எலெக்ட்ரிக் காரை தூர விடுங்க! டாடா காத்துலயே போற காரை கண்டுபிடிக்கபோறாங்களாம்!
அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக கருதப்படும். ஹைட்ரஜன் இன்ஜினை தயாரிக்கும் தொழிற்சாலையை ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்செத்பூரில் தற்போது துவங்கி உள்ளது. இங்கு விரைவில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் இன்ஜின் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அமெரிக்காவை சேர்ந்த கம்மிங்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் டாடா கம்மிங்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற துணை நிறுவனத்தை உருவாக்கியது. இந்த நிறுவனம் குறைவான மாசு ஏற்படுத்தும் மற்றும் மாசுவை ஏற்படுத்தாத வகையிலான இன்ஜின்களை தயாரிப்பதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனம் ஆகும்.

தற்போது மார்க்கெட்டில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது மக்களுக்கு அதிக மவுசு இருப்பதற்கு காரணம் அதன் பராமரிப்பு செலவு மற்றும் போக்குவரத்திற்கான செலவு என்பது பெட்ரோல் காரை ஒப்பிடும்போது குறைவாக இருப்பதுதான். எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் காரை விட அதிகமாக ஹைட்ரஜன் இன்ஜின் பொருத்தப்பட்ட கார்கள் தான் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.
தற்போது ஹைட்ரஜன் தேவையான அளவு இல்லை என்பதாலும், ஹைட்ரஜன் இன்ஜின்ன் தொழில்நுட்பம் பெரிய அளவில் இல்லை அல்லது அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட வேண்டிய ஒரு விஷயமாக இருப்பதால் இந்த தொழில்நுட்பத்தில் வாகனங்களின் வருகை என்பது குறைவாக இருக்கிறது. எதிர்காலத்தில் ஹைட்ரஜன் இன்ஜின் பொருத்தப்பட்ட வாகனங்களை குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.
அதில் ஒரு முயற்சியாக தான் இந்த டாடா நிறுவனமும் அமெரிக்காவை சேர்ந்த கம்மிங்ஸ் என்ற நிறுவனமும் தற்போது ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்செத்பூரில் டாடா கம்மிங்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் ஹைட்ரஜன் இன்ஜினை தயாரிக்கும் ஆலையை நிறுவியுள்ளன. இந்த ஆலையில் தற்காலிகமாக ஹைட்ரஜன் இன்ஜினை உருவாக்கும் முயற்சி நடக்கும்.
இந்த ஆலையில் வெற்றிகரமாக ஹைட்ரஜன் மூலம் இயங்கும் இன்ஜின் தயாரிக்கப்பட்டு அது குறைவான விலையில் விற்பனைக்கு கொண்டு வர முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டால் அந்த இன்ஜின்களை டாடா நிறுவனம் வாங்கி தனது வாகனங்களில் பொருத்தி விற்பனைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதற்காக தான் டாடா நிறுவனம் இந்த முயற்சியை கையாண்டுள்ளது.
இந்த தொழில்நுட்பத்தை தயாரிப்பதற்காக மிகப்பெரிய உதவியை அமெரிக்காவை சேர்ந்த கம்யூனிஸ்ட் நிறுவனம் செய்ய உள்ளது. அதற்காக டாடா மற்றும் கம்மிங்ஸ் ஆகிய இரு நிறுவனங்களும் சேர்ந்து புதிதாக ஒரு துணை நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் இந்த ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். இதற்கான ஆலை திறப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடந்துள்ளது.
உலகம் முழுவதும் ஆசை என்பது மிகப்பெரிய பிரச்சினையாக பேசப்பட்டு வருகிறது. தற்போது உலக நாடுகள் முழுவதும் தங்கள் நாட்டில் இருந்து வெளியேறும் மாசுவின் அளவை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதற்கு முக்கியமாக நாட்டில் இயங்கும் வாகனங்களில் இருந்து வெளியேறும் மாசுவின் அளவை குறைப்பதற்கான முயற்சியை தீவிரமாக எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் உலகம் எதிர்காலத்தில் மாசு இல்லாத உலகமாக மாற வேண்டும் என்பதால் தற்போது அதற்கான தொழில்நுட்பத்தை நோக்கி உலக நாடுகள் நகர்ந்து வரும் நிலையில், இந்தியாவும் அதற்கான அடுத்த படிக்கு நகர்வதற்காக இந்த முயற்சி நிச்சயம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் ஆட்டோமொபைல் துறையில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட வாய்ப்புள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகமாக விற்பனை செய்ய முயற்சி செய்து வந்தாலும் எதிர்காலத்தில் ஹைட்ரஜன் இன்ஜின் கொண்ட வாகனங்கள் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்ற பேச்சு தற்போது பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் இதற்காக டாடா நிறுவனம் தற்போதைய தயாராகி அந்த டிரெண்டையும் பிடிக்க இந்த யுக்தியை கையாண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








