ராணுவம் பயன்படுத்திய வாகனத்த இப்படி பாக்குறதுக்கு ரொம்ப பெருமையா இருக்கு.. மறு வாழ்க்கை கொடுத்தவருக்கு நன்றி!

இந்தியாவில் வாகனங்களை மாடிஃபை செய்வது மோட்டார் வாகன சட்டத்தின்படி விதிமீறல் செயல் ஆகும். அதாவது, ஓர் வாகனத்தின் உண்மை தோற்றத்தை மழுங்கடிக்கச் செய்கின்ற வகையில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களுக்கு நாட்டில் தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. இருப்பினும், ஒரு சிலர் தங்களுக்கு பிடித்த மாதிரி வாகனங்களை மாடிஃபை செய்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த மாதிரியான மாற்றம் செய்யப்பட்ட வாகனங்களின் பயன்பாட்டிற்கு அங்கீகாரம் இல்லை என்றாலும், அவற்றை நம்மால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை. அந்த மாதிரியான ஓர் வாகன மாடிஃபிகேஷனாகவே மிலிட்டரி வாகனம் ஒன்று செய்யப்பட்டு இருக்கின்றது.

ஒரு காலத்தில் இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட டாடா 2.5 டன் 4X4 டிரக் (Tata 2.5 Ton 4×4 Truck) ஒன்றே கேரவன் வாகனமாக மாற்றப்பட்டு இருக்கின்றது. அந்த வாகனத்தின் படத்தையே பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இதில் என்ன மாதிரியான மாற்றமங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் எல்லாம் சேர்க்கப்பட்டு இருக்கின்றன என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

Tata army truck transformed into overlanding vehicle

இந்தியாவில் கடந்த காலங்களில் ஃபோர்ஸ் டிராவல்லர் அல்லது மினி பேருந்துகள் போன்ற வாகனங்களையே கேரவன் வாகனங்களாக மாற்றி நாம் பார்த்திருப்போம். ஆனால், முதல் முறையாக டிரக் ஒன்று தங்கும் வசதிக் கொண்ட வாகனமாக மாற்றப்பட்டு இருக்கின்றது. இந்த வாகனம் கடந்த நாட்களில் ராணுவத்தின் முக்கிய தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது.

பள்ளம், மேடு, காடு மற்றும் மலைகள் என எதையும் பாராமல் உழைத்து வந்த வாகனமே இதுவாகும். மிக முக்கியமாக இந்திய ராணுவத்துடன் சேர்ந்து நாட்டை பாதுகாக்கும் பணியில் அயராத உழைப்பை வழங்கி வாகனமே இதுவாகும். இத்தகைய வாகனத்திற்கே பெருமிதம் சேர்க்கும் விதமாகவே, தற்போது அதனை தங்கும் வசதிக் கொண்டதாக மாற்றியிருக்கின்றனர்.

Tata army truck transformed into overlanding vehicle here is front look

இந்த வாகனத்தை ஏலத்தின் வாயிலாகவே அவர்கள் வாங்கி இருக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இந்த வாகனத்தை அதன் புதிய உரிமையாளர் ஏலத்தில் வாங்கிவிட்டதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே, வாங்கிய கையோடு அவர் அதனை மாற்றும் பணியிலும் களமிறங்கி இருக்கின்றார். இப்போதே, அந்த பணிகள் முடிவடைந்திருக்கின்றன.

அதாவது, தங்குவதற்கு ஏதுவான வசதிக் கொண்ட வாகனமாக டாடா 2.5 டன் டிரக் மாற்றப்பட்டு இருக்கின்றது. டாடா 2.5 டன் டிரக்கின் இந்த வசதிக்காக அதன் உடல் அமைப்பு முற்றிலுமாக மாற்றி இருக்கின்றனர். இதன் புதிய தோற்றத்திற்காக வாகனம் முழுக்க பெரிய உலோக கம்பிகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

இத்துடன், சில இடங்களில் உலோக பைப்புகளும் பொருத்தப்பட்டு இருக்கின்றன. மேலும், என்ன மாதிரியான நிலப்பரப்புளுக்கும் எடுத்துச் செல்லும் வகையிலும் இந்த வாகனத்தை அவர்கள் தயார் செய்திருக்கின்றனர். எடுத்துச் செல்வது மட்டுமல்ல, அங்கு வைத்து தற்காலிக தங்கும் வசதியையும் இந்த வாகனத்தின் வாயிலாக ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

இதன் அடிப்படையில் வாகனத்தின் இரண்டு பக்கமும் விரிவாக்கம் செய்துக் கொள்கின்ற வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது. அதாவது, வாகனத்தின் உடல்பக்கத்தின் அகலத்தை விரிவாக்கம் செய்துக் கொள்வதற்கான வசதி வழங்கப்பட்டு உள்ளது. தங்கும் இடத்தை இன்னும் பெரிதாக மாற்றிக் கொள்ளும் பொருட்டே இந்த வசதி அதற்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், இந்த வாகனத்தில் கூடுதல் சௌகரியமான உணர்வை வழங்குவதற்காக ஸ்பிளிட் ஏசி, மேற்கூரை மற்றும் கீழ் பகுதியில் மினி பெட்ரூம் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்று கேரவன்களுக்கு இணையான இன்னும் பல அம்சங்கள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட இந்த வாகனம் அப்படியே கை விடப்பட்டு துருவிற்கு இரையாக விடமாலேயே காலகாலத்திற்கும் உழைக்கின்ற வகையில் அதற்கு கேரவன் எனும் மறு அவதாரம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது அந்த வாகனத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, December 23, 2024, 5:00 [IST]
English summary
Tata army truck transformed into overlanding vehicle
மேலும்... #modification #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+