முன்னாடி காரு, பின்னாடி லாரி ரெண்டுத்துக்கும் நடுவில் சிக்கியும் பயணிகள் சேஃப்... எமனுக்கே சவால் விட்ட கார்!
டாடா மோட்டார்ஸ் (Tata Motors) இந்தியாவில் விற்பனைக்கு வழங்கும் சூப்பரான கார் மாடல்களில் ஒன்றாக ஹாரியர் (Harrier) இருக்கின்றது. இதுவும் அந்நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளைப் போலவே அதிக பாதுகாப்பு திறன்மிக்க வாகனமாகும். தன்னுடைய இந்த தன்மையையே மீண்டும் மீண்டும் உறுதி செய்துக் கொண்டிருக்கின்றது, ஹாரியர்.
ஏற்கனவே, இந்த காரின் வாயிலாக பல உயிர்கள் பத்திரமாக பாதுகாக்கப்பட்ட நிலையில், தற்போது, மேலும் சில உயிர்கள் எந்தவித ஆபத்தும் இன்றி காக்கப்பட்டு இருக்கின்றன. தேசிய நெடுஞ்சாலை 44 இல் டாடா ஹாரியர் ஒன்று பயணித்துக் கொண்டிருந்தபோது இரண்டு வாகனங்களுக்கு இடையில் சிக்கி விபத்துக்குள்ளாக நேரிட்டிருக்கின்றது.

இந்த மிக மோசமான விபத்தினால் கார் கடுமையான பாதிப்புகளுக்கு ஆளாகி இருக்கின்றது. குறிப்பாக, இரண்டு வாகனங்களுக்கு இடையில் சிக்கியதால் சேதம் மிகவும் பலமாகக் காட்சியளிக்கின்றது. காரின் முன் மற்றும் பின் என இரண்டு பக்கங்களும் விபத்தினால் சின்னா-பின்னமாகி காட்சியளிக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே அந்த காருக்குள் பயணித்த அனைவரும் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு இருக்கின்றனர்.
குறிப்பாக, பெரிய அளவு ஆபத்தின்றி அனைவரும் சிறு சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக தப்பி இருப்பது, நம்மை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும் வகையில் அமைந்திருக்கின்றது. மேலும், இந்த நிகழ்வு டாடா ஹாரியர் காரின் உறுதித் தன்மையை இன்னும் வலுவாக தெரியப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

டாடா ஹாரியர் முன்னால் ஓர் காரும், பின்னால் ஓர் லாரியும் மோதி இருக்கின்றன. இந்த இரண்டு வாகனங்களுக்கு இடையேயே சிக்கி கடுமையான சேதங்களுக்கு ஆளாகி இருக்கின்றது, டாடா ஹாரியர். டாடா ஹாரியர் காரின் டெயில்கேட், ரியர் வின்ட்ஸ்கிரீன், பம்பர், டெயில் லைட் மற்றும் கன்னெக்ட் எல்இடி லைட்டுகள் என அனைத்தும் முழுமையாக உருக்குலைந்து போயிருக்கின்றன.
எனவேதான் இது மிக மோசமான விபத்தாக பார்க்கப்படுகின்றது. ஆனால், நல்லவேளையாக விபத்தில் யாருக்கும் எதுவும் ஆகவில்லை. காருக்குள் இருந்த பாதுகாப்பு அம்சங்களான ஏர்பேக் போன்றவை பயணிகளுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கி இருக்கின்றது. இந்த சம்பவத்தின் வாயிலாக நாம் காரை வாங்கும்போது ஏனோ-தானோ என்று வாங்கக் கூடாது. அதிக பாதுகாப்பான காரை வாங்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

டாடாவின் இந்த தயாரிப்பு அதிக பாதுகாப்பு அம்சங்களைத் தாங்கியதாகக் காட்சியளிக்கின்றது. அடாஸ், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா, 7 ஏர் பேக்குகள், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்புகள், மழை வந்தால் தானாக வைப் செய்யும் வைப்பர்கள், ஏர் ப்யூரிஃபையர், பார்க்கிங் சென்சார்கள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் சிஸ்டம் மற்றும் இஎஸ்பி உள்ளிட்ட அம்சங்களே டாடா ஹாரியர் காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதேபோல், தொழில்நுட்ப வசதிகளும் இந்த காரில் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், 12.3அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஒயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதி உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், 10.25அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் ஒன்றும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இவற்றுடன் சேர்த்து பிரீமியம் தர அம்சங்களாக வெண்டிலேட் வசதிக் கொண்ட இருக்கை, பின் பக்கத்தில் சன் ஷேட், டூயல் ஜோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், பெரிய பனோரமிக் சன்ரூஃப் மற்றும் பவர்டு டெயில்கேட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. மேலும், ஐஆர்ஏ கார் இணைப்பு அம்சமும் ஹாரியரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதன் வாயிலாக டர்ன்-பை-டர்ன் (திருப்பத்திற்கு திருப்பம்) வழித்தடம் பற்றிய தகவல் மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ஸ் ஆகிய வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். எஞ்ஜினைப் பொருத்த வரை இந்த காரில் 2.0 லிட்டர் 4 சிலிண்டர், கைரோடெக் டீசல் மோட்டார் வழங்கப்படுகின்றது. இந்த மோட்டார் ஆப்ஷன் மட்டுமே இந்த காரில் வழங்கப்படுகின்றது.
விரைவில் எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் இந்த கார் விற்பனைக்கு வர இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த 2.0 லிட்டர் டீசல் மோட்டார் அதிகபட்சமாக 168 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனே இந்த காரில் கொடுக்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா ஹாரியர் கார் மட்டுமல்ல நிறுவனத்தின் மேலும் சில தயாரிப்புகளும் அதிக பாதுகாப்பு திறன்மிக்கதாகக் காட்சியளிக்கின்றது. இந்த கார் பாரத் என்சிஏபி-யில் ஐந்துக்கு 5 ஸ்டார்களைப் பெற்ற வாகனம் என்பதும் இங்கு கவனிக்கத்தகுந்தது. இது ரூ. 15.49 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.


Click it and Unblock the Notifications









