அவங்களே வாங்கிட்டாங்களா... டாடா எலெக்ட்ரிக் கார் போகாத ஏரியாவே கிடையாது!!

டாடா மோட்டார்ஸின் கர்வ் இவி எலெக்ட்ரிக் கார் (Curvv EV Electric Car) 2024 ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கூபே (Coupe)-ஸ்டைலிலான எஸ்யூவி போன்றதான வடிவமைப்பு மற்றும் சக்திவாய்ந்த எலெக்ட்ரிக் மோட்டார் காரணமாக விரைவாகவே மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அறிமுகமான பிறகு, கர்வ் இவி எலெக்ட்ரிக் கார் உரிமையாளர்கள் காரின் V2L (வாகனத்திலிருந்து மின்சாரம் பெறுதல்) திறனைப் பயன்படுத்தி, டீ போடுவது, பூரி பொரிப்பது முதல் தண்ணீர் பம்புகளை இயக்குவது வரை பல வேலைகளை செய்துள்ளனர்.

சிலர் இந்த எலெக்ட்ரிக் காரில் நீர் நிரம்பிய பகுதிகளில் பயணித்துள்ளதையும் சமூக வலைத்தளங்களில் படங்களிலும், வீடியோக்களிலும் பார்த்துள்ளோம். இந்த நிலையில் தற்போது, இந்த எலெக்ட்ரிக் கூபே கார் காவல்துறையிலும் ரோந்து வாகனமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. இது எங்கு நடந்துள்ளது என்றால், வட இந்தியாவின் ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் ஆகும்.

tata curvv ev electric cars as himachal pradesh police

இதுதொடர்பான ட்விட்டர் பதிவு ஒன்றில், ஹிமாச்சலப் பிரதேசத்தில் டாடா ஷோரூம் (Tata Showroom) ஒன்றிற்கு வெளியே, காவல்துறை முத்திரைகள் உடன் கூடிய ஆறு கர்வ் இவி எலெக்ட்ரிக் கார்கள் டெலிவரிக்காக (Delivery) நிறுத்தப்பட்டிருப்பது காட்டப்பட்டுள்ளது. இந்த கர்வ் இவி கார்களின் அடிப்படை நிறம் வெள்ளை ஆகும். அதன் மீது, காரின் பின்பக்க மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் போலீஸ் வாகனம் என்பதை குறிக்கும் விதமாக ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

குறிப்பாக, காரின் பக்கவாட்டில், காரின் முழு நீளத்திற்கு ஒரு தடிமனான கருப்பு நிற பட்டை செல்கிறது, அதில் 'POLICE' என்று எழுதப்பட்டுள்ளது. மேலும், இமாச்சல பிரதேச காவல்துறையின் லோகோ மற்றும் அவசர கால உதவி எண்ணும் இந்த கருப்பு நிற பட்டையில் குறிப்பிடப்பட்டு உள்ளதை காணலாம்.

tata curvv ev electric cars as himachal pradesh police

மேலும், காரின் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடிகளிலும் 'POLICE' என்று எழுதப்பட்டுள்ளது. இதற்கேற்ப காரின் மேற்கூரை கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டு இருக்க, அதில் பெக்கான் (Beacon) விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கூபே போன்ற காரின் கூரை அமைப்பு, பெக்கான் விளக்குகளுடன் பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது மிகவும் அழகாக தெரிகிறது.

காரின் 18-இன்ச் ஏரோ-ஆப்டிமைஸ் செய்யப்பட்ட அலாய் சக்கரங்களில் 215/55 இவி டயர்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இன்றைய கால பல டாடா கார்களைப் போலவே, கர்வ் இவி எலெக்ட்ரிக் காரும் பல்வேறு வேரியண்ட்களில் கிடைக்கிறது. கிரியேட்டிவ், அக்கம்ப்ளிஷ்ட், அக்கம்ப்ளிஷ்ட் பிளஸ் எஸ், எம்பவர்ட் பிளஸ் மற்றும் எம்பவர்ட் பிளஸ் ஏ என்பன அவை ஆகும்.

tata curvv ev electric cars as himachal pradesh police

சில வேரியண்ட்களில் டார்க் எடிஷன் (Dark Edition) வகைகளையும் தேர்வு செய்யலாம். ஆனால் இதில் எந்த வேரியண்ட்கள் ஹிமாச்சலப் பிரதேச காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை. தற்சமயம் கர்வ் இவி எலெக்ட்ரிக் காரின் விலைகள் ரூ.17.49 லட்சம் முதல் ரூ.21.99 லட்சம் வரை உள்ளன.

45kWh மற்றும் 55kWh என இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் கர்வ் இவி எலக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்படுகிறது. பெரிய பேட்டரி பேக்கைத் தான் காவல்துறை தேர்வு செய்திருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் இது ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக 585 கி.மீ வரை (MIDC வரம்பு) இயங்க கூடியது.

tata curvv ev electric cars as himachal pradesh police

பெரிய பேட்டரி ஆப்ஷனில் எலெக்ட்ரிக் மோட்டார் காரின் முன் அச்சில் இயங்கி அதிகப்பட்சமாக 167hp சக்தியையும், 215Nm டார்க்கையும் வழங்குகிறது. இந்த கார் 0-100 கி.மீ. வேகத்தை வெறும் 8.6 வினாடிகளில் எட்டிவிடும். மேலும் இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கி.மீ ஆகும். சிறிய அளவிலான 45 kWh பேட்டரி ஆப்ஷனில் அதிகபட்சமாக 150hp இயக்க ஆற்றலை பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் கார் V2L (வாகனத்திலிருந்து மின்சாரம் பெறுதல்) வசதியை மட்டுமின்றி, V2V (வாகனத்திலிருந்து வாகனத்திற்கு சார்ஜிங்) அம்சத்துடன் வருவதால், இந்த டாடா எலெக்ட்ரிக் கார் காவல்துறைக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். குறிப்பாக, மலைகள் மற்றும் காடுகள் அதிகம் நிறைந்த ஹிமாச்சலப் பிரதேசத்தில் காவல் ரோந்துகளின் போது கர்வ் இவி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, October 10, 2025, 16:04 [IST]
English summary
Tata curvv ev electric cars as himachal pradesh police patrol vehicle check all details here
மேலும்... #electric vehicles #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X