உசுரை பாதுகாப்பதில் பேய் மாதிரி வேலை செய்யும் கார்.. பெரும் பள்ளத்தில் விழந்தபோதும் உசுர காப்பாத்தியிருக்கு!
மலைப் பாதையில் பயணிப்பது மிகவும் ஆபத்தான ஒன்று. வாகனம் கொஞ்சம் லேசாகக் கட்டுப்பாட்டை இழந்தாலும்கூட மிகப் பெரிய ஆபத்தில் சிக்க நேரிடும். இதை உறுதிப்படுத்தக் கூடிய நிகழ்வு ஒன்றே தற்போது இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றது. மலைப் பாதையில் உள்ள ஆபத்தை விளக்கும் விதமாக மிக மோசமான ஓர் கார் விபத்து சம்பவம் அதுவாகும். இந்தியா-சீனா எல்லைப் பகுதியில் உள்ள மலைப் பாதையிலேயே அது அரங்கேறி இருக்கின்றது. சுமார் 10 அடி ஆழத்திற்கும் அதிகமான பள்ளத்தில் கார் உருண்டு விழுந்துள்ளது.
இருப்பினும், காருக்குள் இருந்த பயணிகள் பெரிய அளவில் ஆபத்து இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி இருக்கின்றனர். அவர்கள் உயிர் தப்பியதற்கு பின்னால் உள்ள காரணத்தையும், அவர்களுக்கு இருப்பு அரணாக இருந்து பாதுகாப்பை வழங்கிய அந்த கார் மாடல் எது மற்றும் அதன் சிறப்புகள் என்ன என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

இந்த மிக மோசமான விபத்தை டாடா (Tata) நிறுவனத்தின் முக்கிய தயாரிப்புகளில் ஒன்றான ஹாரியரே சந்தித்து இருக்கின்றது. இதுவே அதற்குள் பயணித்த பயணிகளுக்கு பலமடங்கு பாதுகாப்பை வழங்கி பாதுகாத்திருக்கின்றது. சொல்லப் போனால் ஓர் குடும்பமே உசுரோட இருக்க டாடா ஹாரியர் (Tata Harrier) காரே காரணமாக உள்ளது.
கரடு, முரடான சாலையில் உள்ள பள்ளத்தில் உருண்டு விழுந்தபோதிலும் அது பயணிகளை பாதுகாத்து இருக்கின்றது. குறிப்பாக அவர்கள் அனைவரும் சிறு சிறு காயங்களுடன் தப்பியது மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. டாடா ஹாரியர் ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும்.
இது பாதுகாப்பு விஷயத்தில் உச்சபட்ச ரேட்டிங்கைப் பெற்ற கார் மாடல் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஐந்திற்கு ஐந்து ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கையே இந்த கார் மாடல் பெற்றிருக்கின்றது. சமீபத்தில் பாரத் என்சிஏபி நடத்திய மோதல் ஆய்விலேயே இந்த ரேட்டிங்கை அந்த கார் மாடல் பெற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டாடா நிறுவனத்தின் பெரும்பாலான தயாரிப்புகள் அதிக பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றவையாக இருக்கின்றன. அதற்கு சற்றும் சளைத்ததல்ல என்பதையே இந்த கார் மாடல் நிரூபித்து இருக்கின்றது. ஏதோ ஒரு சோதனைக் கூடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் மட்டுமே இந்த கார் பாதுகாப்பானது என்பதை நிரூபிக்கவில்லை, நிஜ வாழ்க்கையிலும், தற்போது விபத்தின் வாயிலாக மிகவும் உறுதியான மற்றும் பாதுகாப்பான கார் மாடல் தான் என்பதை ஹாரியர் எஸ்யூவி நிரூபித்து இருக்கின்றது.
டாடா மோட்டார்ஸ் இந்த காரில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பலமடங்கு பாதுகாப்பு அம்சங்களை வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், அது வழங்கியிருக்கும் மிக முக்கியமான அம்சங்களாக 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், 3 பாயிண்ட் சீல் பெல்ட், சீட் பெல்ட் ரிமைண்டர், சிறுவர்களுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கை ஆங்கர்கள், சீட் பெல்ட் ரெட்ரேக்டர், சீட் பெல்டை தானாக நெறுக்கும் அம்சம், லோடை லிமிட் செய்யும் வசதி உள்ளிட்டவை இருக்கின்றன.
இதுபோன்று இன்னும் பல பாதுகாப்பு அம்சங்களை டாடா ஹாரியர் தனக்குள் தாங்கி இருக்கின்றது. இவையே விபத்துகளின்போது உயிர்களுக்கு மிகப் பெரிய பாதுகாப்பு வளையத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றன. மேலும், டாடா ஹாரியர் விபத்தில் பயணிகளின் உயிரை பாதுகாப்பது இது ஒன்றும் முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இதுபோன்று விபத்துகளில் இருந்து பல முறை பல உயிர்களை பாதுகாத்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டாடா ஹாரியர் கார் மட்டுமல்ல டாடா நெக்ஸான், பஞ்ச், அல்ட்ராஸ் உள்ளிட்ட கார் மாடல்களும் அதிக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்தவையாகக் காட்சியளிக்கின்றன. எனவே டாடா தயாரிப்பு என்றாலே உயிர்களைப் பாதுகாக்கும் என்பது பலருக்கு தெரியவந்துள்ளது. இதன் விளைவாகவே தற்போது முன்பைக் காட்டிலும் பலமடங்கு அதிக எண்ணிக்கையில் டாடா கார்கள் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications








