால், பிரபலமாகுவதற்கு இணையத்தில் மக்களிடையே அதிகரித்து வரும் போட்டியால் இன்றைய காலத்திலோ மற்றவர்களின் கவனத்தை பெறுவதற்கு சிலர் விசித்திரமான செயல்களில் கூட ஈடுப்படுகின்றனர்.
குறிப்பாக, இளம் தலைமுறையினர் ஆபத்தை உணராமல் லைக்குகளை பெறுவதற்காக அபாயகரமான செயல்களில் ஈடுப்பட்டுள்ளதை கடந்த காலங்களில் பார்த்துள்ளோம். அந்த வரிசையில், கடந்த தீபாவளி தினந்தன்று இரவு நேரத்தில் பொது சாலையில் பைக்கின் மீது பட்டாசு வெடித்தப்படி இளைஞர் ஒருவர் பயணம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதில் மேலும் நாம் கவலைப்பட வேண்டிய விஷயமென்றால், இந்த சம்பவத்தில் இந்த நபர் பைக்கின் மீது பட்டாசு வெடித்தது மட்டுமின்றி, அப்படியே பைக்கில் வீலிங்கையும் செய்து உள்ளார். இது உண்மையில் ஆபத்தானது என்பதை விட, பைத்தியகாரத் தனமானது என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனெனில், ஈடுப்படுபவருக்கு ஆபத்தை விளைப்பது மட்டுமின்றி, இவ்வாறான செயல்கள் சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். இதில் நாம் கவலைப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த சம்பவம் நடைபெற்று இருப்பது நம் தமிழ்நாட்டில் ஆகும். இந்த செயலில் ஈடுப்பட்டிருக்கும் இளைஞர்கள் வைத்திருக்கும் பைக்குகளின் நம்பர் பிளேட்டை வைத்து இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெற்று இருப்பதாக கூறுகிறோம்.

இந்த செயலில் பயன்படுத்தப்பட்டு இருப்பது யமஹாவின் எம்டி-15 என்ற நகர்புற சாலைகளுக்கு ஏற்ற ஸ்ட்ரீட்ஃபைட்டர் மோட்டார்சைக்கிள் ஆகும். வீலிங் செய்யும்போது பைக்கின் முன்பக்க கௌல் பகுதியில் சமமான இடம் கிடைக்கும். அதனை பயன்படுத்தி, அந்த இடத்தில் பட்டாசை பற்ற வைத்து இந்த இளைஞர்கள் வெடித்துள்ளனர்.
இரவு நேரத்தில், பைக் ஒன்றின் மீது நெருப்பு ஏற்படுவதை தூரத்தில் இருந்த வாகன ஓட்டிகள் கூட அடையாளம் கண்டுள்ளனர். அவர்களுள் சிலர் இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க, சம்பந்தப்பட்ட போலீஸார் தங்களது விசாரணையை துவங்கி உள்ளனர். வீடியோவில், பைக்குகளின் நம்பர் பிளேட் தெளிவாக தெரிவதால், இந்த இளைஞர்களை அடையாளம் காண்பது போலீஸாருக்கு பெரியதாக பிரச்சனையாக இருக்காது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பொது சாலையில் பைக்கில் வீலிங் செய்வதே முதலில் மோட்டார் வாகன சட்டங்களின்படி குற்றமாகும். அப்படியிருக்கையில், பைக்கின் மீது பட்டாசுகளை வெடித்தப்படி பைக் வீலிங் செய்வது அதனினும் குற்றமாகும். இவ்வாறான செயல்கள் சாலையில் மற்ற வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கக்கூடியவை.


Click it and Unblock the Notifications









