எலக்ட்ரிக் கார்களின் அருமை இன்னும் நிறைய பேருக்கு தெரியல! பெட்ரோல்/ டீசல் கார் பக்கமே போக மாட்டீங்க!

எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) பயன்பாட்டை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் நாடு முழுவதுமே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதனாலேயே எலக்ட்ரிக் கார்களின் விற்பனை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்துவதன் மூலமாக பல்வேறு நன்மைகள் உள்ளன. அதாவது, சுற்றுச்சூழலை மாசடையாமல் தடுக்கலாம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியையும் குறைக்கலாம்.

இவை மட்டுமில்லாமல், எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்துவதால் வேறு சில நன்மைகளும் உள்ளன. அதாவது, எலக்ட்ரிக் காரை ஒரு நடமாடும் ஸ்விட்ச் பாக்ஸ் ஆக பயன்படுத்தி, தேவைப்படும் நேரத்தில், இடத்தில் மின்சாரத்தை பயன்படுத்தலாம். இந்த காரணத்திற்காகவே நிறைய பேர் எலக்ட்ரிக் கார்களை விரும்பி வாங்கி வருகின்றனர்.

tata curvv ev electric car

மேலும், அவ்வாறு எலக்ட்ரிக் காரை வாங்குபவர்கள் அதனை வைத்து பல்வேறு செயல்களில் ஈடுப்படுவதையும் பார்க்க முடிகிறது. அந்த வரிசையில், இங்கு சிலர் தங்களது டாடா கர்வ் இவி (Tata Curvv EV) எலக்ட்ரிக் காரை வைத்து எலக்ட்ரிக் மோட்டார் பம்பை இயங்க வைத்து நீர் இரைத்து ஆச்சிரியப்படுத்தி உள்ளனர்.

இவ்வாறு எலக்ட்ரிக் காரின் மின்சாரத்தை பயன்படுத்தி மின்சாதனங்களை இயங்க வைக்கும் வசதியை இந்தியாவிலேயே முதல்முறையாக பெற்ற எலக்ட்ரிக் கார்களுள் ஒன்று, டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) ஆகும். அதனை தொடர்ந்து கடந்த 2024ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட கர்வ் இவி எலக்ட்ரிக் காரிலும் இந்த வசதியை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது.

tata curvv ev electric car

இதன் மூலமாக, நீர் இரைத்து பயன்பெற்றுள்ள இந்த பகுதி மக்கள் பயன்படுதி இருப்பது 1எச்பி ஆற்றலில் இயங்கக்கூடிய மோட்டார் பம்ப் (Motor Pump) ஆகும். இந்த நிகழ்வு நடைபெற்றுள்ள இடத்தை படங்களில் பார்த்தால் உங்களுக்கே தெரியும், இது எந்த அளவிற்கு வறட்சியான பகுதியாக உள்ளது என்பது. ஆழ்துளை கிணறுகளை தான் இந்த பகுதி மக்கள் அதிகம் நம்பியிருப்பது போல் தோன்றுகிறது.

இந்த பகுதியில் சுவர் எழுப்பி சிறிய கட்டிடம் கட்டப்பட்டு இருப்பதில் இருந்து இந்த ஆழ்துளை கிணறை நீண்ட வருடங்களாக இந்த பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது. இருப்பினும், இந்த இடத்தில் மின்சார வசதி இருப்பதுபோல் தெரியவில்லை. இதனால், ஆழ்துளையில் இருந்து நீரை விரைவாக வெளியே கொண்டுவர டாடா கர்வ் இவி எலக்ட்ரிக் காரை பயன்படுத்தி உள்ளனர்.

tata curvv ev electric car

கர்வ் இவி காரின் முன்பக்கத்தில் சார்ஜ் நிரப்புவதற்கு கொடுக்கப்பட்ட பகுதியில் வி2எல் (V2L) அடாப்டரை பொருத்தி மின்சாரத்தை பெற்றுள்ளனர். இவ்வாறு மின்சாரத்தை பெறும்போது, பேட்டரி, அதன் மூலம் இயங்கும் எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி கூலிங் சிஸ்டத்தை தவிர்த்து கார் மொத்தமும் ஓய்வு நிலையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு எலக்ட்ரிக் காரின் மின்சாரத்தை கொண்டு தேவைப்படும் இடங்களில் மின்சாரத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் இருந்து, எலக்ட்ரிக் வாகனங்களை முழுமையாக மக்கள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. இதன் மூலமாக எலக்ட்ரிக் கார்களின் விற்பனையும் அதிகரிக்கும்.

Source: Torque India

More from DriveSpark

Article Published On: Wednesday, July 30, 2025, 11:45 [IST]
English summary
Tata curvv ev electric car used to power water pump check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X