எலக்ட்ரிக் பேருந்துகளை வாங்கி குவிக்கும் குஜராத் அரசு!! அகமதாபாத்தில் 60 இ-பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்தன!

எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு வேகமாக அதிகரித்துவரும் நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அகமதாபாத்தின் போக்குவரத்து துறைக்கு 60 எலக்ட்ரிக் பேருந்துகளை டெலிவிரி செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

எலக்ட்ரிக் பேருந்துகளை வாங்கி குவிக்கும் குஜராத் அரசு!! அகமதாபாத்தில் 60 இ-பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்தன!

20, 30 வருடங்களுக்கு முன்னர் பொது போக்குவரத்து பேருந்துகள் மின்சாரத்தில் இயங்கக்கூடியவைகளாக இருக்கும் என்று யாரெனும் கூறியிருந்தால், நம்மில் பெரும்பாலானோர் நம்பியிருக்க மாட்டோம். ஆனால் தற்போது அது மெல்ல மெல்ல நிஜமாகி கொண்டிருக்கிறது.

எலக்ட்ரிக் பேருந்துகளை வாங்கி குவிக்கும் குஜராத் அரசு!! அகமதாபாத்தில் 60 இ-பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்தன!

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை நம் நாட்டில் வேகமாக அதிகரித்து வந்தாலும், இன்னமும் சிலர் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதிலும், வாங்குவதிலும் தயக்கம் காட்டுகின்றனர். அத்தகையவர்களின் இத்தகைய மனநிலையை போக்க வேண்டுமென்றால், பெரும்பாலான மக்கள் பயன்படுத்தக்கூடிய அரசு போக்குவரத்து துறைகளில் எலக்ட்ரிக் வாகனங்கள் பெருக வேண்டியது கட்டாயமாகிறது.

எலக்ட்ரிக் பேருந்துகளை வாங்கி குவிக்கும் குஜராத் அரசு!! அகமதாபாத்தில் 60 இ-பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்தன!

இதனால் தான் நமது தமிழக அரசு உள்பட மாநில அரசாங்கங்கள் மொத்த பயன்பாட்டில் குறிப்பிட்ட சதவீதத்தில் எலக்ட்ரிக் பேருந்துகளை வாங்கி வருகின்றன. இந்த வகையில் தற்போது குஜராத் மாநில அரசு அகமதாபாத் நகர போக்குவரத்து கழகத்திற்காக 60 எலக்ட்ரிக் பேருந்துகளை டாடா மோட்டார்ஸிடம் இருந்து வாங்கியுள்ளது.

எலக்ட்ரிக் பேருந்துகளை வாங்கி குவிக்கும் குஜராத் அரசு!! அகமதாபாத்தில் 60 இ-பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்தன!

இது தொடர்பாக நடைபெற்ற விழாவில் இந்த எலக்ட்ரிக் பேருந்துகளை குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். டாடா மோட்டார்ஸின் இந்த எலக்ட்ரிக் பேருந்துகளின் மாடல் பெயர் அல்ட்ரா அர்பன் 9/9 ஏசி ஆகும். இவை அகமதாபாத்தின் விரைவு பேருந்து போக்குவரத்து அமைப்பின் கீழ் செயல்பட உள்ளன.

எலக்ட்ரிக் பேருந்துகளை வாங்கி குவிக்கும் குஜராத் அரசு!! அகமதாபாத்தில் 60 இ-பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்தன!

இந்த எலக்ட்ரிக் பேருந்துகள் ஒவ்வொன்றிலும் தலா 24 பயணிகள் அமர்ந்து பயணம் செய்யலாம். இந்த மின்சார பேருந்துகளை சார்ஜ் செய்ய இவி சார்ஜிங் கட்டமைப்புகளை அகமதாபாத் நகரத்தில் உருவாக்க உள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. AJL எனப்படும் அகமதாபாத் நகராட்சியின்கீழ் செயல்படும் துணை அமைப்புடன் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஓர் ஒப்பந்தத்தை செய்து கொண்டது.

எலக்ட்ரிக் பேருந்துகளை வாங்கி குவிக்கும் குஜராத் அரசு!! அகமதாபாத்தில் 60 இ-பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்தன!

இதன்படி சுமார் 300 எலக்ட்ரிக் பேருந்துகளை தயாரித்து டாடா நிறுவனம் அகமதாபாத் நகராட்சிக்கு வழங்குவதாக முடிவு எட்டப்பட்டது. அதன் ஒரு பகுதியாகவே தற்போது இந்த 60 எலக்ட்ரிக் பேருந்துகள் குஜராத் முதல்வரால் கொடியசைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் இதேபோன்று தொடர்ச்சியாக எலக்ட்ரிக் பேருந்துகள் குஜராத்தில் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.

எலக்ட்ரிக் பேருந்துகளை வாங்கி குவிக்கும் குஜராத் அரசு!! அகமதாபாத்தில் 60 இ-பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்தன!

தற்போது 60 எலக்ட்ரிக் பேருந்துகள் அகமதாபாத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டிருப்பது குறித்து டாடா மோட்டார்ஸின் பேருந்துகள் தயாரிப்பு பிரிவின் துணை தலைவர் ரோகித் ஸ்ரீவஸ்தாவா கூறுகையில், பொது போக்குவரத்தை நவீன மயமாக்குதல் மற்றும் எதிர்கால வாகனங்களை வடிவமைப்பதில் நிலைத்தன்மையை ஒருங்கிணைப்பதில் நிலையான அர்ப்பணிப்புடன், டாடா மோட்டார்ஸ் நாட்டில் மின்சார இயக்கத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

எலக்ட்ரிக் பேருந்துகளை வாங்கி குவிக்கும் குஜராத் அரசு!! அகமதாபாத்தில் 60 இ-பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்தன!

இந்த பேருந்துகளின் டெலிவிரி, AJL உடனான எங்களின் பயனுள்ள தொடர்பை மேலும் உறுதிப்படுத்தி, அகமதாபாத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வெகுஜன நடமாட்டத்தை வளர்க்கும் என்றார். டாடா மோட்டார்ஸின் இந்த முழு எலக்ட்ரிக் பேருந்துகள் அதிகப்பட்சமாக 328 பிஎச்பி மற்றும் 3000 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலில் இயங்கக்கூடியவைகளாக உள்ளன.

எலக்ட்ரிக் பேருந்துகளை வாங்கி குவிக்கும் குஜராத் அரசு!! அகமதாபாத்தில் 60 இ-பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்தன!

ஃபேம் 2 முன்முயற்சியின் கீழ் வழங்கப்படும் இந்த பூஜ்ஜிய-உமிழ்வு பேருந்துகள் மேம்படுத்தப்பட்ட வசதி, பிரகாசமான உட்புற விளக்குகள், பாதுகாப்பு மற்றும் இரைச்சல் இல்லாத செயல்பாடுகளுடன் சுத்தமான ஆற்றலை வழங்குகின்றன. டாடா அல்ட்ரா அர்பன் 9/9 ஏசி மின்சார பேருந்துகள், மறு உருவாக்கம் செய்யும் பிரேக்கிங் அமைப்பு, புதிய தலைமுறை டெலிமாடிக்ஸ் மற்றும் உயர்-பாதுகாப்பு நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு ஆகியவற்றை கொண்டுள்ளது.

எலக்ட்ரிக் பேருந்துகளை வாங்கி குவிக்கும் குஜராத் அரசு!! அகமதாபாத்தில் 60 இ-பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்தன!

இந்த நிலையில் சமீபத்தில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு 15 ஹைட்ரஜன் எரிபொருள் செல் பேருந்துகளை வழங்குவதற்கான ஆர்டரையும் பெற்றுள்ளதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. தற்போதுவரையில், இந்த முன்னணி இந்திய ஆட்டோமொபைல் நிறுவனம் நாட்டில் பல நகரங்களில் 600க்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் பேருந்துகளை வழங்கியுள்ளது.

எலக்ட்ரிக் பேருந்துகளை வாங்கி குவிக்கும் குஜராத் அரசு!! அகமதாபாத்தில் 60 இ-பேருந்துகள் பயன்பாட்டிற்கு வந்தன!

இந்த எலக்ட்ரிக் பேருந்துகள் ஏற்கனவே 20 மில்லியன் கிமீ-க்கு மேல் ஓடிவிட்டதாக டாடா நிறுவனம் கூறுகிறது. எலக்ட்ரிக் பேருந்துகள் மட்டுமின்றி, நெக்ஸான் இவி, டிகோர் இவி என எலக்ட்ரிக் கார்களையும் டாடா நிறுவனம் சந்தையில் விற்பனை செய்து வருவது உங்களுக்கே நன்றாக தெரியும். இந்த எலக்ட்ரிக் கார்களின் விற்பனையில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 1,751 யூனிட்களை எட்டி டாடா நிறுவனம் ஆச்சிரியப்படுத்தி இருந்தது.

Most Read Articles

English summary
Tata Motors Delivers 60 Electric Buses To Ahmedabad BRTS
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X