பாலத்தில் இருந்து விழுந்த கார்! நேர்ல பாத்தவங்க சொன்ன அதிர்ச்சி தகவல்! ஓட்னது யார்னு தெரிஞ்சா கடுப்பாயிருவீங்க

இந்தியாவில் உரிய வயதை எட்டி டிரைவிங் லைசென்ஸ் (Driving Licence) பெறுவதற்கு முன்பாகவே நிறைய பேர் வாகனங்களை ஓட்ட தொடங்கி விடுகின்றனர். இது நிறைய சாலை விபத்துக்களுக்கு (Road Accidents) காரணமாக அமைந்து விடுகிறது. என்னதான் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் கூட, சிறுவர்கள் வாகனங்கள் ஓட்டுவதை தடுக்க முடியவில்லை.

இதை உண்மை என நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று ஜார்கண்ட் (Jharkhand) மாநிலத்தில் தற்போது நடைபெற்றுள்ளது. அங்கு டாடா ஹாரியர் (Tata Harrier) கார் ஒன்று பயங்கரமான சாலை விபத்தில் சிக்கியுள்ளது. இந்த டாடா ஹாரியர் கார், பாலத்தின் மேலே இருந்து கீழே விழுந்து விபத்தில் சிக்கியிருக்கிறது.

Tata Harrier SUV Accident

விபத்து நிகழ்ந்தபோது காருக்கு உள்ளே 3 மாணவர்கள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவருமே 12ம் வகுப்பு படித்து கொண்டுள்ளனர். இதில், ஒருவர்தான் காரை ஓட்டியுள்ளார். 12ம் வகுப்பு மாணவர் என்பதால், அவரிடம் டிரைவிங் லைசென்ஸ் இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். அவர் கண்மூடித்தனமாக காரை ஓட்டியதாக, விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் அந்த மாணவர் மது அருந்தியிருந்தாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. இதற்கான ஆதாரங்கள் எதுவும் தற்போது வரை கிடைக்கவில்லை. 12ம் வகுப்பு மாணவர் கண்மூடித்தனமாக கார் ஓட்டியதால் நடைபெற்ற விபத்து, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இங்கே ஒரு நல்ல விஷயமும் இருக்கிறது.

Tata Harrier Accident

அதிர்ஷ்டவசமாக அந்த 3 மாணவர்களும் உயிர் தப்பியுள்ளனர். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், காரை ஓட்டிய மாணவருக்கு மட்டுமே லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மற்ற இருவருக்கும் எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது டாடா ஹாரியர் கார் எவ்வளவு பாதுகாப்பானது? என்பதை உணர்த்துகிறது.

டாடா ஹாரியர் காரானது, குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளில், முழுமையாக 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை (5-star Safety Rating) வாங்கி அசத்தியுள்ளது. குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில் மட்டுமல்லாது, பாரத் என்சிஏபி (Bharat NCAP) அமைப்பின் மோதல் சோதனைகளிலும், இந்த கார் 5 ஸ்டார் ரேட்டிங்கை வாங்கியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: 3 மாணவர்களும் நல்ல வேளையாக உயிர் தப்பியுள்ளனர். இதற்கு டாடா ஹாரியர் கார், மிகவும் பாதுகாப்பானது என்பது ஒரு முக்கியமான காரணமாக உள்ளது. டாடா ஹாரியர் மட்டுமல்லாது, டாடா நிறுவனத்தின் மற்ற கார்களும் கூட, சாலை விபத்துக்களில் இருந்து நிறைய முறை பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளன.

இதை நினைத்து சந்தோஷப்படும் அதே நேரத்தில், சிறுவர்கள் வாகனங்களை ஓட்டுவதை நினைத்து நாம் கவலைப்பட வேண்டியும் இருக்கிறது. அரசாங்கம் என்னதான் நடவடிக்கைகளை எடுத்தாலும் கூட, சிறுவர்கள் வாகனங்களை ஓட்டுவதை கட்டுப்படுத்த வேண்டுமென்றால், பெற்றோர்கள் முதலில் மனது வைக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து.

More from DriveSpark

Article Published On: Monday, February 5, 2024, 14:30 [IST]
English summary
Tata harrier accident viral video full details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+