டீசல் டேங்க் மயிரிழையில் தப்பிச்சுது!! 5-ஸ்டார் காருக்கா இப்படியொரு நிலைமை... உள்ளே இருந்தவர் கதி?
சாலையின் குறுக்கே வந்த நாயை காப்பாற்ற டாடா அல்ட்ராஸ் மற்றும் டாடா ஹெக்ஸா கார்கள் மோதிக் கொண்டுள்ளன. எங்கு இந்த விபத்து நடைபெற்றுள்ளது? இதில் இரு டாடா கார்களும் எந்த அளவிற்கு சேதங்களை சந்தித்துள்ளன? என்ற கேள்விகளுக்கு பதில்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
அதிவேக பயணம் எப்போதுமே ஆபத்தானது என்பதை ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறோம். ஏன் ஆபத்தானது என்பதற்கு பல்வேறு சம்பவங்களை இதற்கு முன் பார்த்துள்ளோம். அந்த வரிசையில் மற்றொரு சம்பவத்தை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க போகின்றோம். இந்த விபத்தில் சிக்கியிருக்கும் டாடா அல்ட்ராஸ் காரின் உரிமையாளரின் பெயர், பாலாஜி.

கடந்த 2023 மார்ச் மாதத்தில் தான் இந்த காரை அவர் வாங்கி இருந்தார். புதிய கார் என்றாலே அடுத்த சில மாதங்களுக்கு தொடுவதற்கு கூட யோசித்து, யோசித்து பயன்படுத்துவோம் அல்லவா... இவர் விபத்து நடப்பதற்கு முன்பு வரையில், கடந்த 6 மாத காலமாக அவ்வாறுதான் பயன்படுத்தி வந்துள்ளார். ஆனால் ஒரு தெருநாயினால் காரின் பின்பகுதி முழுவதுமாக நொறுங்க உள்ளது என்று பாலாஜி யோசித்தே பார்த்திருக்க மாட்டார்.
நெடுஞ்சாலையில் மணிக்கு 90கிமீ வேகத்தில் இயங்கிக் கொண்டிருந்த போது குறுக்கே நாய் வந்தால் என்ன செய்வது என நம்மில் பலருக்கு சட்டெரன யோசிக்க தோன்றாது. இந்த விபத்து சம்பவம் தொடர்பாக அல்ட்ராஸ் கார் ஓனர் இணையத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், நாயை காப்பாற்ற வேண்டி காரை சடர்ன் பிரேக் கொடுத்து நிறுத்தியதாக கூறியுள்ளார்.

ஆனால் இவர் அடித்த பிரேக்கை உடனடியாக காருக்கு பின்னால் வந்த டாடா ஹெக்ஸா கார் உரிமையாளரால் உணர முடியவில்லை. எதற்காக இவ்வாறு பிரேக் அடிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்வதற்குள் டாடா ஹெக்ஸா காரின் முன்பக்கம் அல்ட்ராஸ் காரின் பின்பக்கத்துடன் பலமாக மோதியுள்ளது. இதுகுறித்து இணையத்தில் வெளியாகியுள்ள படங்களிலும், வீடியோக்களிலும் அல்ட்ராஸ் காரின் பின்பகுதி முற்றிலுமாக உள்ளே அமுக்கிப்போய் உள்ளதை காணலாம்.
எந்த அளவிற்கு என்றால், பம்பர் உள்பட காரின் பின்பக்க பேனல்கள் முழுவதுமாக 2வது இருக்கை வரிசை வரையில் அழுத்தப்பட்டுள்ளன. க்ளோபல் என்சிஏபி மோதல் சோதனையில் முழு 5 நட்சத்திரங்களை பெற்ற காரின் நிலைமையா இப்படி உள்ளது? என நம்மை ஆச்சிரியப்பட வைக்கிறது. இதைதான் இணையத்திலும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

மறுப்பக்கம், டாடா ஹெக்ஸா காரின் முன்பகுதியும் சற்று அதிகமாகவே சேதமடைந்துள்ளது. ஹெக்ஸா காரின் பொனெட், ஹெட்லைட்கள், ஃபாக் விளக்குகள் மிகவும் சேதமடைந்துள்ளன. ஹெக்ஸா கார் மோதிய வேகத்தில் அல்ட்ராஸ் கார் பாதையை கடந்து, நெடுஞ்சாலையின் மறுமுனையில் இருந்த தடுப்பு கம்பியில் மோதி நின்றுள்ளது.
அல்ட்ராஸ் காரின் பின்பகுதி பலமாக நொறுங்கி போய் இருப்பினும், தனக்கு ஒரு கீறல் கூட ஏற்படவில்லை என கார் ஓட்டுனர் சந்தோஷமாக கூறுகிறார். ஆனால், பின்பக்கத்தில் யாரேனும் அமர்ந்திருந்தால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் பாலாஜி கூறியுள்ளார். காருக்கு காப்பீடு உள்ளது என்றாலும், காப்பீட்டு பணத்தை பெறுவதற்கு குறைந்தது 3 மாதங்களாகும் என பாலாஜி வருத்தமாக உள்ளார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சாலைகளில் எப்போது எது குறுக்கே வரும் என்பதை கூற இயலாது. நெடுஞ்சாலைகளில் விரிவுப்படுத்துவதற்கு மத்தியில் இதற்கான ஓர் தீர்வையும் அரசாங்கம் கண்டறிய வேண்டும். ஏனெனில், பாதுகாப்பான சாலை போக்குவரத்தை அடைய வேண்டுமெனில், இவ்வாறான தேவையற்ற இடையூறுகளை முதலில் தடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









