புது காரை பார்த்ததும், தந்தைக்கு அடக்க முடியாத கண்ணீர்! வீட்டுக்கு வந்த டாடா கார் அப்படிப்பட்டது!!

தனது வாழ்நாள் முழுக்க ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து, பார்த்து வாங்கிக் கொடுத்த தந்தைக்கு எந்தவொரு பரிசும் ஈடாகாது என்பது உண்மைதான். இருப்பினும், மார்க்கெட்டுக்கு புதியதாக வந்த மாடர்ன் டாடா கார் (Tata Car) எவரொருவரையும் கவர்ந்துவிடும். ஆதலால், உங்களது தந்தைக்கு ஏதேனும் விலையுயர்ந்த பரிசை வழங்க விரும்பிகிறீர்கள் என்றால், டாடாவின் சமீபத்திய கார்களுள் ஒன்றை பரிசளிக்கலாம். அவ்வாறுதான், இங்கு ஒரு இளைஞர் தனது தந்தைக்கு பிராண்ட்-நியூ டாடா கர்வ் (Brand-new Tata Curvv) காரை சர்பிரைஸ் (Surprise) பரிசாக வழங்கி கவனத்தை ஈர்த்துள்ளார்.

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) இந்த 2024ஆம் ஆண்டில் பல தரமான கார்களை அறிமுகம் செய்துள்ளது. அவற்றுள் முக்கியமானது மற்றும் மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது என்று பார்த்தால், கர்வ் என்கிற கூபே எஸ்யூவி (Coupe SUV) காரை சொல்லலாம்.

tata curvv gifted by son

இந்தியாவிற்கு கூபே-ஸ்டைலிலான எஸ்யூவி கார்கள் மிகவும் புதியவை ஆகும். இதனாலேயே டாடா கர்வ் மீது பலரது கவனம் விழுந்துள்ளது. அவ்வாறுதான், இங்கு ஒருவர் தனது தந்தைக்காக புத்தம் புதிய டாடா கர்வ் காரை வாங்கியுள்ளார். பின்னர், அந்த காரை அவர் தனது தந்தைக்கு சர்பிரைஸ் பரிசாக வழங்கும் வீடியோ நிஷ்தா முக்கர்ஜி என்பவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பிரபலமான இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டவரான இந்த நிஷ்தா முக்கர்ஜியின் கணவர் தனது தந்தைக்கு டாடா கர்வ் காரை பரிசாக வழங்கியுள்ளார். காரில் இருந்து மகன் இறங்கிவந்து அதன் சாவியை கொடுப்பதை கண்டதும் அந்த தந்தை மிகவும் உணர்ச்சிவசத்துடன் ஆனந்த கண்ணீர் விட்டுள்ளார். ஏனெனில், மகன் இவ்வாறு ஒரு ஷாக்கிங் பரிசை கொடுப்பார் என அவர் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை

tata curvv gifted by son

இந்த உணர்ச்சிவசமிக்க நிகழ்வை நிஷ்தா முக்கர்ஜி தனது மொபைல் போனில் வீடியோவாக காட்சிப்படுத்தி இன்ஸ்டாகிராமில் வெளியிட, அதற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. இந்த தந்தை பெற்றிருப்பது வெள்ளை நிறத்திலான டாடா கர்வ் கார் ஆகும். இந்த வெள்ளை நிறத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பிரிஸ்டைன் வெள்ளை என அழைக்கிறது. டாடா கர்வ் காரின் எந்த வேரியண்ட்டை இவர் வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை.

ஏனெனில், பல்வேறு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படும் டாடா கர்வ் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.9.99 லட்சத்தில் இருந்து ரூ.17.69 லட்சம் வரையில் உள்ளன. வீடியோவில், கர்வ் காரை பார்க்கும்போது டாப் வேரியண்ட் என்பதுபோல்தான் தெரிகிறது. ஆனால், இது டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் கார் கிடையாது என்பதை மட்டும் உறுதியாக சொல்லலாம்.

tata curvv gifted by son

ஏற்கனவே கூறியதுபோல், டாடா கர்வ் எஸ்யூவி ஆனது தோற்றத்தில் இந்தியாவில் எந்தவொரு காரிலும் இல்லாத அளவிற்கு புதுமையானது ஆகும். காரின் மேற்கூரையின் பின்பகுதி அப்படியே சரிந்து பின் இறுதிமுனை உடன் இணைவதை பார்க்கலாம். கர்வ் கார் மொத்தம் 2 விதமான என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. 1.5 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் என்பன அவை ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெற்றோருக்கு இவ்வாறு மகன்/மகள்கள் காரை பரிசாக வழங்குவது எப்போதும் நடக்கக்கூடிய ஒன்றுதான். மொபைல் போன் தற்போது அனைவரிடத்திலும் உள்ளதால், இவ்வாறான நிகழ்வுகள் வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளன. இதேபோன்று, சில தினங்களுக்கு முன்புகூட இளைஞர் ஒருவர் பிராண்ட்-நியூ ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) காரை தனது பெற்றோருக்கு சர்பிரைஸ் பரிசாக வழங்கியிருந்தார்.

More from DriveSpark

Article Published On: Saturday, December 21, 2024, 9:30 [IST]
English summary
Tata curvv car gifted by son to his dad emotional video
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X