வீட்டுல பணம் காய்க்குற மரம் வச்சிருப்பாரு போல! ரூ25 லட்சம் காருக்கு ரூ75 லட்சத்திற்கு மாடிஃபிகேஷன்!
புதிதாக கார் வாங்கிய பலர் கார்களை மாடிஃபிகேஷன் செய்ய ஏகப்பட்ட பணத்தை செலவு செய்வார்கள். இதை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம். ஆனால் ஒருவர் ரூ25 லட்சத்துக்கு கார் வாங்கிவிட்டு அதை ரோ75 லட்சம் கொடுத்து மாடிஃபிகேஷன் செய்ய செய்த கதையை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இப்படியான ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. அதுவும் காரில் உள்ள ஆடியோ சிஸ்டத்திற்காக மட்டுமே இவர் இந்த செலவு செய்துள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
சமூக வலைதளங்களில் சமீபத்தில் ஒருவர் தனது காரை மாடிஃபிகேஷன் செய்தது குறித்து ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் தனது புதிய டாடா ஹாரியர் காரை வாங்கி அதில் தனியாக ஆடியோ சிஸ்டம் ஒன்றைப் பொருத்தியுள்ளார். அதற்காக அவர் ரூபாய் 75 லட்சம் வரை செலவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் எப்படியெல்லாம் மாடிஃபிகேஷன் செய்தார் என்ற விபரங்களையும் அதில் தெரிவித்துள்ளார். இது பலரை ஆச்சரியப்படுத்தும் விதமாக இருக்கிறது.

காரில் ஆடியோ சிஸ்டத்தை மாற்றி அமைத்து தரமான ஆடியோ சிஸ்டத்தை பொருத்துவது ஒன்றும் மாடிஃபிகேஷன் உலகில் புதிய விஷயம் அல்ல. காலங்காலமாக இப்படியான மாடிஃபிகேஷன் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது சட்டரீதியாக அனுமதி செய்யப்பட்ட மாடிஃபிகேஷன் தான். ஆனால் இப்படியாக மாடிஃபிகேஷன் செய்யும்போது அதிக பணம் செலவு செய்ய வேண்டியது இருக்கும். காரில் தொட்டப்படும் ஸ்பீக்கர் ஆம்ப்ளிஃபயர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுக்கு மார்க்கெட்டில் அதிக விலை இருக்கிறது.
இந்நிலையில் புதிதாக டாடா நிறுவனத்தின் ஹாரியர் காரை வாங்கிய ஒருவர் அதை மாடிஃபிகேஷன் செய்ய விரும்பினார். அதற்காக ரூ25 லட்சத்திற்கு வாங்கிய காரை புதிதாக நேரடியாக மாடிஃபிகேஷன் செய்யும் இடத்திற்கு கொண்டு சென்றார். அங்கு காரை பார்ட் பார்ட்டாக பிரித்தால் காரில் உள்ள உட்புற பகுதிகளும் முழுவதும் பிரித்து காரின் உள்ளே எந்தவித சத்தமும் கேட்காமல் இருக்கும் வகையில் சவுண்ட் ப்ஃரூப் செய்ய முடிவு செய்தார்.

இதற்காக அவர் காரின் உள்ளே ஆறு லேயர் கொண்ட சவுண்ட் டம்பிங் மெட்டீரியல் கொண்டு காருக்குள் எந்த விதமான சத்தமும் கேட்காத வகையில் செட்டப் செய்தார். காரில் உள்ள ஒவ்வொரு கார்னரிலும் இந்த சவுண்டு டேம் மெட்டீரியல் பொருத்தப்பட்டது. இது மட்டுமல்லாமல் காரின் டேஷ்போர்டு முழுவதுமாக அகற்றப்பட்டு அதிலும் சவுண்ட் டெம் ஃப்ரூப் மெடிரியல் பொருத்தப்பட்டது. காரின் புளோர் பகுதி, பூட் பகுதிகளிலும் இந்த மெட்டீரியல் பொருத்தப்பட்டது. இதனால் காருக்குள் எந்தவிதமான சத்தமும் வராத வகையில் முழுவதுமாக செட்டப் செய்யப்பட்டது.
அடுத்ததாக காரில் உள்ள சவுண்ட் சிஸ்டத்திற்கு சிறப்பான பவர் கிடைக்க வேண்டும் என்பதற்காக மைக்ரோ டிசி-டிசி கன்வெர்ட்டர் பொருத்தப்பட்டது. இது ஒரு ஜெர்மன் தொழில்நுட்பத்தில் இயங்கும் கருவியாகும். இதன் மூலம் காரில் உள்ள அனைத்து ஆடியோ சம்பந்தமான பாகங்களுக்கு சரியான பவர் சப்ளை கிடைக்கும். மேலும் இந்த சவுண்ட் சிஸ்டத்திற்கு தேவையான வயரிங் செட்டப் எல்லாம் கோல்டு பிளேட்டட் வயர்களாக பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பவர் டெலிவரியில் எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் இருக்கும்.

சிறப்பான ஆடியோ சிஸ்டம் தேவை என்பதற்காக இதில் பிராக்ஸ் (BRAX) டிஜிட்டல் சிக்னல் புராசஷர் என்ற கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதுபோக பிராக்ஸ் (BRAX) எம்எக்ஸ் 4 ப்ரோ ஆம்ப்ளிபையரும் பொருத்தப்பட்டுள்ளது. இது சுமார் 12.5 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. இது முன்பக்க ஸ்பீக்கராக செயல்படும். இதுபோக கெலிக்ஸ் ஆடியோ ஆம்ப்ளிபையரும் பொருத்தப்பட்டுள்ளது. இது மற்ற ஸ்பீக்கர்களுக்கு சிக்னல்களை எடுத்துச் செல்லும். இதுபோக போக்கல் டீவீட்டர் 50 கிலோ ஹெட்ஸ் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது ஆம்பியன் ட்விட்டரும் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த காரில் இரண்டு சஃப் ஊஃபர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது முன் பக்கமும் பின் பக்கமும் இருக்கும் வகையில் செட்டப் செய்யப்பட்டுள்ளது. இதில் காடு எம் ஸ்கேலர் மற்றும் டிடி2 ஆகிய சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இது பொதுவாக வீட்டில் பொருத்தப்படும் ஆடியோ செட்டப்பில் தான் இடம்பெறும். தற்போது காரிலும் இந்த செட்டப்பை இவர் பொருத்தியுள்ளார்.
இந்த செட்டப்பை எல்லாம் அவர் காரின் ஊட்பகுதியில் பொருத்தி அதற்கான போதுமான கூலிங் சிஸ்டத்தையும் கொடுத்துள்ளார். இதனால் இந்த பாகங்கள் எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் நீண்ட நேரம் இயங்கும் வகையில் செயல்படும். இதற்காக பிரீமியம் ரக கேபிள்களையும் பயன்படுத்தியுள்ளார். இதனால் ஆடியோ எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் இயங்க வேண்டும் என அவர் திட்டமிட்டு இதை செய்துள்ளார்.
இந்த செட்டப் முழுவதையும் செய்து முடிக்க அவருக்கு ரூபாய் 75 லட்சம் வரை செலவாகியுள்ளது. ரூபாய் 25 லட்சத்துக்கு கார் வாங்கி அதில் ரூ 75 லட்சத்திற்கு ஆடியோ சிஸ்டம் பொருந்திய நபர் இவர் ஒருவதாக தான் இருக்க முடியும் என சமூக வலைதளங்களில் இவரை பற்றி பலர் பேசி வருகிறார்கள். இவர் செட்டப் செய்த ஆடியோ சிஸ்டம் பற்றி பலர் தங்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ரூபாய் 25 லட்சத்திற்கு கார் வாங்கி அதை ரூபாயில் 75 லட்சம் செலவு செய்து மாடிஃபிகேஷன் செய்த இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இப்படியாக பலர் மாடிஃபிகேஷனுக்காக அதிகம் செலவு செய்கிறார்கள். இது ஒரு வகையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும் மற்றொரு வகையில் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications









