டாடா ஹெக்ஸா காருக்கு சவால்கள் எல்லாம் சர்க்கரை பொங்கல் போல... !!

டாடா ஹெக்ஸா காரின் பராக்கிரமத்தை சோதிக்க அண்மையில் ஒரு பரீட்சை நடத்தி இருக்கின்றனர். அந்த சவாலை மிக எளிதாக எதிர்கொண்டுள்ளது டாடா ஹெக்ஸா கார். அதனை இந்த செய்தியில் காணலாம்.

By Saravana Rajan

எஸ்யூவி கார்களுக்கு உண்டான சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்ட எம்பிவி ரக கார்தான் டாடா ஹெக்ஸா. ஆஃப்ரோடு சாகசங்களுக்கு ஏற்றதாக அதிக தரை இடைவெளி, 4 வீல் டிரைவ் சிஸ்டம் உள்ளிட்ட பல சிறப்புகளுடன் டாடா ஹெக்ஸா அறிமுகம் செய்யப்பட்டது.

எப்படி பால் போட்டாலும், சிக்ஸர் அடிக்குதேய்யா இந்த ஹெக்ஸா... !!

இந்த நிலையில், டாடா ஹெக்ஸா காரின் வீரதீரங்களை சோதிக்கும் விதத்தில், அவ்வப்போது ஒரு சோதனைகள் செய்யப்பட்டு வெளியாகும் முடிவுகள் வாடிக்கையாளர்களை பிரம்மிக்க வைக்கிறது. அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னர் டாடா ஹெக்ஸா கார் இரண்டு சக்கரங்களில் செல்வது போன்ற ஒரு வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எப்படி பால் போட்டாலும், சிக்ஸர் அடிக்குதேய்யா இந்த ஹெக்ஸா... !!

அடுத்து, போயிங் 737 விமானத்தை ஓடுபாதையில் கட்டி இழுத்து தனது பராக்கிரமத்தை நிரூபித்தது. அந்த வகையில், அண்மையில் டாடா ஹெக்ஸா காரின் பராக்கிரமத்தை சோதிப்பதற்காக ஒரு பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. இந்த பரீட்சையிலும் அசால்ட்டாக வெற்றி பெற்றிருக்கிறது.

எப்படி பால் போட்டாலும், சிக்ஸர் அடிக்குதேய்யா இந்த ஹெக்ஸா... !!

ஆம், யூட்யூப் பிரபலம் ராகவ் முனாவல்லி என்பவர், அண்மையில் டாடா ஹெக்ஸா காரை மிகவும் சவால் நிறைந்த ஆஃப்ரோடு சாகசங்களுக்கு டாடா ஹெக்ஸா காரை உட்படுத்தி இருக்கிறார். அந்த சவால்களை மிக எளிதாக முறியடித்துள்ளது டாடா ஹெக்ஸா.

முதல் வீடியோவில் நீரோட்டம் அதிகமாக இருக்கும் ஒரு ஆற்றை வெகு லாவகமாக கடந்து வருகிறது டாடா ஹெக்ஸா கார். அதனை இந்த வீடியோவில் பார்க்கலாம். அதாவது, ஒரு சிறிய திக்கு திணறல் இல்லாமல், அந்த நீரோட்டத்தை கடந்துவிடுகிறது.

இரண்டாவதாக, அதிக நீரோட்டம் உடைய ஒரு நீரோடையை வெகு எளிதாக கடந்து முன்னேறிவிடுகிறது டாடா ஹெக்ஸா கார். அதையடுத்து, கரடுமுரடான சாலையில் பாய்ந்து சென்று திரும்புகிறது.

மூன்றாவது வீடியோவில் சீற்றமான நீரோட்டத்தை கடந்து வருகிறது டாடா ஹெக்ஸா கார். அந்த வீடியோவை இங்கே காணலாம்.

எப்படி பால் போட்டாலும், சிக்ஸர் அடிக்குதேய்யா இந்த ஹெக்ஸா... !!

இதுபோன்ற சாகசங்களுக்கு அதிக தரை இடைவெளியுடன் வடிவமைக்கப்பட்டு இருக்க வேண்டும். சக்திவாய்ந்த எஞ்சின் மற்றும் நீர் புகாத அமைப்புடன் வடிவமைக்கப்பட்டு இருத்தலும் அவசியம். இந்த காரில் ஸ்நோர்க்கெல் அமைப்பு எதுவும் இல்லாமல் இந்த நீரோட்டத்தை கடப்பதும் கவனிக்க வேண்டி இருக்கிறது.

எப்படி பால் போட்டாலும், சிக்ஸர் அடிக்குதேய்யா இந்த ஹெக்ஸா... !!

கரடுமுரடான பாதைகளை கடப்பதற்கான சிறப்பான சஸ்பென்ஷன் அமைப்பு, வலுவான லேடர் ஃப்ரேம் சேஸீ போன்றவையும் டாடா ஹெக்ஸா காருக்கு சிறந்த ஆஃப்ரோடு பலத்தை தருவது இந்த வீடியோக்கள் மூலமாக புலனாகிறது.

எப்படி பால் போட்டாலும், சிக்ஸர் அடிக்குதேய்யா இந்த ஹெக்ஸா... !!

டாடா ஹெக்ஸா காரில் 19 அங்குல அலாய் சக்கரங்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த கார் 200 மிமீ தரை இடைவெளி கொண்டது. மேலும், 400 மிமீ ஆழம் வரையிலான நீர் நிலைகளை கடக்கும் திறன் கொண்டது.

எப்படி பால் போட்டாலும், சிக்ஸர் அடிக்குதேய்யா இந்த ஹெக்ஸா... !!

மேலும், செங்குத்தான சாலைகள் மற்றும் சரிவான சாலைகளில் பம்பர் இடிபடாமல் எளிதாக ஏறி இறங்கும் வடிவமைப்பை பெற்றிருக்கிறது. இதுவும் ஆஃப்ரோடு வாகனங்களுக்கான மிக முக்கியமான சிறப்பம்சம்.

Trending On DriveSpark Tamil:

எப்படி பால் போட்டாலும், சிக்ஸர் அடிக்குதேய்யா இந்த ஹெக்ஸா... !!

டாடா ஹெக்ஸா காரில் சக்திவாய்ந்த 2.2 லிட்டர் வேரிகோர் 400 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அதிகபட்சமாக 154 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதுபோன்ற சாகசங்களுக்கு அதிக டார்க் திறனை வழங்கும் எஞ்சினும் அவசியம்.

எப்படி பால் போட்டாலும், சிக்ஸர் அடிக்குதேய்யா இந்த ஹெக்ஸா... !!

அது ஆன்ரோடு டிரைவ் ஆகட்டும் அல்லது ஆஃப்ரோடு சாகசங்களாகட்டும், எப்படி கோல் போட்டாலும் அடிப்பதற்கான பல சிறப்பம்சங்களை டாடா ஹெக்ஸா கார் பெற்றிருக்கிறது. இறுதியில் இது ஒரு 7 சீட்டர் மாடல் என்பதும் கூடுதல் விசேஷம். ரூ.11.55 லட்சம் விலையில் இருந்து இந்த கார் கிடைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, October 19, 2017, 16:06 [IST]
English summary
Tata Hexa SUV crossing a river With No Hurdles.
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+