டாடா கார் என்று சொன்னா சும்மாவா!! ஷோரூமுக்கு மக்கள் படையெடுப்பதற்கு காரணம் இதுதான்!

டாடா (Tata) கார் ஒன்று சாலையில் சென்ற ஆட்டோ ரிக்‌ஷாவின் மீது வேகமாக மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளது. இந்த மோதலுக்கு காரணம், டாடா காரின் டிரைவர் தான் இருப்பினும், டாடா காருக்கு பெரியதாக எந்த சேதாரமும் ஏற்படாதது ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது. டாடா கார்களின் உடல் வலிமையை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ள இந்த நிகழ்வை பற்றி விரிவாக இனி பார்க்கலாம்.

டாடா மோட்டார்ஸ், இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குறிப்பாக, பாதுகாப்பான மற்றும் வலிமையான கார்களை உருவாக்குவதில் நிபுணத்துவம் வாய்ந்ததாக வாடிக்கையாளர்கள் மத்தியில் டாடா மோட்டார்ஸ் பார்க்கப்படுகிறது. இதற்கேற்ப பல்வேறு சம்பவங்களில் விபத்துகளில் இருந்து பயணிகளின் உயிரை டாடா கார்கள் காப்பாற்றி உள்ளன.

tata harrier crashed into auto

2, 3 முறை ரோல்ஓவர் ஆகி விபத்திற்குள்ளான டாடா காரில் இருந்து கூட உயிர் பிழைத்த பயணிகளை பற்றி ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் பல முறை பார்த்துள்ளோம். ஆனால் இங்கு, டாடா ஹெரியர் கார் ஒன்று சாலையில் சென்றுக் கொண்டிருந்த ஆட்டோ ரிக்‌ஷாவின் மீது நேரெதிராக மோதியுள்ளது. கொஞ்சம் பலமாக நடந்த இந்த விபத்தில், ஆட்டோவின் முன்பக்கம் பலத்த சேதமடைந்துள்ளது.

ஆட்டோவின் முன்பக்க உடல் பகுதியில் பெரிய அளவில் குழி ஏற்பட்டுள்ளது. ஆட்டோவிற்கு நேரெதிராக இடது பக்கத்தில் ஹெரியர் கார் மோதியுள்ளதால், ஆட்டோவின் முன்பக்க மட்கார்ட் ஒருபக்கமாக மடங்கி உள்ளது. ஆட்டோவில் பயணிகளையும், டிரைவரையும் பிரிக்கும் விதமாக பொருத்தப்படும் உலோக கம்பியும் சேதமடைந்துள்ளது. இவற்றுடன், ஆட்டோவின் மேற்கூரையில் கூட சேதாரங்களை பார்க்க முடிகிறது.

tata harrier crashed into auto

அதாவது, அவ்வளவு வேகத்தில் ஆட்டோவின் மீது கார் மோதியுள்ளது. ஆனால், மறுப்பக்கம் சேதமடைந்த டாடா ஹெரியர் காரை பார்த்தால், மிகவும் குறைவான சேதாரங்களே ஏற்பட்டுள்ளன. காரின் முன்பக்கத்தில், இடது பக்க ஹெட்லேம்ப், ஃபெண்டர் மற்றும் வீல் ஆர்ச் கிளாடிங்குகள் சேதமடைந்துள்ளன. ஆனால், இவை அனைத்தும் காரின் இடது பக்கத்தில் மட்டுமே. வலது பக்கத்தில் சேதாரம் இல்லை. அதாவது, அவ்வளவு அதிர்வுகளையும் ஹெரியர் காரின் முன்பக்க பேனல்கள் தாங்கியுள்ளன.

காரின் பொனெட் பகுதியும் சிறிது சேதமடைந்துள்ளது. இருப்பினும், ஆட்டோ ரிக்‌ஷா அளவிற்கு கார் சேதமடையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த விபத்திற்கு காரணம், ஹெரியர் கார் டிரைவர் என கூறப்படுகிறது. சம்பவத்தின்போது, கார் டிரைவர் மது போதையில் இருந்துள்ளார். மது போதையினால் நாடு முழுவதும் தினந்தோறும் நடக்கும் நூற்றுக்கணக்கான சாலை விபத்துகளில் இதுவும் ஒன்று.

tata harrier crashed into auto

மது போதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதற்காக ஹெரியர் கார் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளாரா என்பது தெரியவில்லை. அதேபோல், விபத்தின்போது ஆட்டோவில் பயணிகள் இருந்தனரா என்பதும் தெரியவில்லை. ஏனெனில், பொதுவாகவே ஆட்டோக்கள் கொஞ்சம் வலிமை அற்றவையாகவே உருவாக்கப்படுகின்றன. இதன் காரணமாக, சிறிய மோதல் கூட ஆட்டோவில் பெரிய மோதல் போல் தெரியும்.

அதாவது, சிறிய மோதலுக்கு கூட ஆட்டோவினுள் இருப்பவர்கள் வெளியே தூக்கி வீசப்படுவதற்கு வாய்ப்புள்ளது. மது போதையில் வாகனம் ஓட்டுவது உங்களுக்கு மட்டுமின்றி, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கும் ஆபத்தாக சென்று முடியலாம். அதாவது, சாலையில் உங்களது உயிர் மட்டுமல்லாமல், பல உயிர்கள் மற்றும் அவற்றை சார்ந்து வாழும் உயிர்கள் நிறைய உள்ளன. ஆதலால், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மது போதையில் வாகனம் ஓட்டுவது அதிகரித்துவருவது ஒருபக்கம் கவலையை ஏற்படுத்தினாலும், பெரிய மோதல்களையும் தாங்கிக் கொள்ளும் அளவிற்கு டாடா கார்கள் நன்கு உடல் வலிமையோடு உருவாக்கப்படுவது மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. ஆனால் அதேநேரம், உங்களது வாகனம் வலிமையானதாக இருந்தால் மட்டும் போதாது, எதிரே வரும் வாகனமும் இருக்க வேண்டும். ஆதலால், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர்.

Souirce: Nikhil Rana/YouTube

More from DriveSpark

Article Published On: Tuesday, March 12, 2024, 19:05 [IST]
English summary
Tata harrier crashed into auto rickshaw in maharashtra check all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X