இந்த டாடா காருக்கு கோயில் கட்டி கும்பிடனும் - எவ்வளவு பெரிய விபத்து... உள்ளே இருந்தவங்களுக்கு இது மறுஜென்மம்!!

உலக அளவில் சாலை விபத்துகளில் முன்னணியில் இருக்கும் நாடுகளுள் ஒன்று நம் இந்தியா ஆகும். சாலைகளின் தரம், அதிவேக பயணம் மற்றும் சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமை போன்றவை சாலை விபத்துகளுக்கு காரணங்களாக பார்க்கப்படுகின்றன. இதனால், மக்களிடையே சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வை வலியுறுத்துவதில் ஆட்சியாளர்கள் ஒருபக்கம் தீவிரமாக இருக்கும் வேளையில், சாலை விபத்துகளினால் நிகழும் உயிரிழப்புகளை குறைப்பதற்காக மறுப்பக்கம் கார்களை நன்கு வலிமையானதாகவும், பாதுகாப்பானதாகவும் உருவாக்க கார் நிறுவனங்களை மத்திய அரசு தொடர்ந்து வேண்டுக்கோள் விடுத்து வருகிறது.

மத்திய அரசின் இந்த வேண்டுக்கோளுக்கு இணங்க நன்கு பாதுகாப்புமிக்க கார்களை டாடா மோட்டார்ஸ் உருவாக்கி வருகிறது. க்ளோபல் என்சிஏபி மற்றும் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்களில் டாடா மோட்டார்ஸின் பல்வேறு கார்கள் 5க்கு 5 நட்சத்திரங்களை பெற்று மேட்-இன்-இந்தியா கார்களை பெருமைப்படுத்தி உள்ளன.

tata harrier accident with lorry

சமீபத்தில்கூட, டாடா பஞ்ச் இவி மற்றும் நெக்ஸான் இவி எலக்ட்ரிக் கார்கள் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார்களை பெற்றதை பற்றி பார்த்திருந்தோம். இந்த எலக்ட்ரிக் கார்களுக்கு முன்னதாக, டாடா மோட்டார்ஸின் ஹெரியர் மற்றும் சஃபாரி கார்கள் பாரத் என்சிஏபி-இல் 5 நட்சத்திரங்களை பெற்றிருந்தன. பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தப்பட்ட முதல் கார்கள் டாடா ஹெரியர் மற்றும் சஃபாரி ஆகும்.

இந்த நிலையில், டாடா ஹெரியர் காரின் பாதுகாப்பு தரத்தை வெளிக்காட்டும் விதமாக ஒரு சம்பவம் நடந்துள்ளது. டாடா ஹெரியர் கார் ஒன்று சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்பக்கத்தில் பலமாக மோதி விபத்திற்குள்ளாகி உள்ளது. இந்த விபத்தில் ஹெரியர் காரின் முன்பக்க பொனெட் பகுதியின் மூடி அப்பளம் போல் நசுங்கியுள்ளது.

tata harrier accident with lorry

இதனால், பொனெட்டிற்கு அடியில் இருக்கும் காரின் என்ஜின் சிஸ்டமும் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. சம்பந்தப்பட்ட லாரியின் பின்பக்க முனைப்பகுதி ஹெரியர் காரின் முன்பக்க விண்ட்ஷீல்டில் குத்திக் கொண்டு நிற்பதை இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் காணலாம். இருப்பினும், உள்ளே இருந்த பயணிகள் அனைவரது உயிரையும் வழக்கம்போல் டாடா கார் காப்பாற்றி உள்ளது.

இந்த விபத்து இந்தியாவில் எந்த பகுதியில் நடந்துள்ளது என்பது தெரியவில்லை. டாடா ஹெரியர் ஃபேஸ்லிஃப்ட் கார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த ஹெரியர் ஃபேஸ்லிஃப்ட் கார் தான் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் கடந்த ஆண்டு டிசம்பரில் உட்படுத்தப்பட்டது. ஆனால், இந்த விபத்தில் சிக்கியிருப்பது ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடுக்கு முந்தைய டாடா ஹெரியர் கார் ஆகும்.

tata harrier accident with lorry

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், இது டாடா ஹெரியர் டார்க் எடிசன் கார் ஆகும். இது பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்டுக்கு உட்படுத்தப்படவில்லை என்றாலும், புதிய ஹெரியர் ஃபேஸ்லிஃப்ட் காருக்கும், முந்தைய ஹெரியர் காருக்கும் பாதுகாப்பு தரத்தில் பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை. இதற்கு சரியான சாட்சியே இந்த விபத்து ஆகும்.

இந்த விபத்துக்கு காரணம் என்னவாக இருந்திருக்கும் என்று பார்த்தால், இந்த ஹெரியர் கார் டிரைவரின் கவனக்குறைவாக இருக்கலாம். சாலையின் ஓரத்தில் நின்றிருந்த லாரியை கார் டிரைவர் ரன்னிங்கில் இருக்கிறது என்று தவறாக எண்ணியிருக்கலாம். அல்லது, சாலையின் ஓரத்தில் லாரி நின்றிருப்பதை கடைசி நேரத்தில் இந்த ஹெரியர் கார் டிரைவர் கவனித்து இருக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் சாலை விபத்துகளுக்கு வாகன ஓட்டிகளிடம் போதிய சாலை விழிப்புணர்வு இல்லாததும் ஒரு காரணம் என ஏற்கனவே கூறினோம் அல்லவா... அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த விபத்து ஆகும். ஏனெனில், சாலையின் ஓரத்தில் நின்றிருக்கும் லாரியில் கொண்டுப்போய் உங்களது காரை சொருகிறீர்கள் எனில், நீங்கள் சாலையில் போதிய கவனத்துடன் இல்லை என்றுதானே அர்த்தம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 19, 2024, 23:28 [IST]
English summary
Tata harrier car accident with lorry all passengers safe check all details here
மேலும்... #car accident #off beat #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X