கான்டெஸா காரை கவர்ச்சிக் கன்னியாக மாற்றிய சென்னை நிறுவனம்!

Written By:

பாரம்பரியம் மிக்க கார்களை வைத்திருப்பவர்கள், அதற்கு அவ்வப்போது புதுப்பொலிவு கொடுக்க தவறுவதில்லை. மேலும், அந்த கார்களை தங்களது விருப்பத்திற்கு ஏற்ப மாறுதல்களை செய்து, மிக மிக கவர்ச்சியாக மாற்றி பயன்படுத்துவதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்.

அவ்வாறு, ஒரு வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப, பழைய கான்டெஸா கார் ஒன்றை மிக அட்டகாசமாக கஸ்டமைஸ் செய்து அசத்தியிருக்கிறது சென்னையை சேர்ந்த மாட்ஸ்டெர்ஸ் ஆட்டோமோட்டிவ் நிறுவனம். நம் காரிலும் மாறுதல்களை செய்துவிடலாமா என்று தோன்றும் அளவுக்கு மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கும் கான்டெஸா காரின் படங்கள், கூடுதல் தகவல்கள் மற்றும் தொடர்புக்கான மொபைல் எண் உள்ளிட்ட தகவல்களை தொடர்ந்து காணலாம்.

 மேட் ஃபினிஷ்

மேட் ஃபினிஷ்

இந்த கான்டெஸா கார் ரெவென்ட்டன் கிரே வண்ணத்தில் மேட் ஃபினிஷ் கொடுக்கப்பட்டிருப்பது பார்ப்போரை கவர்ந்திழுக்கிறது.

மாற்றங்கள்

மாற்றங்கள்

முகப்பு க்ரில் அமைப்பு புதிதாக மாற்றப்பட்டிருப்பதுடன், புதிய பம்பர் அமைப்பு கொடுக்கப்பட்டிருப்பது வித்தியாசமான தோற்றத்தை தருகிறது.

 எல்இடி ஹெட்லைட்

எல்இடி ஹெட்லைட்

முகப்புக்கு முத்தாய்ப்பான விஷயம், எல்இடி ஹெட்லைட்டுகள். அதேபோன்றுதான் டெயில் லைட் க்ளஸ்ட்டரிலும் எல்இடி விளக்குகள் உள்ளன. பின்புறத்தில் பூட்ரூம் மூடியும் சேர்ந்த வகையிலான டக் டெயில் ஸ்பாய்லர் பொருத்தப்பட்டிருப்பது ரேஸ் கார்கள் போன்ற தோற்றத்தை வழங்குகிறது.

வீல்கள்

வீல்கள்

மிக அட்டகாசமான டிசைனிலான மேக் வீல்கள் பொருத்தப்பட்டிருப்பது காரின் கவர்ச்சியை பன்மடங்கு கூட்டுவதாக இருக்கிறது.

இன்டீரியர்

இன்டீரியர்

வெளிப்புறத்தில் பல கூடுதல் மாற்றங்களுடன் கவர்வது போன்றே, உட்புறத்தில் புதிய அப்ஹோல்ஸ்ட்ரி கொடுக்கப்பட்டிருப்பதால், பயணிப்பவர்களுக்கும் உன்னத அனுபவத்தை தரும்.

இதர பணிகள்

இதர பணிகள்

பழைய கார்கள் மட்டுமின்றி, கார்களுக்கு கூடுதல் ஆக்சஸெரீகளை பொருத்தி அலங்கரித்து தரும் பணிகளையும் மாட்ஸ்டெர்ஸ் டீம் செய்து தருகின்றனர். ஏற்கனவே, ஸ்விஃப்ட், பீட் உள்ளிட்ட கார்களிலும் இவர்கள் தங்கள் கைவண்ணத்தை காட்டி வாடிக்கையாளர்களை திருப்தி கொள்ள செய்துள்ளனர்.

தொடர்புக்கு...

தொடர்புக்கு...

இதுபோன்று உங்களது காரில் சிறிய அளவிலோ அல்லது பெரிய அளவில் கஸ்டமைஸ் செய்து தரும் பணிகள் குறித்த தகவல்களை பெற modsters.nfs@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது 0-9962599491 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறியலாம்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Tastefully Modified Contessa Car By Modsters Customs.
Story first published: Thursday, July 14, 2016, 10:18 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark