ஒரே குடும்பத்தில் 8 ஆண்டுகளில் 6 கார்களை வாங்கிட்டாங்க! எப்படி தெரியுமா?

கடந்த எட்டு ஆண்டுகளில் ஒரே குடும்பத்தில் 6 டாடா கார்களை வாங்கிய சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அந்த குடும்பம் ஏன் டாடா மோட்டார்ஸ் வாகனத்தை அதிகம் விரும்புகிறது என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

சமீபகாலமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மக்களின் நம்பிக்கையே அதிகம் பெற்று வருகிறது. மக்கள் பலர் டாடா வாகனங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பிட்ட சில செக்மெண்ட்களில் டாடா வாகனங்கள் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இது மட்டுமல்லாமல் அதிக நம்பகத்தன்மையான வாடிக்கையாளர்களையும் அந்த நிறுவனம் பெற்று வருகிறது. ஏற்கனவே டாடா மோட்டார் வாகனங்களை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் மீண்டும் தனது அடுத்த வாகனத்தை தேர்வு செய்யும் போது டாடா மோட்டார் வாகனத்தை தேர்வு செய்யும் பல தருணங்களை நாம் பார்த்திருப்போம்.

Tata Cars in Family

இப்படியாக ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று சமீபத்தில் தனது 6வது புதிய டாடா காரை வாங்கியுள்ளது. இந்த 6 கார்களை கடந்த எட்டு ஆண்டுகளுக்குள் வாங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்த வீடியோ ரேட் டாடா கர்வ் கார் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து டாடா வாகனத்தின் நம்பகத்தன்மை குறித்து பேசி வருகிறார்கள்.

இந்த வீடியோ முதலில் டாப்வியூவில் துவங்குகிறது. அங்கு மொத்தம் நான்கு கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. முதல் வரிசையில் கருப்பு நிற ஹாரியர் மற்றும் சிவப்பு நிற டாடா கார் வாங்கிய கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதற்கு பின்னால் டாடா டியாகோ மற்றும் பஞ்ச் ஆகிய கார்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த கார்கள் எல்லாம் அந்த குடும்பத்தைச் சேர்ந்த கார்கள் இதற்கு முன்னர் அவர்கள் வாங்கி பயன்படுத்தி வரும் கார்களாக இருக்கிறது. மொத்தம் நான்கு கார்கள் இந்த வீடியோவில் காட்டப்படுகிறது.

Tata Cars in Family

அடுத்ததாக டாடா நெக்ஸான் கார் ஒன்று முழுமையாக கவர் செய்யப்பட்டுள்ளது. அந்த கவரை அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நிற்கிறார்கள் உள்ளே கருப்பு நிற நெக்ஸான் கார் இருக்கிறது. இந்த காரை அவர்கள் 6வது டாடா காரராக வாங்குவதாக அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் ஏற்கனவே நமக்கு 4 கார்களை காட்டிய நிலையில் இவர்களிடம் ஏற்கனவே ஒரு டாடா நெக்ஸான் கார் இருப்பதாகவும், தற்போது இது இரண்டாவது காரை வாங்கியுள்ளதாக அவர்கள் இந்த பதிவின் டிஸ்கிரிப்ஷனில் வெளியிட்டுள்ளார்கள்.

இந்த குடும்பம் டாடா கார்களை அதிகமாக தேர்வு செய்வதற்கு முக்கியமான காரணம் அதன் பாதுகாப்பு அம்சங்கள் தான் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குடும்பம் டாடா வாகனங்களை வாங்குவதால் அதன் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் விபத்து ஏற்படும்போது நடக்கும் விஷயங்களில் அதிக நம்பகத்தன்மை கொண்ட வாகனமாக இருப்பதாகவும் நீண்ட கால வாகன உரிமையை அனுபவத்திற்கு ஏற்ற வாகனமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

Tata Cars in Family

கடந்த எட்டு ஆண்டுகளாக 5 டாடா கார்களை பயன்படுத்தும் ஒரு குடும்பத்தின் அனுபவம் என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. இதனால் சமூக வலைதளங்களில் இவர்களது அனுபவம் மிக பெயரிலாக பரவி வருகிறது. மேலும் இந்த காரை அவர்கள் ஸ்பிட்டி வேலி பகுதியிலும் ஆஃப் ரோடு அனுபவத்திற்காக எடுத்துச் சென்றுள்ளார்கள். அப்பொழுதும் அவர்களுக்கு சிறப்பான அனுபவம் கிடைத்துள்ளது. ஆங்காங்கே இருக்கும் சில பிரச்சனைகளை தவிர மற்றபடி டாடா நிறுவனம் தனது கார்களுக்கு சிறப்பான சர்வீஸ் மற்றும் பாதுகாப்பை வழங்குவதாக அந்த குடும்பம் தெரிவித்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டாடா நிறுவனம் மக்களின் நம்பிக்கையை அதிகம் பெற்று வருகிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணமாக இருக்கிறது. மக்கள் பலர் இந்த காரை விரும்பி வாங்கி வருகிறார்கள். டாடா நிறுவனம் மாருதி நிறுவனத்திற்கு இணையாக மக்களை நம்பிக்கையை பெற்று வருவதால் எதிர்காலத்தில் இந்த கார்களின் விற்பனை மிக அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். ஒரே குடும்பத்தில் 8 ஆண்டுக்குள் ஆறு கார்களை வாங்கியது மிகப்பெரிய விஷயம்தான். இது போன்ற பல சம்பவங்கள் அடுத்தடுத்து நடக்கும் என எதிர்பார்க்கலாம்

More from DriveSpark

Article Published On: Tuesday, October 21, 2025, 8:30 [IST]
English summary
Tata cars in family buying journey 6 cars in 8 years
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X